(Reading time: 18 - 35 minutes)

"லோ, டாக்டர்.விஜய்.. நான் என்ன தப்பா பேசினேன்னு உங்க அம்மாகிட்ட மன்னிப்பு கேட்கனும்.. உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கோன்னு வந்து அழுதேனா?  இல்லை உங்களை அப்படி விழுந்து விழுந்து காதலிச்சேனா.. நீங்களா பிடிச்சிருக்குன்னு சொன்னவுடனே பெரியவாளை கேளுங்கோன்னு சொன்னேன்.. அது தப்பா.. உங்க எல்லாருக்கும் எங்க வீட்டு நிலைமை தெரிஞ்சு தானே பொண்ணு பார்க்க வந்திங்க.. போதும் சார்.. இதுக்கு மேலே உங்க வீட்டுல வந்து நான் எப்படி இருக்க முடியும்.. உங்க அம்மா என்ன உங்களை விக்கறாலா என்ன? படிச்சி இவ்ளோ பெரிய உத்யோகத்துல இருக்கற நீங்க இத்தனை நேரம் வாயை மூடிண்டு பார்த்துண்டு இருக்கேள்.. பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கனும்.. ஒத்துக்கறேன்.. ஆனா அவா தப்பு பண்ணிண்டே போனா, பார்த்துண்டு இருக்கனும் இல்லை.. இதுல என்னவோ, உங்க அம்மா எதோ தப்பா பேசாதது போல என்னை மன்னிப்பு கேட்க சொல்லறீங்க.. இதை நான் உங்க கிட்ட எதிர்பார்க்கவில்லை..

ஒரு பொறுப்பான சமூகத்துக்கு சேவை செய்யற டாக்டரே இப்படி வரதட்சணை வாங்கவில்லை, எல்லாம் உங்க பொண்ணுக்கு தானே செய்யறீங்கன்னு பகல் கொள்ளை அடித்தால்,  பின்னே மற்ற படிக்காத பொது ஜனங்கள் எப்படி இருப்பார்கள்.. டாக்டர் விஜய் எனக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை" என மஹதி பட்டென சொல்ல,

விஜய்யோ,  "மஹதி என்ன இது இப்படி பேசுகிறாய்?.. ஒரு மன்னிப்பு கேள்.. எல்லாம் சரியாகிவிடும்.. நீயும் தான் எதுக்கு போலீஸ் அப்படின்னு பேசலாமா?"

"அதில் என்ன தப்பு மிஸ்டர். விஜய்..  நீங்க படிச்சவர்.. நல்ல போஸ்ட்டில் இருக்கிங்க.. வரப் போற பொண்ணுதான் உங்களுக்கு கிளினிக் வைச்சு தரனும், கார் வாங்கிண்டு வரனும் இப்படி கேட்கிறது , நல்லாவா இருக்கு.. அவுங்க உங்க அம்மாவை போலீஸ்ல சொல்லறேன்னு சொன்னதில தப்பே இல்லை.. அவுங்க எதுக்கு மன்னிப்பு கேட்கனும்.. நான் மஹதிக்கு ஃபுல் சப்போர்ட் செய்யறேன்"  என அஜய் சொல்ல,

வசந்தும், பைரவியும் "அஜய் சும்மா இரு" என்று அவனை அடக்க,

ராமமூர்த்தியும், சாரதாவும் மேலே என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்தனர்.

"வாப்பா, வா.. நீ பஞ்சாயத்து பண்ணலேன்னு யாராவது அழுதாங்களா இங்கே.. ஏதோ அமெரிக்காவிலேர்ந்து வந்தோமா, நாலு அட்சதையை போட்டோமா, சோற்றை போட்டாங்களா திண்ணோமான்னு போயிட்டே இருக்கனும்.. அதை விட்டுட்டு எதுக்கு உங்களுக்கு வேண்டாத வேலை? .. பெத்தவங்களே வாயை மூடிண்டு இருக்கறப்போ, நீங்க எதுக்கு அந்த பொண்ணுக்கு சப்போர்ட் பண்ணனும்.. நானும் பார்க்கரேன்,  அந்த பொண்ணோட எப்பப்பாரு சிரிச்சி பேசிண்டு இருக்கே.. என்ன விஷயம்?..  ஏன் இவ்வளவு பேசறே?  நீயும் தானே டாக்டர்,  பேசாம நீயே அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ.. வெறும் கையை வீசிண்டு வருவா?.. கையை பிடிச்சி கூப்பிட்டு கொண்டு அமெரிக்காவுக்கு போ" என அமிர்தா பட்டென சொல்ல,

