(Reading time: 16 - 32 minutes)

24. என் உயிர்சக்தி! - நீலா

லையில் கட்டுடன் கை, கால் எலும்பு முறிவுடன் மயக்க நிலையில் இருந்த குழலீயிடம் சிறு அசைவு தெரிந்தது ஐந்து நாட்களுக்கு பிறகு!

சுய நினைவு திரும்ப மெல்ல விழி திறந்து பார்த்தவள் கண் எதிரே நின்றிருந்தவன் அருள்மொழிவர்மன். பக்கவாட்டில் அவள் கைகளை பிடித்துக்கொண்டு விழிகளில் ஏக்கமும் தவிப்புமாய் நின்றுக்கொண்டிருந்தான் அவள் அருமை கணவன்... 

விழிவிரிய அவனை பார்த்தவள் சுற்றியிருந்தவர்களையும் பார்த்துவிட்டு அதே ஏக்கமும் தவிப்புமாய் கண்களை மூடிக்கொண்டாள். அவள் பார்வை ஏதோ சொல்ல வந்து சொல்ல முடியாமல் தவித்தது போல்  உணர்ந்தான் பிரபு!

En Uyirsakthi

முழு இரண்டு நாட்களானது... குழலீ சுயநினைவு பெற்று சமனிலை வர. இந்த இரண்டு நாட்கள் இன்னும் நரக வேதனையாய் இருந்தது பிரபுவிற்கு! குழலீ கண் திறந்து பார்த்தாலும் இவன் கண்களை தவிர்க்கிறாள்.... இவன் பற்றியிருக்கும் கைகளை உருவிக்கொள்ள முயல்கிறாள்... இவன் தனியே அவள் அறையில் இருப்பதை தடுக்க முயல்கிறாள்... காரணம் தான் விளங்கவில்லை பிரபுவிற்கு!

ஆனால் அந்த இரண்டு நாட்களில் அவள் மருத்துவ சிகிச்சைக்கு கொடுத்த ஒத்துழைப்பு பிரம்மிக்க வைத்தது! அவளது உடல்னிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது.

அருள்மொழியே வந்து குழலியிடம் அதை தான் கூறிக்கொண்டிருந்தான்.

அக்கா... இரண்டு நாளுக்கு முன்னாடி எப்படியிருந்த... இப்போ எப்படியிருக்க... மார்வலஸ் அக்கா... இப்படி ஒரு இம்ப்ரூவ்மண்ட் முன்னாடியே கொடுத்திருந்தா நாங்க எல்லாம் கொஞ்சம் பயப்படாம இருந்திருப்போமில்ல... அம்மா உன்னை பார்க்கல அதனால அவங்களுக்கு எவ்வளவு அடி...எப்படியெல்லாம் தெரியாது... ஆனா மாம்ஸ் சத்தியமா ரொம்பவும் பாவம்கா... ஒரு வாரமா சோறு தண்ணீயில்லாம...எவ்வளவு கஷ்டப்பட்டாரு தெரியுமா??? இப்ப கூட பாரு அவரை இழுத்து வெச்சி இங்க இருக்கிற டாக்டர்கிட்ட காட்டி ஒரு ஊசி போட்டு... அப்பவும் சாப்பிட மாட்டேனு அடம்... யாழினி தான் ஜூஸ் எதையோ கையில கொடுத்து குடிக்க வெச்சிருக்கா..ஏன்கா இப்படி செய்த??? எங்களையேல்லாம் விட்டுட்டூ போக உனக்கு எப்படி மனசு வந்துச்சு?? நீயில்லாம நாங்கலாம் எங்க அக்கா??

விரக்தியான புன்னகை குழலீயிடத்தில்! பாத்தியா நீக்கூட என்னை எனக்காகனு வேணும்னு சொல்லாம என்னால வர ஆதாயம் மட்டும் தான் பெரிசா தெரியுதுல?? என்னை யாருக்குமே பிடிக்கல... அதுவும் உங்க மாமாவுக்கு.... சுத்தமா பிடிக்கல... அப்படியிருந்து நான் என்ன செய்ய போறேன்??

