(Reading time: 16 - 32 minutes)

தறியடித்து அவள் அருகில் சென்று கைக்கொடுத்து உட்கார வைத்தான் பிரபு. பெட்டை சிறிது சாய்த்து முதுகுக்கு தலையணை கொடுத்து அவள் இடுப்பில் கைக்கொடுத்து சரியாக உட்கார வைத்தான்.

கையை எடுங்க...' - என்றாள் குழலீ முறைத்தவாறு.

இப்போ எதுக்கு இவ்வளவு டேன்ஷனாகுற?? உன்னை என்ன செய்துட்டேன்??? உன் இடுப்பில கை வெச்சா நீ என்ன கொறஞ்சா போகபோற.. இதனால உன் கற்பு பறிபோயிடும்னு பயப்படறியா?? இல்ல யாருக்காக உன் கற்பை காப்பாத்தற...' என்றான் சற்றே எள்ளலாக.

வாயை மூடுங்க பிரபு! 

ஏன் உண்மையை சொன்னால் கசக்குதோ??

யாருகிட்ட என்ன பேசறீங்கனு தெரிஞ்சுதான் பேசறீங்களா பிரபு? நான் உங்க மனைவி!

அது உனக்கு நினைவிருக்கா சக்தி! நீ என் மனைவினு நினைப்பு உனக்கு இருந்த முதல் கேள்வியே கேட்டு இருக்க மாட்ட! சோ உனக்கு தெரியுது நீ என் மனைவினு! நான் இப்போ என்ன செய்துட்டேன் இவ்வளவு பதட்டம் உனக்கு? கஷ்டப்படறீயே கொஞ்சம் உதவி செய்யலாம்னு வந்தது தப்பா?

மௌனம் மட்டுமே பதில் குழலியிடம்!

'நான் முன்னாடியே உன்கிட்ட சொல்லிட்டேன்.. உன் விருப்பமில்லாம எதுவும் செய்ய மாட்டேனு...உன் விருப்பம் எனக்கு டைவர்ஸ் கொடுப்பதுனா எனக்கு ஓகே.. என் வாழ்க்கை எனக்கு பிடிச்சவங்க கூட அமைத்துக்க சொன்னியே... அப்போ திரும்பவும் நாம ரெண்டு பேரும் தான் மேரேஜ் செய்துக்கனும்... ஏற்கனவே ஒரு முறை செலவு செய்து கல்யாணம் செய்தாச்சு... அதை பிரேக் செய்து... திரும்பவும் நமக்கு மேரேஜ்னா கொஞ்சம் லூசுனு நினைப்பாங்க நம்மை... பரவாயில்லையா உனக்கு'

இதை பேசிக்கொண்டே ஹாட் டவல்லை எடுத்து அவள் முகத்தை அழுந்து துடைத்துக்கொண்டிருந்தான். கை, கால்களையும் துடைதுவிட்டு கையை சுத்தம் செய்துவந்து ஆப்பிளை துண்டுகளாய் பகிர்ந்து மனைவியிடம் கொடுத்தான். ஆரஞ்சு ஜூஸ் தம்ப்லரும்! அவன் துடைப்பதை தடுத்து நிறுத்த நினைத்த குழலியை 'ஷ்ஷ்..' என்று சிறுபிள்ளைக்கு சொல்வது போல் மிரட்டினான்.

வைத்தகண் வாங்காமல் தன்னையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த மனைவின் முகத்திற்கு முன் கையை அசைத்தவாறு அவனது கன்னத்து குழி புன்முறுவலுடன் 'என்ன??' என்றான் கண்களால். இடம் வலமாய் தலையசைப்புடன் ஏதுமில்லை என்னும் பதில் தந்தாள் குழலீ.

