(Reading time: 14 - 27 minutes)

சின்ன சிரிப்பு அவன் இதழில்… ‘சரி போ’ என விழியால் விடை கொடுத்தவன். இவள் கொடுத்த காஃபியை ருசிக்க தொடங்கினான்.

எல்லாம் இரண்டு நொடிக்குள் நடந்து விட இந்த ஜாடை நாடகம் இவர்களைத் தவிர பக்கத்திலிருந்த அக்காவிற்கு மட்டுமே புரிய….

“நிலு… நீ செம லக்கி….ஆனா சைட் அடிக்றதை அப்புறமா கன்டின்யூ செய்யலாம்….இப்ப கிளம்ப சொல்றார்ல…. வா போகலாம்” என்றாள் இவள் காதுக்குள்.

அப்பொழுதுதான் தான் அவனிடம் பார்வையால் பேசிக் கொண்டிருப்பதே உறைக்கிறது நிலவினிக்கு…..அப்படின்னா உன்ட்ட தனியா பேசனும்னு கேளுங்களேன்னு எப்படியாவது சொல்லிட முடியும் தானே….

அக்கா இவள் நகர துவங்குவாள் என எதிர்பார்க்க…..அக்காவின் எதிர்பார்ப்பு இவளுக்கும் புரிய….அவசர அவசரமாக அவனிடம் எப்படி கம்யூனிகேட் செய்ய என பரிதாபமாக பார்த்தாள் நிலவினி.  இவள் பார்வை அவனுக்கும் புரிகிறது தானே…..அவனிடம் அவள் ஏதோ சொல்ல நினைக்கிறாள் என…..

என்ன என்றான்…பிறர் கவனம் கவரா வண்ணம் கண்களால். இரு பக்கமுமாய் கண்களை மட்டும் ஓட்டிப் பார்த்தாள். யாரெல்லாம் இவங்களைப் பார்க்காங்க…..? இவள் முகமெங்கும் டென்ஷன்.

இவளைப் புரிந்தவனாய் தான் குடித்துக் கொண்டிருந்த காஃபி கப்பை நீட்டி இவள் கையிலிருந்த ட்ரேயில் வைப்பது போல் உட்கார்ந்திருந்த நிலையில் தன் முகத்தை இன்னுமாய்  முன்னோக்கி  கொண்டு வந்தவன், அந்த கப்பை ட்ரேயில் வாங்கவென குனிந்த இவள் முகத்திற்கு நேராய்   “என்ட்ட தனியா பேசனுமா? “ என்றான் ஒலி இன்றி இதழசைத்து.

கண்களை அழுத்தமாய் சற்றே அதிக நேரமாய் மூடி நிதானமாய் இமை பிரித்து ஆம் என்ற பதிலை அவன் விழிகளுக்கு கடத்தினாள் இவள். 

“நான் பார்த்துகிறேன்…நீ நிம்மதியா போ…” என்றன அவன் விழிகள் காஃபி கப்புடன் நிமிர்ந்துவிட்ட இவள் முகம் பார்த்து.

அதுவரை தனியாய் தன்னை மீறிய இந்த சூழலில் மாட்டிக் கொண்டது போல் உணர்ந்த நிலவினிக்கு தனக்கு துணை கிடைத்து விட்டதாய் ஒரு உணர்வு.

இனி ப்ரச்சனை இல்லை….

பெரும் நிம்மதியோடும், சிறு புன்னகையோடும் உள்ளோடும் துள்ளலுமாய் விலகிச் சென்றாள் நிலவினி.

டுத்து இவளை அந்த வரவேற்பறைக்கு அடுத்திருந்த அறைக்கு அழைத்துப் போனாள் இவளது அக்கா. இவள் கையிலிருந்த ட்ரே வாங்கிக் கொள்ளப் பட….கையில் வைத்திருந்த மொபைலை அவசரமாக குடைய தொடங்கினாள் நிலவினி.

