(Reading time: 8 - 15 minutes)

ரவாயில்லை அருள்... இந்த தாடியை பார்த்தாவாது என் மனசு அவளுக்கு புரியுதானு பார்ப்போம்... உனக்கு காலேஜ் இல்லையா?? கிளாஸ் மிஸ் செய்ய போற அருள்! அவளுக்கு நினைவு திரும்பின உடனே உனக்கு கால் செய்யறேன்..

இல்லை மாமா... அக்கா... இப்படியிருக்கும் போது... கிளாஸ் முக்கியமில்ல மாமா... எனக்கு என் குடும்பத்துக்கு அவ ரொம்பவும் முக்கியம் மாமா...எனக்கும் என் தங்கைகளுக்கும் அக்காவா இருக்க ஒரு அப்பா... பிரண்ட்... கையிட்... டீச்சர்... எல்லாமே! அவ இல்லைனா நாங்க யாரும் இல்ல மாமா... அவ கண்விழிக்காம என்னால நகர முடியாது மாமா...

'என் குழலீ...' என்று முணுமுணுத்தான் பிரபு!

அதற்குள் அங்கே வந்துவிட்டனர் ஆர்யன், வெற்றி, டேவிட், டீனா அண்ட் யாழினி.

அங்கே வந்த யாழினி பிரபுவின் கைகளை பற்ற முயல.. 'வேண்டாம் யாழினி...நான் எதுவும் உன்னை பேசறதுக்கு முன்னம் இந்த இடத்தைவிட்டு போய்விடு' என்றான்.

பிரபு... நான் சொல்லுற விளக்கத்தை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்களேன்... இப்படியாகும்னு நினைச்சு நான் அப்படி செய்யல..'

எப்படியாகும்னு?? உயிருக்கு போராடிக்கிட்டு... இப்படி சுயனினைவு இல்லாமல்னா?? இல்ல ஓரேடியா போய்டுவானு நினைச்சியோ??' என்றான் சீற்றத்துடன்.

யாழினி ஏதோ பேச தொடங்க.. பிரபு வெற்றியை அழைத்து அவளை அப்புறப்படுத்தும் படி கூறினான்.

இல்ல வெற்றி... நான் பேசனும்... இதுக்கு விளக்கம் கொடுத்தேயாகனும்... - யாழினி.

ஒரு மண்ணும் தேவையில்லை...குழல் இங்க வந்ததிலிருந்து எனக்கும் அவளுக்கும் சண்டை மூட்டிவிட்டுடே இருந்திருக்க.... எங்க ரெண்டு பேருக்கும் அது புரியவேயில்ல... அப்போ தான் நான் கால் செய்து...நாங்க நல்ல படியா ரெண்டு வார்த்தை பேசி வெச்சிருப்போம்..நீ கால் செய்வ.. கொஞ்ச நேரத்துக்கேல்லாம்... அவகிட்ட இருந்து கால் வரும்... உன்கிட்ட பேசின சில விஷயங்களை பற்றி அவ கேட்பா... அது பெரிய வாக்குவாதத்துல முடியும்... விடிய விடிய பேசி சமாதானம் செய்திருக்கேன் அவளை! குழலீயே கால் செய்து என்கிட்ட நல்லவிதமா பேசினாலும் நான் எதாவது சண்டை போட்டு அவ சமாதானம் செய்ய... இப்படிதான் போயிருக்கு இதுவரைக்கும் வாழ்க்கை... காதலா... ஆசையா... இப்படி எதுவுமே நாங்க பேசிக்கிட்டதுயில்ல.. 

பிரபு... நான்... கொஞ்சம் கேளுங்க பிரபு...

