(Reading time: 18 - 35 minutes)

19. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி

ந்த கல்யாண மண்டபம் காலையிலிருந்தே பரபரப்பாக இருந்தது.

அன்று காலை ஐந்து மணிக்கே பிரம்ம முஹீர்த்தம் என்பதால் சாரதா-ராமமூர்த்தியின் குடும்பத்தவர் அனைவரும் விடியல் காலையிலேயே தயாராகி அந்த திருமண மண்டபத்தை அடைந்தனர். 

மணப் பெண்ணுக்கு முறைப்படி ஆரத்தி எடுத்து சத்திரத்துக்குள் நுழைந்தவர்கள், பொறுப்பாக திருமணத்திற்குரிய அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்து விட்டு தங்களை சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டனர்.

vasantha bairavi

பைரவியும், அஜய்யும் கூட காலையிலேயே மஹதியின் குடும்பத்தவருடனேயே மண்டபத்துக்கு வந்து விட்டனர்.

காலை எட்டு மணியளவில் மாப்பிள்ளையின் குடும்பத்தவர் வர, உரிய மாலை, மரியாதையுடன் அவர்களை அழைத்து வந்தனர்.

காலை டிபன், காபி முடிய மஹதி சற்று நேரம் ஒய்வெடுக்க தனக்குரிய மணமகள் அறைக்குள் சென்று விட்டாள்.

மணமகனுமே தன்னுடைய சக தோழர்களுடன் அரட்டை அடிக்க சென்று விட, மெல்ல மணமகனின் தாயார் அமிர்தா, சாரதா இருந்த அறையை நோக்கி வந்தார்.

அங்கே பைரவியுடன் பேசிக் கொண்டே மாலை மூன்று மணியளவில் நடக்கவிருக்கும் நிச்சயதார்த்ததிற்கு எடுத்து வைக்க வேண்டிய வெள்ளி சந்தன கிண்ணம், பஞ்ச பாத்திரங்கள், வெள்ளி தட்டு, மற்றும் மாப்பிள்ளைக்கு கொடுக்க வேண்டிய ரிசப்ஷன் டிரஸ், மற்றும் நிச்சய மோதிரம் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

"ஏம்மா சாரதா.. நாங்க உனக்கு முன்னாடியே சொன்னோமே.. நல்ல சத்தரமா பார்த்திருக்கலாமே?.. நீங்க என்னவோ இந்த சத்திரம், நன்னா இருக்கும் என்று சொன்னேள்.. எங்காத்துல மனுஷா ஜாஸ்தி.. இப்ப என்னடான்னா எங்களுக்கு மூணே ரூம் கொடுத்தா எப்படி.. பையனுக்கு ஒரு ரூம் கொடுத்தாச்சு.. நாங்க ஒரு ரூம் எடுத்துண்டாலும், மத்தவா எல்லாரையும் எப்படி ஒரே ரூம்ல இருக்கச் சொல்லரது.. ரூம் ஏதாவது ஹோட்டல்ல புக் பண்ணியிருக்கேளா.. அதுக்குதான் நாங்களே மண்டபம் பார்க்கிறோம்ன்னு சொன்னோம்"

"இல்லை மாமி, வேறே எங்கேயும் ரூம் எல்லாம் புக் பண்ணல.. வேண்டுமானால் எங்களுக்குன்னு இருக்கறதுல ஒரு ரூமை தரோம்.. இந்த சத்தரம் ஆத்துக்கு பக்கத்திலேயே இருக்கு.. கொஞ்சம் பேர் ராத்திரிக்கு ஆத்துக்கு போயிடுவா"  என்று மெல்ல இழுத்தாள்.

