(Reading time: 16 - 32 minutes)

லர் அண்ணி.. கீதாவும் உன் கூட கூட்டா?? - பிரபு

ஆமாம்...

என் கிட்ட பேசியிருந்தாவே நானே ஒரு வழியை சொல்லியிருப்பேனே! அதை விட்டுட்டூ எதுக்கு உங்களுக்கு இந்த வேண்டாத வேலை?

சரி... இப்போதான் சொல்லேண்டா ஒரு வழியை?

நான் அவகிட்ட தனியா பேசனும்... அவ என்கூட கொஞ்சம் டைம் ஸ்பேண்ட் செய்யனும்...

இத்தனை நாள் பேசிக்கிட்டு தானேடா இருந்தீங்க?

இத்தனை நாளும் பேசிக்கிட்டா டா இருந்தோம்... கொஞ்சம் ஸ்மூத்தா போனா தானே உன் ஆளு திரியை கொளுத்தி போட்டு வெடிக்க வைக்கறா? அதுவும் இப்போ வெச்சிருக்கா பாரு ஒரு நியூக்ளியர் பாம்... டேய்... முதலுக்கே மோசம் ஆச்சே!

இப்போ என்ன செய்யலாம்?? - என்று யோசிக்க ஆரம்பித்தான் வெற்றி.

யாரும் எதையும் செய்து குட்டையை இன்னும் குழப்ப வேணாம்... இதை எப்படி சால்வ் செய்யனும்னு நானே பார்த்துக்கறேன்... உங்க உதவியே வேண்டாம்...

இல்ல பிரபு... என்னால வந்த பிரச்சனை... நானே சால்வ் செய்யறேன்..உங்க காதலைப்பத்தி நான் குழல் கிட்ட பேசறேன்... - யாழினி.

அம்மா... தாயே! என் பொண்ணாட்டிக்கிட்ட நானே என் காதலை பிரப்போஸ் செய்யறேன்... உதவி செய்யறேனு உபத்திரம் செய்யாம் இரு... அதுவே போதும்! - பிரபு

இல்ல பிரபு... இன்னும் அஞ்சு நாளுல நாங்க இந்தியா திரும்பறோம்... அனி வீட்டுல இப்போவே கல்யாணம் செய்யனும்னு விடாபிடியா நிக்கறாங்க... நாங்க பெங்களூர் போயிட்டு... அங்க இருந்து கோவை போறோம்... அதுக்குள்ள உங்க சண்டை தீர்ந்தா எங்களுக்கும் நிம்மதியா இருக்கும்...

என்னடா விளையாடறீங்களா? எப்படி அவளை மலையிறக்கனு நானே தலையை பிச்சிக்கிட்டு இருக்கேன்... நீங்க என்னடா நா டேட்லைன் கொடுக்கற... அதுவும் கல்யாணம் செய்ய போறேனு குண்டை வேற தூக்கி போடற?? அதுவும் இந்த குட்டிபிசாசையா?? வேண்டாம் மச்சான் நீயாவது நல்லா இரு... தயவு செய்து கல்யாணம் செய்துகாதே...அப்படியும் செய்யதேனா இதே மாதிரி சண்டையை உங்களுக்குள்ள மூட்டிவிடுவேன்!

நீ ரொம்ப லேட் டா மாப்பிள்ள... உங்க மேரேஜ் முடிஞ்சவுடனேவே எங்க மேரேஜ் முடிஞ்சு இருக்கனும்... காலம் செய்த சதி... எங்களை இத்தனை நாளாய் பிரிச்சு வெச்சது.. அப்புறம் என் அனியை பார்த்து என்ன சொன்ன... குட்டிபிசாசா?? உன் நிலைமை கொஞ்சம் அந்த ரூம்ல போய் எட்டி பார்த்துட்டு பேசு மச்சான்...நான் நல்லா இருக்க தான் டா மேரேஜ் செய்யறதே...' - என்றான் வெற்றி.

அதற்கு பிரபுவின் இரண்டு அடிகளையும்.. யாழினியின் முறைப்பையும் வாங்கிக்கொண்டான் வெற்றி.

நிஜமாடா நான் நல்லா இருக்கதான் மேரேஜ் செய்யறதே! இந்த மாதிரி சண்டை என்ன இதைவிட பெரிய சண்டையேல்லாம் நாங்க பார்த்தாச்சு! அதுக்கும் மேல உங்களை மாதிரி அரேஞ்ச்ட் மேரேஜ் செய்து அதுக்கு அப்புறம் ஒருத்தரை ஒருத்தர் லவ் செய்துக்கிட்டு... அதை உள்ளே வெச்சிக்கவும் முடியாம சொல்லவும் தெரியாம முழிக்கல.. நாங்க செய்துக்க போறது லவ் மேரேஜ் மச்சான்..எந்த பிரச்சனையும் செய்ய முடியாது உன்னால...

நாங்க செய்துக்கிட்டதும் லவ் மேரேஜ் தாண்டா... வெற்றி..' - என்றான் பிரபு.

என்னது??? இது எப்போதிலிருந்து...' - என்றனர் கோரஸாய்.

என்ன எங்க காதலை ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லிக்கிடல... ஈகோ பார்த்து... சே..முதல்ல இது காதலுனு எங்களுக்கே தெரியல... நிறைய பிரச்சனை வந்திடுச்சுடா....

இது உலக மகா காதல்டா சாமி! - என்றாள் டீனா. என்னவோ செய்யுங்க ரெண்டு பேரும்... ஆனா பிரபு இந்த மேரேஜ் எந்த காரணத்தைக்கொண்டும் பிரெக் ஆக கூடாது...புரிஞ்சிதா? என்றான் டேவிட்.

சரி இங்க இருந்து நாம மொக்கை போடுறதவிட... இவன் போய் குழலிகிட்ட மொக்கை போடட்டும்.. நாம இடத்தை காலி செய்யலாம்....' என்றான் வெற்றி.

பிரபு.... போய் அவகிட்ட மனசுதிறந்து பேசுங்க... உங்க மனசுல இருக்கறதை எடுத்து சொல்லுங்க... அவளை எப்படியாவது கூல் டவுன் செய்ய முயற்சி செய்யுங்க... பார்ப்போம்! வெளியில இருந்து என்ன உதவி வேணும்னாலும் நாங்க செய்யறோம்... எப்போ டிஸ்சார்ஜ்?? எல்லா ப்ரோசிஜர்ஸும் கேட்டு சொல்லுங்க... இனி நீங்களாச்சு என் தங்கையாச்சு.. ட்ரை டு வின் ஹர் ஹார்ட் சூன்!' - என்றபடி அனைவரும் விடைபெற்றனர்.

அவள் அன்று டீனாவிடம் சொன்ன வார்த்தைகள் பிரபுவின் நினைவுக்கு வந்தன. 

'எனக்கு காதல் வரனும் னா என்னை மணப்பவர் அவர் அன்பால் காதலால் தலைகீழாக யோசிக்கவே முடியாத அளவுக்கு என்னை கவிழ்த்து போடனும். He should totally sweep me off my feet leaving me stunning and astounded. இது நடந்தா நீங்க எதிர்பார்க்கிற மாற்றம் குழலீகிட்ட நிச்சயமா வரும்'

இதை யோசித்துக்கொண்டே குழலியின் அறையில் நுழைய... அவள் சிரமப்பட்டு எழுந்து உட்கார முனைந்து கொண்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.