(Reading time: 18 - 35 minutes)

ங்காத்துலேயே லேட்டஸ்டு மாடல் கார் நாலு இருக்கு.. நாங்க கார் இல்லைன்னா உங்க கிட்டவந்து பிச்சை கேட்டோம்.. இது எங்களோட கௌரவ ப்ரச்சனை..எங்க மனுஷா முன்னாடி அவமானப்படுத்தனும்னு எத்தனை நாளாய் தீர்மாணிச்சிங்கோ.. வரப் போற மாட்டுப்பொண்ணு நல்லதா ஒரு இன்னோவோ, இல்லை ஒரு டஸ்டர்ன்னு எடுத்துண்டு வருவான்னு பார்த்தா, நீங்க என்னடான்னா, இந்த பெருங்காய டப்பா ஆல்டோ காரை கொண்டு வந்து நிறுத்திட்டு சாவியை கையிலே குடுக்கிறீங்க.. அதுக்கு தான் நேரே சத்திரத்துல கொடுப்போம்ன்னு சொன்னீங்களோ?  .. அப்ப தான் நாங்க எதுவும் செய்ய முடியாதுன்னு ..நான் என்ன முட்டாளா  அதை கையிலே வாங்க?”

“அதான் போச்சுன்னா, உங்காத்து மாமி என்னடான்னா, எங்க மனுஷா கிட்ட முப்பதைந்து பவுன் நகை தான் இப்பத்திக்கு செய்யரேன்னு காமிக்கரா..அதுவாவது நிறைக்க செட்டா இருக்கா? .. உருப்படியா ஒரு செட்டும் செய்யலை.. என்னவோ, பிச்சிபிச்சி செய்திருக்கா.. கேட்டா வருஷ பண்டிகைக்குள்ள நகையை போடறோம்னு சொல்லரேள்.. இதெல்லாம் சரி வராது.. ஒன்னு நீங்க பேசினப்படி, 50 சவரன் நகையை செட்டு செட்டா எடுத்து இப்ப வைங்க.. இப்பவே ஒரு பத்து லட்சமாவது காருக்குன்ன கொடுத்தாதான் என் பையன் இப்ப நிச்சயதார்த்துக்கு உட்காருவான்"  என அதட்டலாக சொன்ன அமிர்தாவை வாயை பிளந்து பார்த்தனர் அனைவரும்.

நிச்சயதார்த்திற்காக கூடியிருந்தவர்கள் குசுகுசுவென ஏதோ பேசியபடி இருந்தனர்.

ராமமூர்த்தி கையை பிசைய, சாரதா தான், "மாமி எங்களால முடிஞ்சதை செய்திருக்கோம்.. கட்டாயம் நீங்க கேட்டபடி வேறே கார் அடுத்த வருஷம் வாங்கித் தரோம்.. இந்த சமயத்தில நிச்சயதார்த்தம் அப்ப இப்படி பேசினா எப்படி"  என தன்மையாக வேண்ட,

"இப்ப பேசலைன்னா.. எப்பம்மா பேசரது.. வாயை மூடிண்டு இருந்தால் நன்னா பட்டை நாமம் சாத்துவீங்களோ?.. இங்க பாரு சாரதா, டாக்டர் மாப்பிள்ளைன்னா கொம்பா.. அதுக்குத்தான் விரலுக்கு தகுந்த வீக்கம் வேணும்.. இப்படி ஓவரா ஆசைப்பட்டா?"  என அமிர்தா சூடாக சொல்ல,

"இந்த காரே ஏதோ இந்த பைரவி வாங்கிக் கொடுத்த கிப்ட்.. இன்னும் பத்து லட்சம் கார் வேணும்ன்னா எங்க அப்பா, அம்மா எங்கே போவா?"  என சமய சந்தர்ப்பம் தெரியாமல் ரஞ்சனி எடுத்துக் கொடுக்க,