அக்கா..???

கவலைப்படாத அருள்... எனக்கு ஒன்னும் ஆகாது! அப்படியே ஏதாவது ஆனாலும் யார் யாருக்கு என்ன செய்யனுமோ அதை எல்லாம் மறக்காம செய்திடுவேன் டா..உன் அக்கவுண்டுக்கு பேங்க்ல இருந்து பணம் டிரான்ஸ்வர் செய்திட்டாங்கயில்ல... நீ ஏன் யூனிவர்சிட்டி போகாம இங்க இருக்க??

அக்கா... என்ன வார்த்தை சொல்லிட்டகா? அந்த லோன் அமவுண்ட்காக தான் நான் இப்படி... என்னகா நீ??? நான் அவ்வளவு தானு நினைச்சிட்டியா??? ஒன்னு சொல்லவா... நீ வாங்கி கொடுத்த லோனை கேன்சல் செய்தாச்சு... எனக்கு ஸ்காலர்ஷிப் கிடைச்சிருக்கு... பார்ட் டைமும் கிடைச்சிருக்கு... மீதி பணத்தை மாமவே தரேனு சொல்லிட்டாரு...

எப்போ நடந்துச்சு? எந்த மாமா?? ஏன் நீ இதை முன்னாடியே சொல்லலை?? என்று கேள்விகளை அடுக்கினாள் தமக்கை.

எந்த மாமா வா?? அக்கா.. எனக்கு நீ ஒருத்திதான் அக்கா... உன் புருஷனை பற்றிதான் சொல்லறேனு உனக்கே தெரியும்! ஏன்கா இப்படி பேசின?? எனக்கு எவ்வளவு வருத்தமா இருக்கு தெரியுமா?? சொல்லு ஏன் இப்போ இந்த வார்த்தைகளை சொன்ன? அப்புறம் ஏன் இங்க இருக்கேனா கேட்ட?? ஏன்னா என் படிப்பவிட நீதான் எனக்கு முக்கியம்!

....

ஒன்னு மட்டும் சொல்லவா அக்கா?? ஏன் தேவையில்லாதது எல்லாதையும் போட்டு உன் மனசை இப்படி குழப்பிக்கற?? நாங்க எல்லாரும் உன் மேல பாசமா தான் இருக்கோம்... நீ தான் அதை புரிஞ்சிக்கல! ஏதோ சொல்லுவாங்களே... நெருப்புக்கோழி மண்ணுக்குள்ள தலைய விட்டு உலகமே இருட்டுனு நம்பும்னு... நீயும் அதை போல் தான் உன் வாழ்க்கையை இருட்டுனு நினைக்கற... கண்ணை திறந்து பார் அக்கா... சூப்பர் ஸ்மார்ட் மாம்ஸ் உனக்கே உனக்காக வெயிட் செய்யறார்... தயவுசெய்து அவர்கிட்ட பேசிடு...நான் இன்னைக்கு ஈவினிங் டேக்சாஸ் கிளம்பறேன்.. வீக் எண்ட் வந்து பார்க்கறேன்... டேக் கேர்' என்று விடைபெற்றான் அருள்மொழி.

நார்மல் வார்டுக்கு மாற்றிய பின்னும் ஏதோ யோசித்தவாரு தான் இருந்தாள் குழலீ. அன்று...யாழினி, வெற்றி மற்றும் பிரபு அவள் அறையில் இருந்தனர். அப்போது உள்ளே நுழைந்த டீனாவை பார்த்து...

டீனா... உன் போனை கொஞ்சம் கொடு..' என்றாள்

எதுக்கு?

ஒரு கால் செய்யனும்...

நம்பர் சொல்லு...' என்றவுடன் 

உமாவுக்கு போன் போடு..' என்றாள் குழலீ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.