"மாமி என்ன பேசறீங்கோ.. தயவு செய்து மன்னிச்சிக்கங்கோ..  எதோ தெரியாம அவா பேசிட்டா.. அவா சார்புல நான் மன்னிப்பு கேட்கறேன்" என சாரதா இரைஞ்ச,

"அம்மா நீ ஏன்மா கண்டவா கிட்ட மன்னிப்பு கேட்டுண்டு"  என வசந்த தன் தாயை தடுக்க,

"சாரதா ஆண்ட்டி, அங்கிள்,  நான்  மஹதியை கல்யாணம் செய்துக்க இஷ்டப்படரேன்.. என்னை பற்றி உங்களுக்கு இத்தனை நாளில் நன்னா தெரியும்.. எனக்கு எதுவும் வேண்டும்.. அந்த ஆண்ட்டி சொன்னபடி வெறும் கையை வீசிண்டு கூட வர வேண்டாம்..  என் கையை பற்றிக் கொண்டு மனைவி என்ற உரிமையோடு அமெரிக்காவுக்கு மஹதியை அழைத்துக் கொண்டு போக நான் ரெடி"  என்ற தடாலடியாக சொன்ன அஜய், மஹதியிடம் திரும்பி,

"மஹதி.. வில் யூ மாரி மீ.. என் பெட்டர் ஹாஃபா இருக்க என்னோடு வருவாயா?.. உன்னை நான் வற்புறுத்த மாட்டேன்.. இந்த கல்யாணம் நின்றதால் வேறு வழியில்லாமல் நீ என்னை சூஸ் பண்ண வேண்டாம்.. உனக்கு பிடித்து இருந்தால் சொல்லு.. உங்க பழக்க வழக்கமெல்லாம் நான் அவ்வளவா ஃபாலோ பண்ணினது இல்லை.. என் அம்மா அமெரிக்கன் லேடி.. அப்பா உங்களவாதான்.. எனக்குன்னு இப்ப யாருமே இல்லை.. எனக்கு உங்க குடும்பத்தை ரொம்ப பிடிச்சிருக்கு.. உன்னை கல்யாணம் செஞ்சிண்டு, உங்காத்துல ஒருத்தரா இருக்க பிரியப் படரறேன்.. உனக்கு என்னை பிடிச்சிருந்தா தயங்காம சொல்லு.. பிடிக்கலேன்னாலும், பரவாயில்லை.. உனக்கு பிடிச்சவங்களை பார்த்து கல்யாணம் செய்யரது என்னோட பொறுப்பு.. என்ன சொல்லறே மஹதி"  என்று கேட்டான் அஜய்.

மஹதி சின்ன புன்னகையுடன், தன் பெற்றோரை பார்க்க,  அதுவரை நடந்த அனைத்தையும் ஒரு கைலாக தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சாரதா தன் பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்த மகிழ்ச்சியுடன் தலையாட்ட, ராமமூர்த்தியும்,

"எங்களுக்கு விருப்பம்.. என்னம்மா மஹி..உனக்கு அஜய்யை மணந்து கொள்ள விருப்பமா?" என கேட்டவருக்கு,

"எனக்கு அஜய்யை பிடிச்சிருக்குப்பா.. உங்க எல்லாருக்கும் சரின்னா எனக்கும் ஓ.கே தான்" என்றாள் மஹதி.

"அப்ப என் கதி"  என விஜய் கத்த,  வாசலை காட்டினான் அஜய்.

வசந்தோ, "இதுக்கு மேலே தொல்லை செஞ்சிங்கின்னா, நாங்க நிஜமாவே போலீஸ்க்கு தான் போக வேண்டியிருக்கும்" என,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.