இல்லைனா அக்கா இப்ப என்னெல்லாம் ஓட்டுவாளோ?

“நிலு மாப்ள செம ஸ்மார்ட்…உங்க அத்தானும் இப்படித்தான்…” என அக்கா ஏதோ சொல்ல தொடங்கவும் அம்மா உள்ளே வந்து அக்காவை ஏதோ சொல்லி கூட்டிப் போகவும் சரியாக இருந்தது.

அம்மா இவளை ஏதும் கேட்டுவிடக் கூடாதே, ஆக அம்மா முகம் கூட பார்க்காமல், முழு கவனமாய் பவிஷ்யாவின் மெசேஜ்க்கு ரிப்ளை டைப் செய்தாள்.

“இது கூட தெரியாம நீ என்ன டாக்டரான….? லோக்‌ஸோடொன்டா னா யானை….மாப்ளை வீட்டுக்காரங்களுக்குனு ஸ்பெஷலா பாதிக்கு பாதி சீயக்கா பொடி சோப் பவ்டர்லாம் கலந்த ஒரு காஃபி  ரெடி பண்ணி வச்சிருந்தேன்….லாஸ்ட் மினிட்ல ப்ளஅன மாத்திட்டேன்….  இப்போ அது வேஸ்டா போய்டுமே….சோ அந்த ப்ளஅன மாத்த காரணமான இந்த லோக்‌ஸோடொன்டாவுக்கு ஒரு சொம்பு காபி அதுல இருந்து கண்டிப்பா உண்டு…….யூ நோ என் எலிஃபெண்டு அத்தைக்கு  ஓவர் வெயிட் ப்ராப்ளத்தை குறைக்க கொஞ்சமாவது இது யூஸ் ஆகும்…..”

அடுத்த நொடி பவிஷ்யாவிடம் இருந்து மெசேஜ்…..”ஹேய் நிலு……அப்படியே அந்த புபலஸ் ஆர்னிக்கும் அர்த்தம் சொல்லிடு…..அதுக்கு என்ன பனிஷ்மென்ட்னும் சேர்த்தே சொல்லிடு… எப்படியும் ஃபிக்ஸ்‌ செய்த பனிஷ்மென்டை நீ மாத்த மாட்ட… “

“அடப்பாவி க்ளோஸ் ஃப்ரென்ட்டா நீ….? என்னடா நம்ம நிலுவ பொண்ணு பார்க்க வந்திருக்காங்களே….அவ போய் இப்பதான் மாப்ளைய பார்த்துட்டு வந்திருக்காளே…என்ன ஏதுன்னு எதாவது கேட்காம…… எருமை மாடை பத்தி கேட்டுகிட்டு இருக்க…..” அவளாக இந்த பெண் பார்க்கும் படலம் பற்றி கேட்பாள் என எதிர் பார்த்தாள் நிலவினி.

“ஓ புபலஸ் ஆர்னினா எருமை மாடா…..அப்போ செர்கோபித்திசீடியேன்னா? ” மாப்ளையைப் பற்றி கேட்டாள் கொதிப்பாள் என எண்ணித்தான் பவிஷ்யா அதை கேட்பதை தவிர்த்ததே…. இப்பொழுது இவளே தொடங்குகிறாளே….. என்ன வருகிறதென்று பார்ப்போம் என நினைத்தாள் அவள்.

“ஆமா புபலஸ் ஆர்னினா எருமை….  செர்கோபித்திசீடியேன்னா குரங்கு… ஈகுஸசினஸ்னா கழுதை காலம்காலமா இந்த மூனு விலங்கினத்தை தான உன்னைப் போல இருக்காங்கன்னு சொல்லி கௌரவ படுத்திட்டு இருக்கேன்… இப்ப வந்து டவ்ட் கேட்க வந்துட்ட….சரி இப்ப விஷயத்துக்கு வா…… என்ட்ட யவ்வன் பேசுறேன்னு சொல்லிருக்காங்க….”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.