(Reading time: 18 - 35 minutes)

"டேய், விஜய், அவங்க எல்லாம் ஒன்னா சேர்ந்துட்டாங்கடா.. வா, நாம போகலாம்.. அதுக்குதான் நான் அப்பவே தலையாய அடிச்சிண்டேன்.. என் பேச்சை யார் கேட்டா?.. பாத்திரம் அறிஞ்சு பிச்சை எடு, கோத்திரம் தெரிஞ்சு பொண்ணை கொடுன்னு.. இவா எல்லாம் நம்ம லெவலுக்கு சரி படுவாளா.. பாரு அமெரிக்க மாப்பிள்ளைன்ன உடனே வாயை பிளக்கறதை பார்.. வாடா கண்ணா நீ,  அந்த தொழிலதிபர் வீட்டு பொண்ணை உனக்கு பார்க்கறேன்"  என்ற அமிர்தா, தன் மகன் கையை பிடித்து இழுத்து கொண்டு தன் கணவருடன் வெளியேறினாள் அமிர்தா..  பாவம் விஜய், ஏமாற்றத்துடன் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே என்ன செய்வது என்று தெரியாமல் தன் தாயை பின் தொடர்ந்தான்..

வாழ்க்கை அவனுக்கு வசந்தத்தை காட்டியது.. தேடி வந்த வசந்தத்தை, தன் தாயின் பேராசையால் தொலைத்தவன், தன் விதியை நொந்தபடி வெளியேறினான்.. விதி வலியது.

'நம்ம அஜய்யா இது என ஆச்சர்யபட்டாள் பைரவி..  இத்தனை நாட்களாக, கேர் ப்ரீயாக, வாழ்க்கையை அதன் போக்கில் வாழ பழகியிருந்தவன், இன்று அதிரடியாக இப்பொழுது மஹதியை மணக்க துணிந்து விட்டானே.. அவன் வாழ்க்கை மஹதியுடன் சிறக்க வேண்டும்' என்று நல்ல தோழியாக அவனை எண்ணி பெருமையடைந்த பைரவி, முதல் ஆளாக,

"கங்க்ராஜூலேஷன்ஸ் அஜய்.. வாழ்த்துக்கள் மஹதி.. நீங்க இரண்டு பேரும் நல்ல ஜோடி"  என வாழ்த்தினாள்.

"ஹேய், பைரவி,  நீ எப்பவும் சொல்லுவியே.. கல்யாணம் செய்துக்கோ என்று.. இந்த வெட்டிங்க் இதெல்லாம் நம்பிக்கை இல்லாமல் பேச்சுலரா இந்தியா வந்தேன்..திருப்பி போறப்போ குடும்பஸ்தனா மஹதியோட அமெரிக்கா போகப் போறேன்.. இதுக்கெல்லாம் காரணம் நீதான்.. நீ இவா குடும்பத்தை அறிமுகப் படுத்தலேன்னா எனக்கு மஹதி கிடைச்சிருப்பாளா. உனக்கு தான் என் ஸ்பெஷல் தாங்க்ஸ்.. நீ ஹாப்பி தானே" என அஜய் கேட்க,

"எனக்கு ரொம்ப சந்தோஷம் அஜய்.. உனக்கு இப்படி ஒரு பேமலி கிடைக்க கொடுத்து வைச்சிருக்கனும்.. உங்க அப்பா இருந்திருந்தா உன்னோட இந்த முடிவை பாராட்டி இருப்பார்"  என்றாள் பைரவி..

அதற்குள், நிச்சயதார்தத்துக்கு நேரமாரது.. மாப்பிள்ளையை அழைச்சிண்டு வாங்கோ" என சாஸ்திரிகள் அவசரப்படுத்த,

ராமமூர்த்தி, "வாப்பா அஜய், வசந்த்.. மாப்பிள்ளைக்கு வேஷ்டியை எடுத்து கொடு..  டிரஸ் மாத்திண்டு மேடைக்கு அழைச்சிண்டு வா"  என பரபரக்க, அங்கே அடுத்த ஒரு மணி நேரத்தில், அஜய்க்கும், மஹதிக்கும் நிச்சயதார்தம் நடந்து முடிந்து,  மாலை கோலகலமாக ரிசெப்ஷனும் நடந்தேறியது.

மாலையில் வரவேற்ப்புக்கு தனியாக வந்திருந்த ஆனந்த், விஷயம் அறிந்து ,தன் நண்பன் மணமகனாக மாறிய விஷயத்தை கேள்விபட்டு மகிழ்ச்சியடைந்தவன் அவனை திடீர் முடிவை பாராட்டி, வாழ்த்தி அவனுக்கு மாப்பிள்ளை தோழனாக கடைசி வரை இருந்தான்.

அஜய்யிடம் தன் பெற்றோர் அவனது திருமண வரவேற்பில் கலந்து கொள்ள முடியாமல் அவர்கள் உறவு திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள சொந்த ஊருக்கு சென்றிருப்பதாக சொல்லி மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.

று நாள், குறித்த முஹீர்த்தத்தில், சாரதாவும்-ராமமூர்த்தியும் மஹதியை தாரை வார்த்து கொடுக்க, அஜய்க்கு பெற்றோர் இல்லாத காரணத்தால், கார்த்திகேயனின் பெற்றோர் அஜய்க்காக பெற்றவர்களாக அவனுக்கு இருந்து எல்லாவித சம்ப்ரதாயங்களையும் அவன் சார்பில் செய்ய, அவளை மஹதியின் கழுத்தில் அஜய் இரண்டு மூடிச்சு போட, மூன்றாவது நாத்தனார் முடிச்சாக பைரவி அஜய்யின் சார்பில் முடியிட, அங்கே,

"ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே..எங்கள் மஹதி மணமகள் ஆனாலே"

என்று பாடியபடி மணமக்களை அஷ்சதைகளை தூவி வாழ்த்த, சாரதா கண்ணீர் வழிய தன் மூன்றாவது மகளை அணைத்துக் கொண்டு வாழ்த்தினார்.

மஹதியின் சகோதரிகள் மாத்திரம், 'இவளுக்கு அடிச்ச யோகத்தை பார்" என்று உள்ளுக்குள் வயிரெறிந்தபடி அட்சதையை மணமக்கள் மீது வீசி எறிந்தனர்.

தொடரும்

Episode 18

Episode 20

{kunena_discuss:909}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.