(Reading time: 8 - 15 minutes)

23. என் உயிர்சக்தி! - நீலா

ம்மோட எண்ணங்களுக்கும் நினைவுகளுக்கும் பெரிய சக்தி இருக்குனு சொல்லுவாங்க..அதைதான் நல்லதையே நினைக்கனும்னு சொல்றாங்களோ..அப்படி நல்லதையே நினைச்சி நன்மையே செய்யறவங்களுக்கு ஏன் தீங்கு தொடரனும்??? தீமை ஏன் அவங்களையும் சூழனும்??

அப்போ எவ்வளவு நன்மை செய்தாலும் அவரவருக்கான தீமை தொடர்ந்துதான் ஆகுமா? என்னை தீமை தீண்டக்கூடாதுனு எதிர்பார்த்து நன்மை செய்யறது தவறோ... அப்படி எண்ணாம நன்மை செய்தாலும் ஏன் துன்பம் வருது....

நான் ஒருத்தருக்கு நன்மை செய்யறேனா கண்டிப்பா பரதிபலனை எதிர்பார்ப்பேன்...ஆனா இவ என்ன செய்தா??

En Uyirsakthi

தன்னலம் பார்க்காம அடுத்தவங்களுக்கு உதவி தானே செய்தா...அதுக்கு பலனா இது... ச்ச்... நானும் வாழாம அவளையும் வாழவிடாம...ஒருத்தருக்கு ஒருத்தர் ஈகோ பார்த்துகிட்டு... கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கிட்டு... மனசுல இருக்கறத்தை வெளியில சொல்லாம..

அவதான் சொன்னாளே... மனசுவிட்டு உன்னை நான் காதலிக்கறேண்டா மடையானு சொன்னாளே... நான் தான் ஈகோ பார்த்து... என் காதலை சொல்லாம மறைச்சு வெச்சு..இப்போ... கடைசிவரைக்கும் என் மனைவி..என் குழலீ மீதான என்னுடைய காதலை அவகிட்ட சொல்லவே முடியாதா?? 

இவள எப்போயிருந்து காதலிக்க ஆரம்பிச்சேன்?? தெரியல.. ஆயிரம் பொண்ணுங்ககிட்ட நான் பேசுவேன்... கடலை போட்டிருக்கேன்...ஆனா எல்லைமீறி என்னைக்குமே நடந்ததுயில்ல... ஏன்னா நான் முழுமையா... எல்லாமே என் மனைவிகிட்ட மட்டும்னு தான் மனசுல விதிச்சு வாழ்ந்துட்டு இருந்தேன்... இருக்கேன் இப்பவும்..

நான் காதலிக்கறதா சொன்ன ப்ரியா மேல இந்த மாதிரி எண்ணங்கள் வரவேயில்ல... ஆனா குழலீ... அவளை இப்போ நேரில பார்த்தப்போ...என்னை நானே கட்டுப்படுத்திக்க அவ்வளவு கஷ்டப்பட்டேன்...கட்டி அணைச்சு என் தோள் சாய்ச்சு உனக்கு நான் இருக்கேனு ஆறுதல் சொல்லனும்னு துடிச்சிருக்கேன்...

அப்போ ஆழ் மனசு அவ தான் மனைவினு முடிவு பண்ணிடுச்சு.. இப்போனு இல்ல ஸ்கூலில் முதல் நாள் பார்க்கும் போதும்... அதுக்கு முன்னம் அட்மிஷ்ன் வாங்க வந்த அன்னைக்கும் சரி...அந்த கண்ணு... ஆயிரம் கதை பேசுச்சே...அந்த மேஸ்மரைசிங் கண்கள்கிட்ட இருந்து தப்பிக்க...என்ன பாடுபட்டிருக்கேன்... அப்போ.. அன்னைலயிருந்தே அவகிட்ட நான் தோற்க ஆரம்பிச்சிட்டேனா??? தெரியல...

ஆனா அவ எனக்கு நிச்சயமா வேணும்.. என் வாழ்க்கை முழுவத்துக்கும்...அவ என்னை நம்பனும்.. குழலீ ப்ளீஸ்... நான் பேசறது கேட்குதா உனக்கு.... என்னை புரிஞ்சுகோயேன்.... எனக்கு நீ வேணும்டீ... என் மனைவியா... என் காதலா...என் வாழ்க்கை துணையா வேணும்டீ... என்னை ஏமாற்றலாம்னு மட்டும் நினைக்காத... என்னால இந்த தோல்வியை சத்தியமா ஒத்துக்க முடியாது....

இதுவரைக்கும் உன்னைப்போல கடவுள் பக்தி... கோவில்னு நான் போய் நின்னு வேண்டிக்கிட்டதில்ல...இப்பவும் போகனுமா வேணாமானு தெரியல... ஆனா உன் இஷ்ட தெய்வத்தோட ரெக்கமண்டேஷன் இருந்தா நீ என்கிட்ட திரும்பி வருவநா இப்போவே கேட்கறேன்... எனக்காக என் குழலீயை திரும்பி வர சொல்லுங்க...

மெல்ல தலை நிமிர்த்தி பார்த்தான் பிரபு. அவளுடைய கைகளை இறுக பற்றியிருந்தான். கண்களில் இருந்த வேதனையும் வலியும் அவன் மனதின் நிலையை சுட்டிக்காட்டின. வலது தோளை யாரோ பற்றியிருக்க நிமிர்ந்து பார்த்தான் பிரபு.

'மாமா...' என்றழைத்தது அருள்மொழிவர்மன்.

அங்கிருந்து எழுந்து வெளியே சென்ற பிரபுவின் பின்னாலேயே வந்தான் அருள்மொழி.

மாமா...கவலைபடாதீங்க மாமா....

எனக்கு கவலையிலலை அருள்...ஆனா...அவ...

அக்காவுக்கு எதுவும் ஆகாது மாமா... அவ ரொம்ப தைரியசாலி மாமா...அவளுக்கு தன்னம்பிக்கை அதிகம் மாமா...

அந்த நம்பிக்கை தானே நான் உடைச்சிட்டேன்...

கண்டிப்பா இல்ல மாமா...நடந்த விஷயத்துல உங்க பார்ட் எதுவுமேயில்ல மாமா...அதனால உங்களை வருத்திக்காதீங்க.. கொஞ்சம் எதாவது சாப்பிடறீங்களா??? ஜிஜு இப்போ இங்க வந்திருவாரு...வெற்றி அண்ணா... டீனா அக்கா.. டேவிட் மாமா... அப்புறம் யாழினி... எல்லாரும் வந்திருவாங்க மாமா..அம்மா வேற உங்ககிட்ட பேசனும்னு சொன்னாங்க..

அச்சோ அருள்...அத்தைக்கு நான் என்ன பதில் சொல்வேன் இப்போ... இதுக்கா என் பொண்ணை உங்களுக்கு கட்டிக்கொடுத்தேனு கேட்டாங்கனா?? அவங்க இங்க வர வேணாம் அருள்... உங்க அக்கா கண் விழிச்சிட்டா அதுவே போதும் எனக்கு.... அதுவரை எனக்கு எதுவுமே வேண்டாம்...

அருள்மொழியும் பிரபுவும் நியூயார்க்கின் அந்த பிரபல மருத்துவமனை இண்டேன்சிவ் கேர் அறை வாசலில் இருந்து வெளியே வந்து பேசிக்கொண்டிருந்தனர்.

நீங்க போய் ரிஃவ்ரேஷ் ஆயிட்டு வாங்க மாமா.. தாடியோட உங்களை பார்த்தா அக்கா வருத்தப்படுவா...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.