(Reading time: 14 - 27 minutes)

"ஹதி..என்ன பண்ணறே..", என்று பதறிய ராமூர்த்தியைப் பார்த்த மஹதி..

"அப்பா நீங்க சும்மா இருங்கோ.. இப்போ இந்த நகை என்னுது.. இதை நான் என்ன பண்ணறேன்னு நீங்க கேட்காதேள்.. அக்கா ரெண்டு பேரும் வருத்தப் படறச்சே நான் எப்படி இதை போட்டுண்டு சந்தோஷமா இருக்க முடியும்.. அதான்.. விஜய்யை சமாளிக்க வேண்டியது என் பொறுப்பு.. நீங்க மேல் கொண்டு ஆக வேண்டியதை பாருங்கோ", என்று முடித்தவள்,

"அக்கா நீங்க ரெண்டு பேரும் எடுத்துக்கோங்கோ.. உங்களுக்கு இல்லாதது எனக்கு தேவை இல்லை..என்று மீண்டும் அவர்களை ஊக்கினாள்.

இதற்குத்தானே காத்திருந்தார்கள் இருவரும்..வராத கண்ணீரை துடைத்து கொண்டு..

"எங்களுக்கு தெரியும் எங்க தங்கை எங்களை விட்டு கொடுக்க மாட்டான்னு..", என்று சொல்லிவிட்டு வெட்கமில்லாமல் நகைகளை ஆராயத் தொடங்கினார்கள். இருவரும்..

இயலாமையுடன் கையாலாகதத்தனமும் சேர்ந்து கொள்ள ராமமூர்த்தியும் சாரதாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்களாலேயே ஆறுதல் கூறிக் கொண்டனர்.

"ஏய் நீ இதை எடுத்துக்கோடி..பச்சை செட் எனக்கு பிடித்திருக்கு", என்று கல்யாணி சிகப்பு கல் மாங்காய் மாலை செட்டை அக்காவுக்கு எடுத்துக் கொடுத்தாள். மொத்தம் இருவருமாக கிட்டத்தட்ட பதினைந்து பவுனுக்கு எடுத்து கொண்டனர்.

னைத்தையும் பார்த்து தலையிலடித்து கொண்ட வசந்த்," இந்த மாதிரி எங்கேயும் பார்த்ததில்லை..பெத்திருக்கீங்க பாருங்க", என்று பெற்றோரை முறைத்தபடி வாசலுக்கு சென்று அஜயுடனும் பைரவியுடனும் சேர்ந்து கொண்டான்.

"வசந்த்..உங்க அக்காக்கள் எப்பவும் இப்படித்தானா?..மஹதியும் இப்படித்தானா?..", என்று ஆர்வத்துடன் அஜய் கேட்டான்.

"அஜய் திஸ் இஸ் பேட்.. காஸிப் பண்ணாதே. நீ ஒரு டாக்டர்னு மறந்துடாதே..", என்று கடிந்து கொண்டாள் பைரவி.

"ஹெய்.. இதிலென்ன காஸிப் இருக்கு..நான் இப்படி யாரையும் இதுவரை பார்த்ததில்லை.. அதான் கேக்கறேன்..மஹதியும் மெடிரிலியஸ்டிக்கான்னு தெரிஞ்சிக்க ஆசைப் படறேன்..எனக்கு என் ஃப்ரெண்டு எப்படின்னு தெரிஞ்சிக்கணும்னு இருக்கு", என்றவனை பார்த்த வசந்த்,

"இந்த வீட்டிலே வித்யாசமானவா என்னோட மூத்த அக்கா ரெண்டு பேர் தான்.. மஹதி ரொம்ப நல்லவ.. எல்லாருக்கும் ஒத்தாசை பண்ணனும்.. தன்னாலே எந்த பிரச்சனையும் யாருக்கும் வரக்கூடதுன்னு இருப்பா.. பாவம்.. என்ன பண்ணறது.. எங்கம்மாவாலயும் பெரியவா ரெண்டு பேரை அடக்க முடியாது.... பெரிய அத்திம்பேர் ஒரு கன்னிங்க் பர்சன்.. ரெண்டாவது அத்திம்பேர் ரொம்ப நல்லவர்.. ஆனா அக்காவோ அவருக்கும் சேர்த்து வச்சு படுத்துவா.. மூணாவது எப்படியோ என்று அங்கலாய்த்தான் விஜய்யை மனதில் இருத்தி..

"மூணாவதும் ரொம்ப நல்லவன் தான்.. என்ன கால நேரம் சரியா வரணும் இல்லை.. மஹதிக்கு மாத்திரம் நிச்சயம் ஆகியிருக்கலைன்னா.. நானே இத்தனை நேரத்துக்கு அவளை தூக்கிண்டு போய் தாலி கட்டியிருப்பேன்.. அவ்வளவு ஆத்திரம் வந்தது எனக்கு உங்க அக்காக்களை பார்த்தா..", என்று கொதித்தான் அஜய்.

"ஏய் நீ கூட எமொஷனலா பேசறே.. இட் இஸ் சோ அன்லைக் யு..என்ன ஆச்சு.. வந்தமா நம்ம வேலையை முடிச்சமான்னு இருக்கனும்னு எனக்கு அட்வைஸ் பண்ணுவே..  இப்போ டிபிகல் இந்திய ஹீரோ மாதிரி ஆக்ட் பண்ணறே?", என்று வியந்த பைரவியை பார்த்த அஜய்..

"அது கிடக்கட்டும்.. என்னை சொல்லறயே. நீ வந்த வேலை என்னாச்சு.. எவ்ளோவோ அர்ஜெண்டுன்னு தெரிஞ்சும் இப்படி கிணத்தில் போட்ட கல்லு மாதிரி இருக்கே.?, என்று கேட்டான் அஜய்.

"நானும் என்னோட கோலை நெருங்கிட்டேன்.. மேட்டர் ஆஃப் ஃபியு டேஸ் தான்.. ஜஸ்ட் ஒரே ஒரு கன்ஃபர்மேஷன் வேணும் அவ்ளோதான்.. சரி சரி வா.. உள்ளே பஞ்சாயத்து முடிஞ்சுடுத்துன்னு தோணறது போலாம்", என்று அஜய்யின் கையை பிடித்து இழுத்து கொண்டு சென்றாள் பைரவி..

அவர்களின் இணைந்த கைகளை பார்த்தபடி பின் தொடர்ந்த வசந்துக்கு நிச்சயம் இவர்கள் நல்ல ஜோடி..இவர்கள் வாழ்விலும் இணைந்தால்? என்று தோன்றியது..

இணைவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடரும்

Episode 17

Episode 19

{kunena_discuss:909}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.