(Reading time: 14 - 27 minutes)

சாரி….. உங்களுக்கு என்னைப் பிடிக்கலைனு எனக்கு கெஸ் பண்ண முடியலை….” அவன் குரல் இயல்பாய் இருக்க முயற்சித்தாலும்…..வருத்தம் இருக்கிறதுதானே அதில்.

யாரிடம் முகத்துக்கு நேராக உன்னை பிடிக்கவில்லை என்று சொன்னாலும் வலிக்கும் தானே…..

“ஐயோ அப்படில்லாம் இல்லை….” அவசரமாக மறுத்தாள்.

“உங்களை பிடிக்கலைனு எதுவுமே கிடையாது….இன்ஃபேக்ட் உங்க மேல எனக்கு ரொம்பவும் மரியாதை இருக்குது…அன்ட் ஐ ட்ரஸ்ட் யூ…..கண்டிப்பா ஈகோலாம் பார்க்க மாட்டீங்க……சிச்சுவேஷனை ப்ரப்பரா ஹேன்டில் பண்ணுவீங்கன்னு நம்பிக்கை…. அதான் உங்கட்ட ஓபனா ஹெல்ப் கேட்காலாம்னு நினச்சேன்…… எனக்கு பிடிக்காதது மேரேஜ்தான்…..  உங்க வீட்ல சொல்லி இந்த வெட்டிங் வேண்டாம்னு நிறுத்திடுங்க…. ப்ளீஸ்…..”

அவன் இவள் முகத்தையே பார்க்கிறான் என உணர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்றது  என் வகையில் முடியாத காரியம்…… ஆனா உங்களுக்கு பிடிக்கலைனா கட்டாய படுத்றது கண்டிப்பா தப்பு….. சோ உங்களுக்கு பிடிக்கலைனு உங்க வீட்ல சொல்லிடுறேன்”

“ஐயோ ….” அலறினாள் அவள். “எங்கப்பா தாங்க மாட்டாங்க”

“உன் அப்பாக்கு எதுவும் ஹெல்த்…”  அவன் ஆரம்பிக்கவுமே அதன் அர்த்தம் புரிய

“ஐயோ அப்படில்லாம் எதுவும் இல்லை…..ஆனா அவங்களுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கும்…….தாங்க மாட்டாங்க”

இதற்குள் இவளது அக்கா மீண்டுமாய் உள்ளே வருவது இவளுக்கு தெரிகிறது. இவள் பார்வையை தொடர்ந்து திரும்பிப் பார்க்கிறான் அவனும்.

“அங்க தட்டு மாத்தப் போறாங்க….உங்களை வரச் சொல்றாங்க” சொல்லிவிட்டு அவள் ஒரு வித புன்னகையுடன் திரும்பிப் போய்விட்டாள்.

“இப்ப நான் என்ன சொல்லனும் சட்டுன்னு சொல்லு..…நாம கிளம்பனும்…….ஆனா எனக்கு பிடிக்கலைனு சொல்ல மாட்டேன்” அவசரம் வந்திருந்த குரலில் அவன் கேட்க இவளுக்குள் பயங்கர டென்ஷன்.

இவளுக்கு பிடிக்கவில்லை என்றவுடன் ஜென்டில் மேனாய் அவனே விலகிக் கொள்வான் என்றுதான் இவள் எதிர்பார்த்தது. ஆனால் அவன் என்ன இப்படி சொல்கிறான்?

“இந்த மேரேஜ் எனக்கு பிடிக்கலைனு சொல்றேன்… இப்படி பேசினா எப்படி?” இவளுக்கு கோபம் வந்தது.

“அப்படின்னா அதைதான் காரணமா சொல்லனும்..” அவன்தான்.

அதற்குள் இப்போது இவளது அம்மா சுசிலா வந்தார். அவர்கள் கையில் குட்டி சண்டியர் ஆரவ் “நிலு நீ இங்கயா இதுக்க? அங்க உன்ன எல்லோதும் தேடுதாங்க….” சொல்லியபடி இவளிடம் தாவினான் அவன்.

“ஏய் நீ என்ட்டயே இரு…சித்தி சேரி கசங்கிடும்….அங்க ஃபங்ஷன் ஆரம்பிக்குது….” சொன்ன சுசிலா…. “வா நிலுமா” என்றபடி யவ்வனைப் பார்த்தார்.

அதற்கு மேல் அவன் அங்கு எப்படி நிற்கவாம்….? , சுசிலாவைப் பார்த்து புன்னகைத்துவிட்டு கிளம்பிவிட்டான் யவ்வன்.

டுத்து மொத்த சபையில் ஒரு புற சோஃபாவில் இவள் அமர்ந்திருக்க அவளை நோக்கி கேட்கிறார் ஒரு முதியவர் “ என்னம்மா உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதாமா?”

அதெல்லாம் அவளுக்கு சம்மதம்தான்…இப்படி பொதுவுல கேட்டா பிள்ள எப்படி பதில் சொல்லும்?  யாரோ இவளுக்காக பேசுகிறார்கள்.

“அப்படி இல்லமா… இதெல்லாம் முக்கியமான விஷயம்….அதனால நேரடியா கேட்டுறனும்….” அந்த முதியவர் விளக்கினார். பின் இவளைப் பார்த்து “ என்னமா உனக்கு என் மகன் யவ்வனை கல்யாணம் செய்ய சம்மதாமா?” என்றார்.

ஓ மை காட்….அவனோட அப்பா….. மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். அவன் எந்த உணர்வும் இன்றி இவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நிலு…பயப்படாம பதில்சொல்லு” இடப் பக்கமிருந்து இவளது அப்பாவின் குரல் காதில் விழுகிறது. “சம்மதம்” என்கிறது இவளது வாய் அதுவாக.

இப்பொழுது அவனிடம் அதே கேள்வி. “யவி உனக்கு இந்த கல்யாணத்தில சம்மதமா?”

“சம்மதம் “ என்றான் எந்த தயக்கமும் இன்றி அவன்..

‘இதுக்கெல்லாம் நீ ரொம்ப ரொம்ப அனுபவிப்படா பின்னாடி…..’ கருவினாள் நிலவினி தன்னுள்.

தொடரும்!

Episode # 03

Episode # 05

{kunena_discuss:929}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.