(Reading time: 14 - 27 minutes)

04. காதல் பின்னது உலகு - மனோஹரி

ன்னது இவன் தான் மாப்பிள்ளையா? ஒரு நொடி தனக்குள்  என்ன நடக்கின்றது என்றே புரியவில்லை நிலவினிக்கு. அவன் சொன்ன விதத்தில் விஷயம் அனைவரின் காதிற்கும் கேட்டிருக்காது எனினும் அடுத்து இருப்பவர்களுக்காவது கேட்கத்தானே செய்யும்….

அதோடு அனைவருக்குமே அவன் அவளிடம் ஏதோ சொல்கிறான் என புரியத்தானே செய்யும்…..யார் இதை எப்படி எடுத்துக் கொள்வாரோ?

 நியதியின் படி நிலவினிக்கு இது தர்மசங்கடமான நிலையாய் இருந்திருக்க வேண்டும். அவள் இயல்பில் இருந்திருந்தால் இதை உணர்ந்தும் இருப்பாளாய் இருக்கலாம்…

Kadhal pinathu ulagu

ஆனால் அப்படி இயல் நிலை பிறழாமல் உணர அவளுக்கு ஒன்றும் நடந்து கொண்டிருக்கும் எதுவும் இயல்பு இல்லையே….

அவள் முகத்தைப் பார்த்து என்ன கண்டானோ யவ்வன்.

‘என்ன என்றான்?’ புருவம் மட்டும் உயர்த்தி விழி சைகையால்….

இதற்குள் “யவி காஃபிய குடிச்சுட்டு கப்பை கீழ வைக்காத…வினிட்டயே குடுத்துடு…..” இவள் இதற்கு முன் எங்கேயோ கேட்டிருந்த ஒரு வயதான பெண்மணியின் குரல் சொல்வது இவள் காதில் விழுகிறது.

அப்பொழுதுதான் தான் எதிரில் இருப்பவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள் நிலவினி. அதோடு சூழலையுமே….

வேகமாக இடத்தைவிட்டு நகரலாம் என்றால் அந்த பெண் குரலின் தொனி….ஏதோ அது தான் முறை என்பது போல்…. பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை  குடித்த காஃபி கப்பை கீழே வைக்க கூடாதுன்னு எதும் முறை இருக்கா என்ன?..… இப்பொழுது இவள் இங்கு நிற்க வேண்டுமா? நகர வேண்டுமா?

அவர் உன்ன நல்லா பார்க்கனும்னு அவங்க வீட்ல நினைக்கிறாங்க போல….அசையாம நில்லு…. அக்கா இயல்பாய் இவள் அருகில் நெருங்கி நிற்பது போல் நின்று இவள் காதில் மட்டும் விழும் படியாய் சொல்ல….

சட்டென ஒரு எண்ணம் அவளுள். இவன் இவட்ட பேசனும்னு சொன்னா அவன் வீட்லயும் இவ வீட்லயும் ஒத்துப்பாங்க போல….அவன் பேசியதற்கும் அடுத்து அந்த பெண் சொன்னதற்கு இவள் பெற்றோரோ அவன் பெற்றோரோ மறுப்பாய் எதுவும் சொல்லவில்லையே…. அந்த பெண் அவனது அம்மா என அறிந்திருந்தால் இன்னும் என்ன நினைத்திருப்பாளோ? இப்போதைக்கு இவளால் இவ்வளவுதான் நினைக்க முடிந்தது.

இவன் மூலமாய் தான் தனக்கு உதவி வரும் போலும் என முதலில் இந்த யவ்வனை  கண்டதும் தோன்றியதும் ஞாபகம் வருகிறது.

நிச்சயமாய் கட்டுப்பட்டி, ஈகோயிஸ்ட், சாவனிஸ்ட் எல்லாம் இவன் கிடையாது….. இவன் ஒரு  ஃப்ரெண்ட்லி பேர்சன்…. இவளுக்கு விருப்பம் இல்லை என்று சொன்னால் புரிந்து கொள்வான்……டீஸன்டாய் விலகியும் கொள்வான்…..அதை செய்ய தேவையான தைரியமும் உள்ளவன் தான்…… அவனை அப்படியாய் குறித்தாள் மனதில்.

ஆனால் இவன் இவளிடம் தனியாக பேச வர வேண்டுமே? அவனாகத்தானே இவளிடம் பேச வேண்டும் என கேட்க வேண்டும்…..

  நான் மாப்பிள்ளையிடம் தனியே பேசனும் என இவள் கேட்டால், அதை யார் எப்படி எடுத்து கொள்கிறார்களோ இல்லையோ இவளது லோக்ஸோ‌டொன்டா அத்தை நிச்சயமாய் இவள் பெற்றோரை நார் நாராய் கிழித்துவிடும் குறை சொல்லியே….

இப்பொழுது என்னிடம் தனியா பேசனும்னு கேளு என எதிரிலிருப்பவனிடம் எப்படி சொல்ல?

ஒரு நொடியில் இவள் மனம் இப்படி உலகையே சுற்றி ஓடிக் கொண்டிருக்க…… அவனோ “அம்மா  அவங்க ரெண்டுபேரையும்  உட்கார சொல்லி காஃபி கொடுக்க சொல்லுங்க குடிக்றதுக்கு…..அவங்க எதிர்ல காத்து நிக்க நான் மட்டும் குடிச்சுட்டு கொடுக்கனும்ன்றது நல்லா இல்லை….” யவ்வன் தான்.

இந்த அவனது பதில் இன்னுமாய் இவளுக்கு பிடிக்கிறதுதான்….. நிச்சயமாய் இவள் உணர்வுகளை மதிப்பான் என தோன்றுகிறதுதான் ஒரு புறம் ஆனாலும்…. நான் தான் மாப்பிள்ளை என அவன் கொடுத்திருந்த ஷாக் சற்று குறைந்து லோக்‌ஸோடொன்டா அத்தை வரை அங்கு இருப்பது இப்போது ஞாபகத்தில் வந்திருந்ததால், நிலவினிக்கு  சூழ்நிலை புரிய,

 அவன் சொன்னது போல் அவன் எதிரில் இவள் அமர்ந்து காஃபி குடிக்க, அவன் அவளையே பார்த்திருக்க, அதை மொத்த கூட்டமும் வேடிக்கை பார்ப்பது போல் ஒரு காட்சி மனக்கண்ணில் விரிய, மிரண்டு போய் எச்சில் விழுங்கினாள்.

இவள் மீது மட்டுமே பார்வை பதித்திருந்த அவனைப் பார்த்து அவசர அவசரமாக இல்லை வேண்டாம் என்றாள் விழிகளை மட்டும் அசைத்து. பயமும் கெஞ்சலும் அவள் முகத்தில்.

ஏன்? என்றான் அவனும் தன் கண்களால்.

கண்களை மட்டுமாய் சுற்றிலும் உருட்டிக் காண்பித்தாள் அவள். ‘சுத்திலும் எல்லோரும் பார்க்காங்க….’ என்ற செய்தி அதில்.

‘அதனாலென்ன?’ அவனும் அவன் கண்களால் கேட்டான்.

கெஞ்சியது இவள் விழியும் முகமும்…. ‘வேண்டாம் ப்ளீஸ்….’ என்றன அவை ஒலி இன்றி. அடுத்து அச்சத்தை காட்டியது அவள் மையிட்ட விழிகள். ‘பயமா இருக்குது’ என்பது பகிரப்பட்ட செய்தி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.