தேவையில்ல! அன்னைக்கும் ஏர்போர்ட்ல அவ வந்திருக்கானு தெரிஞ்சும்... அவ கண்முன்னமே ஓடி வந்து என்னை கட்டிபிடிச்ச யாழினி நீ...இதுக்கு என்ன விளக்கம் வெச்சிருக்க நீ??? அதோடு நிறுத்தியிருந்தாலும் பரவாயில்ல... ஆனா கிஸ் செய்து.. ஹக் செய்து... ச்சீ... இப்போ உட்கார்ந்து யோசிக்கும் போது தான் தெரியுது... எல்லா சண்டைக்கும் பின்னால நீ இருந்திருக்க...அன்னைக்கு ஏர்ப்போர்ட்ல நடந்துக்கிட்டதுக்கும் இதுதான் காரணமா இருந்திருக்கும்... இதை என் குழலீ கண் முன்னாடி செய்தா.. அவ என்னை உனக்கு விட்டு கொடுத்திடுவானு நினைச்சியா?? அவ நினைச்சாலும் நான் விட மாட்டேன் அவளை... ஷீ இஸ் மை லவ் அண்ட் லைஃப்... சோ ஜஸ்ட் கேட் லாஸ்ட்!

அதற்குள் அங்கிருந்தவர் வந்து 'மிஸ்டர் பிரபு.. டாக்டர் கால்ஸ் யூ' என்றழைக்க பிரபு நகர்ந்தான். அவன் கையை பிடித்து நிறுத்திய யாழினி தீர்கமாய் அவனை பார்த்தாள்.

சோ...நீங்க கண்டுப்பிடுச்சிட்டீங்க?! இல்ல? ஆனா நான் எதுக்கு இதை செய்தேனு ரொம்பவே கரக்டா யோசிச்சு இருக்கீங்க பிரபு!

….

நான் கால் செய்த பிறகு உங்களுக்குள் வளர்ந்த சின்ன சின்ன சண்டைகளும் வாதங்களும் ஊடல்கள் தான்... நீங்க உங்க காதலை ஒத்துக்கறா மாதிரியில்ல... அவளும் உங்களை புரிஞ்சிக்கறா மாதிரி தெரியல... அவ கண் முன்னாடி உங்க மேல யாராவது அவளோட இடத்தின் உரிமையை எடுத்துக்கிட்டா... உங்க மேல இருக்க போசசிவ்னஸ்ல ஏதாவது பாஸிட்டிவ்வா ரியாக்ட் செய்வா நினைச்சேன்...நீ யாருடீ என் புருஷனை கட்டிபிடிக்கனு சண்டை போடுவானு பார்த்தேன்.. ஆனா இப்படி நடு ரோட்ல நின்னு ஆக்ஷ்டண்ட் நடந்து இப்படி சுய நினைவு இல்லாம... நான் சத்தியமா எதிர்ப்பார்க்கல..'

பேசி முடிச்சிட்டியா??' என்றபடி தன் கையை விடுடித்துக்கொண்டு குழலீ இருந்த அறையை நோக்கி நடந்தான் பிரபு. 

அங்கு தலையில் கட்டுடன் கை, கால் எலும்பு முறிவுடன் மயக்க நிலையில் இருந்த குழலீயிடம் சிறு அசைவு தெரிந்தது ஐந்து நாட்களுக்கு பிறகு!

சுய நினைவு திரும்ப மெல்ல விழி திறந்து பார்த்தவள் கண் எதிரே நின்றிருந்தவன் அருள்மொழிவர்மன்.

பக்கவாட்டில் அவள் கைகளை பிடித்துக்கொண்டு விழிகளில் ஏக்கமும் தவிப்புமாய் நின்றுக்கொண்டிருந்தான் அவள் அருமை கணவன்... நடு நாயகமாய் யாழினி நின்றிருக்க அவள் வலது புறத்தில் தான் நின்றிருந்தான் பிரபு குழலீயின் கைகளை பிடித்தபடி...இடது புறத்தில் வெற்றியிருந்தான்.

விழிவிரிய அவனை பார்த்தவள் சுற்றியிருந்தவர்களையும் பார்த்துவிட்டு அதே ஏக்கமும் தவிப்புமாய் கண்களை மூடிக்கொண்டாள். அவள் பார்வை ஏதோ சொல்ல வந்து சொல்ல முடியாமல் தவித்தது போல் உணர்ந்தான் பிரபு!

சொல்லிய காதலைவிட இப்படி சொல்லாமல் உணரும் காதலும் சுகம் தானோ?! அதே உணர்வு அவர்களை இணைத்திடுமா?? இந்த காதல் கனிய காத்திருப்போம்!!!

தொடரும்...

Episode # 22

Episode # 24

{kunena_discuss:833}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.