"ஓ.. அதானே பார்த்தேன்.. அந்த அமெரிக்ககாரி வாங்கி கொடுத்த ஓசிக்காரா.. இந்த சின்ன காருக்கே உங்களாலே பணம் புரட்ட முடியவில்லை.. இந்த லட்சணத்தில் நாளைக்கு என் பையனுக்கு யார் பிரைவேட் கிளினிக் வைச்சு கொடுப்பா.. அப்ப பணத்துக்கு எங்கே போவீங்கோ.. ஒரு வேளை அந்த அமெரிக்க புள்ளையாண்டான் வாங்கித் தருவானோ?.. நன்னா சிரிக்க சிரிக்க உங்க பொண்ணுகிட்ட பேசிண்டு இருந்தானே?" என விஷமாக கக்க,

'இது என்ன புது விஷயம்' என விஜய் மஹதியை பார்வையால் கேட்க, அத்தனை நேரமாக தன் தாயை அடக்காமல் வெறும் பார்வையாளராகவே நின்று கொண்டிருந்தவனை இவனுக்கு எல்லாம் இனி விளக்கம் என்ன வேண்டியிருக்கிறது என்று நினைத்த மஹதி,  ‘பொறுத்தது போதும், இனி பொங்கி எழ வேண்டிய நேரம் வந்தாயிற்று’ என தீர்மாணித்து,

"உம்.. அமெரிக்க பிள்ளையாண்டன் எதற்கு?..  நம்ம லோக்கல் போலீசை கூப்பிடுகிறேன்...  அவுங்க வந்து நல்லா கிளினிக் வைத்து கொடுப்பார்கள்" என கோபமாக சொல்ல,

'இந்த பொண்ணு என்ன சொல்லறா'.. புரியாமல் அமிர்தா மஹதியை பார்க்க,

சாரதாவோ, "டி மஹி.. வாயை மூடு.. உன்னை யார் வெளியே வரச் சொன்னது?.. பெரியவா பேசித் தீர்த்துக்கறோம்.. நீ சித்த சும்மாயிரு" என அதட்ட

அப்பொழுது அஜய் "சபாஷ் மஹதி .. பெண்கள் இப்படித்தான் தைரியமாக இருக்க வேண்டும்.. ஐ  அப்ரிஷேட் யூ"  என நிலைமை புரியாமல் கைத் தட்ட,

சட்டென சுதாரித்தாள் அமிரிதா.. "டேய் விஜய், நன்னா இருக்குடா இவ பேசறது??.. இன்னும் கல்யாணமே நடக்கலை.. அதுக்குள்ளே மாமியாரை போலீஸ்ல பிடிச்சி கொடுக்கிற மாட்டுபெண்ணை இப்பத்தான் உலகத்துல பார்க்கிறேன்.. முதல்ல கிளம்புடா.. இவ நம்மாத்துக்கு உன்னை கல்யாணம் பண்ணிண்டு வந்தால், எந்த ஷணம் போலீஸ் என் கையில காப்பை மாட்டுவான்னு நான் பயந்து சாவனுமா?.. எவ்வளவு திமிர் இவளுக்கு?..இவ நம்மளுக்கு சரி பட மாட்டா..  கொஞ்சம் கூட வெட்கம் இல்லை.. சபையில பெரியவான்னு மரியாதை இல்லாம பேச வந்துட்டா?"

"அய்யோ அம்மா, என்னம்மா, உனக்கு இந்த காரும், நகையும் தான் முக்கியமா?.. எனக்கு மஹதியை பிடிச்சிருக்குன்னு உனக்கு தெரியாதா?” என விஜய் தன் தாயை அடக்க முயல,

"டேய் இவ உனக்கு வேண்டாம்.. இப்பயே இப்படி பேசரவோ, கல்யாணத்துக்கு பிறகு எப்படி வாயடிப்பாளோ"

"அம்மா, உனக்கு என்ன வேணும்,  நான் அவளை உன் கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லட்டுமா?" "மஹதி, அம்மாகிட்ட மன்னிப்பு கேளேன்"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.