(Reading time: 14 - 27 minutes)

வாவ்….. போன தடவை பேசுறவரைக்கும் பெருச்சாளின்னு மாப்பிள்ளைக்கு பேர் சொல்லிகிட்டு இருந்தவளுக்கு இப்ப அவர் யவ்வனாமா? …..சந்தோஷமாக இருந்தது பவிஷ்யாவிற்கு…..ஆனாலும்…..அதை நேரடியாக சொன்னாள் இந்த நிலு என்ன டான்ஸ் ஆடுமோ….

“அந்த அடிபட்டு சாகப் போற  அர்ஜென்டிவென்டர பத்தி  நமக்கென்ன கவலை……அது உன்ட்ட பேச வருதுன்னுலாம் நீ கவலைப் படாதே… நீதான் ஃபெலிஸாச்சே….” இப்படி ஒரு மெசேஜை அனுப்பிவிட்டு …அந்த பெருச்சாளியப் பத்தி உனக்கென்ன கவலை நீ தான் பூனையாச்சேன்னு தன் மெசேஜ்க்கு விளக்கமாக அடுத்த மெசேஜ் டைப் செய்ய ஆரம்பித்தாள் பவிஷ்யா.

ஆனால் அடுத்த நொடி அவளுக்கு நிலவினியிடமிருந்து கால். இவள் இணைப்பை ஏற்கவும்

“என்ன பவி…. நீ பாட்டுக்கு சாகப் போறாங்க அது இதுன்னு சொல்லிட்ட…. எனக்கு திக்குன்னு ஆகிட்டு….முதல்ல கேன்சல் இட் இன் நேம் ஆஃப் ஜீசஸ்னு சொல்லு….”  தவிப்புடன் படபடத்தாள் நிலவினி.

சத்தியமாய் இப்படி ஒரு சரண்டர் மெசேஜை பவிஷ்யா எதிர்பார்த்திருக்கவில்லை. கொஞ்சம் முன்னாலதான் மாவாட்டுற கல்லை தூக்கி மாப்ளை மண்டைல போட இவள் வரலைனு இவட்ட கத்திகிட்டு இருந்தாள் அவள்.

வாய்விட்டு சிரிக்கலாம் போல் இருக்கிறது பவிஷ்யாவிற்கு….. ஆனாலும் அடுத்தவள் அழுவது போல் பேசிக் கொண்டிருக்க இவள் எப்படி சிரிக்க….? வந்த சிரிப்பை வாய் பொத்தி அடக்கினாள். நிலவினி விளையாட்டாய் பேசும் போது எதை வேண்டுமானாலும் பேசுவாள் செய்வாள்தான். ஆனால் அவள் உள் மனதில் மரணம் குறித்த ஒரு அதீத தவிப்பு உண்டு…அது இப்படித்தான் சீரியஸாக பேசும் போது வெளிப்படும்.

அதற்குள் “பவி சொல்ல சொல்றேன்ல…. ” நிலவினிதான்.

“கேன்சல் இட் இன் நேம் ஆஃப் ஜீசஸ்…..கடவுளே யவ்வன் அண்ணா 100 வயசு வரைக்கும் குறையில்லாம வாழனும்… ப்ளெஸ் பண்ணிட்டேன் போதுமா?“

“ம்…”

“சரி இப்ப சொல்லு அவங்க எப்படி? பிடிச்சிருக்கா? “

“ம்…பிடிச்சிருக்கு…..ரொம்ப நல்ல டைப்… .ஃப்ரெண்ட்லி… ஹெல்ப்ஃபுல்… போல்ட்….ஷார்ப்…. எதையும் புரிஞ்சு தன்மையா நடந்துகிறாங்க…. அதனால எப்படியும் நான் கேட்டா இந்த கல்யாணத்தை நிறுத்திடுவாங்க….….”

“நிலூஊஊஊ” பல்லைக் கடித்தாள் பவிஷ்யா…..

“பின்ன என்ன நினச்சே…..நான் கல்யாணம் செய்வ்வேன்னா…..? உனக்கு மேல் மாடி காலின்னு தெரியும்தான்…..ஆனா அது இவ்ளவு காலின்னு இப்பதான் தெரியுது….”

நிலவினி சொல்லிக் கொண்டு இருக்க…. “நிலு மாப்ள உன்ட்ட பேசனும்னு சொல்றார்…… “ என்றபடி அறைக்குள் உள்ளே வந்தது இவளது அம்மா சுசிலா.

“அப்றம் பார்க்கலாம் பவி” நிலவினி இணைப்பை துண்டிக்க பவிஷ்யா தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டாள்.

“பயமா இருந்தா சொல்லு….அக்காவ வேணா கூட இருக்க சொல்றேன்…..” சுசிலா அம்மா நிலவினியிடம் கேட்டார்.

‘ஐயையோ இது முதலுக்கே மோசமாகிடும் போலயே….’ பதறிய நிலவினி… “இல்லைமா….. அவங்கட்ட என்ன பயம்? .ரொம்ப ஃப்ரெண்ட்லியாதான இருக்காங்க…? அதோட எந்த ஈகோவும் இல்ல…. “ என எதையோ நினைத்து அவளை அறியாமலே சேம் சைட் கோல் போட்டு வைத்தாள்.

இதுவரையும் அப்பாவுக்கு பயந்து தான் பெண் தலையாட்டிக் கொண்டிருக்கிறாள் என உணர்ந்துதான் இருந்தார் சுசிலா. ஆனால் திருமணத்திற்கு பின் மாப்பிள்ளையை பிடித்துவிடும் என அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு. ஆனாலும் தாயாய் தவிப்பு இருக்கும் தானே….

அதில் இப்போதைய இந்த நிலவினியின் ஸ்டேட்மென்ட்டின் அர்த்தம் அவருக்குள் இருந்த அத்தனை குழப்பத்தையும் மொத்தமாய் தீர்த்து வைத்துவிட்டது என்பது மகளுக்குத் தான் புரியவில்லை.

டுத்து இவளை இவர்கள் வீட்டு தோட்டத்திற்கு கூட்டிப் போய் விட்டது அவளது அக்கா. அங்கு நின்றிருந்தது யவ்வன். “ஆல் த பெஸ்ட் டி” அக்கா விலகிக் கொண்டாள்.

“நின்னுட்டு இருக்கீங்க…உட்காரலையா…?” நாற்காலிக்காக சுற்று முற்றும் துளாவின அவள் கண்கள். திருமணம் என்ற எண்ணம் இல்லை என்பதாலோ என்னவோ அவனிடம் வெறும் நட்பாய் இயல்பாய் பேச முடிந்தது அவளுக்கு.

“அங்க சேர்ஸ் போட்றுக்காங்க……பட் வாக் பண்றது நல்லாருக்கில்லையா அதான்…” இவளைப் போலவே வெகு இயல்பாக தொடங்கினான் அவன்.

“உங்கட்ட ரொம்ப முக்கியமான விஷயம் பேசனும் யவ்வன்….அதான் …..புரிஞ்சு இவ்ளவு தூரம் என் அப்பாட்டல்லாம் கேட்டு,  ஹெல்ப் பண்ண வந்ததுக்கு தேங்க்ஸ்…” இப்பொழுது நேரடியாக விஷயத்துக்கு  வந்தாள்.

அவன் முக பாவத்தில் மாற்றம். இவள் என்ன சொல்லப் போகிறாள் என புரிந்து விட்டது போலும் அவனுக்கு.

“எனக்கு இந்த மேரேஜல சுத்தமா இஷ்டம் இல்லை…..” இவள் தலை அதுவாக தாழ்ந்து போனது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.