"அது சரி ஆமாம்..சாரதா, என்ன பண்ணிண்டு இருக்கே?.. ஓ சாயங்காலத்துக்கு வேண்டியதை எடுத்து வைக்கிறீயா.. ஆமாம் இது என்ன வெள்ளி தட்டு இத்தனை சின்னதா இருக்கு.. எங்காத்து வெற்றிலை, பாக்கு தட்டு கூட இதைவிட பெரிசா இருக்குமே.. ஓ.. விஜய்க்கு சாப்பிடறதுக்கு வேறே வெள்ளி பிளேட் வாங்கியாச்சோல்யோ?.. இந்த சந்தன கிண்ணி கூட ரொம்ப சின்னதா தான் இருக்கு.. இன்னும் கொஞ்சம் பெரிசா இருந்திருக்கலாம்.. எனக்கெல்லாம் எங்க அம்மாவாத்துல, நன்னா பெரிசா குங்கும சிமிழ், சந்தன பேலா எல்லாம் வாங்கித் தந்தா.. என்ன பண்ணரது இந்த காலத்துல என்ன காசை கொடுத்தாலும் நல்லதா எங்கே கிடைகிறது?" 

நீங்க வெள்ளி பாத்திரமெல்லாம் முன்னாடியே கொண்டு வந்து எங்காத்துல காட்டுவீங்கன்னு நினைச்சேன்..  அது சரி, இதான் மாப்பிள்ளைக்கு போடற செயினா.. ரொம்ப மெலிசா இருக்கே?"

ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தார் சாரதா.

"நாலு பவுன் மாமி.. அதோட இந்த பிரேஸ்லைட் கூட சாரதா மாமி செஞ்சு வைச்சிருக்கா.. இதான் சாயங்காலம், மாப்பிள்ளைக்கு கொடுக்க வேண்டிய நிச்சயதார்த்த டிரஸ், இந்த கோட் சூட் ரிசப்ஷனுக்கு".. என்று எல்லாவற்றையும் எடுத்துக் காண்பித்தாள் பைரவி.

"நீ அமெரிக்காவிலிருந்து வந்த பொண்ணு தானே..  நீயும் டாக்டராமே.. நாங்களும் எங்க பையனுக்கு டாக்டர் பொண்ணாதான் தேடிண்டு இருந்தோம்.. ஆனா இந்த பையன் அவன் கூட வேலை பார்க்கிற மஹதி பெண்ணை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஒத்தை கால்ல நின்னுட்டான்.. இப்போ பாரு, எல்லாத்துக்கும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டியதா இருக்கு.. யார் யாருக்கு என்ன ப்ராப்தமோ அதானே நடக்கும்..  உங்காத்துல உனக்கு வரன் பார்க்கறாளா.. என் அண்ணன் பையன் ஒருத்தன் இருக்கான்.. அதான் கேட்கிறேன்"

"இல்லை மாமி,  நான் ஆராய்ச்சி பண்ணரேன்.. இப்ப எனக்கு கல்யாணத்திலே இன்ட்ரெஸ்ட் இல்லை"  என்றாள் பைரவி.

"ஓ...சரி ,சாரதா, கார் என்ன ஆச்சு.. டெலிவரி எடுத்தாச்சா"

"சாயங்காலம் நிச்சயதார்த்தக்குள் வந்து விடும் மாமி"  என்றாள் பைரவி..

"அது சரி, உன் பெரிய பொண்ணுங்க இரண்டு பேரையும் எங்கே காணலே?..  என்ற அமிர்தாவிற்கு,

"அவா பசங்களோட எதோ பியூட்டி பார்லருக்கு போயிருக்கா.. வர நேரம் தான்"  என்றாள் சாரதா..

அந்த சமயத்தில, "அம்மா சமையல் மாமா ஏதோ கேட்க வெளியே நிற்கிறார்"  என்றபடி வசந்த் தன் தாயை அழைக்க, அப்பாடி கொஞ்சம் நேரத்துக்கு இந்த மாமிகிட்டே இருந்து தப்பிக்கலாம் என்று நினைத்த சாரதா, 'என் பொண்ணு இவாத்துல போய் நல்லபடியா வாழனுமே.. ஈஸ்வரா நீதான்ப்பா அவளை ரட்ஷிக்கனும்'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.