அவள் கூந்தல் சரிந்து வந்து அவள் ஆப்பிள் சாப்பிடுவதை தடை செய்ய அங்கிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து வந்து குழலியின் இடது கையில் கொடுத்துவிட்டு சரிந்து விழுந்த அவள் தலைமுடியை சீர் செய்து போனி டெய்ல் போட்டுவிட்டான். டீனா எடுத்துவந்த குங்கும பிரசாதத்தை எடுத்து அவள் நெற்றி வகிட்டில் சின்ன கீற்றாக இட்டு... சிதறிய துகள்களை ஊதிவிட்டு... நெற்றியோடு நெற்றி முட்டி.. இவ்வளவற்றையும் கண்களைமூடி ஆழ்ந்து அனுபவித்து வந்த குழலீயின் துடிக்கும் இமைகள் மீது முத்தமும் வைத்தான்.

அவள் அருகில் அமர்ந்தவன் கைகளில் இருந்த கண்ணாடியை வாங்கி வைத்துவிட்டு ஆப்பிள் துண்டுகளை எடுத்து ஊட்டிவிட்டான். இடையிடையே ஆரஞ்சு ஜூஸ் வேறு! நான்கு கண்களும் இரண்டற கலந்து மௌனமே மொழியாய் பேசிக்கொண்டிருக்கும் நேரம் யாரோ கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்தனர். இவர்கள் பேச்சும் தடைப்பட்டது.

இவளது ஆக்சிடண்ட் பற்றி கேள்விப்பட்டு குழலீயின் வேலன் பெரியப்பா... அவரது மனைவி, மகன், மருமகளுடன் வந்திருந்தார்.

ஏன் குழலீ? இப்படிதான் வந்துகிட்டு இருந்த டிரக் முன்னாடி போய் விழுவாங்களா? கொஞ்சமாவது அறிவிருக்கா? இது தான் நீ படிச்ச லட்சணமா?'

பிரபுவின் மனதோ..'அவ எங்க டிரக் முன்னாடி போய் விழுந்தா? நின்ன இடத்திலேயே நின்னுக்கிட்டு இருந்தா... என்ன பண்றது? கார் பார்க் செய்திட்டு வந்தவ ரோட்டை வேகமா கிராஸ் செய்து வந்திருக்கனும்... நான் வரதை பார்த்து அதிர்ச்சியில் ஒரு நொடி நின்னவளுக்கு இந்த யாழ் வந்து அடுத்த அதிர்ச்சி கொடுத்து அவளை பாதியிலேயே நிறுத்திவிட்டாள். அந்த வழியா வந்த டிரக் இவ மேல மோதிடுச்சு....அதுவும் ரொம்ப வேகமா கூடயில்ல ... இதுல இவ போய் விழுந்தாலாம்!'

கொஞ்சமாவது அறிவிருக்கா? கல்யாணம் பண்ணி புருஷனோட குடும்பம் நடத்துறதை விட்டுட்டூ... இப்படி வந்து அடிப்பட்டு உன் புருஷன் உனக்கு பணிவிடை செய்யறா மாதிரி ஆக்கி வெச்சிருக்கியே.. உனக்கே இது நியாமா தெரியுதா?

'அய்யோ மாமா! திரும்பவும் முதலுக்கே மோசமா? இப்படியேல்லாம் பேசி அவளுக்குள்ள தூங்கிட்டு இருக்கற ஃபேமினிஸ்ட் பெண் சிங்கத்தை தட்டி எழுப்பிடாதீங்க! இப்படியாவது என் மனைவியை கூல்டவுன் செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சுதேனு நான் சந்தோஷப்படறேன்! இதுல நீங்க வந்து குழப்பாதீங்க'

அதற்குள் பெரியம்மா.. ஏன் குழலி நான் வேணுனா உன் துணைக்கு இங்கே இருக்கட்டுமா? மாப்பிள்ளை எப்படி உன்னை தனி ஆளாய் பார்த்துக்க முடியும்.. அவரும் ஊருக்கு போகனும் இல்ல?? பொண்ணுக்கு பொண்ணாய் சில வேலைகள் நான் தான் செய்ய முடியும்...

பதில் இல்லை குழலீயிடமிருந்து!

நீங்க ஊருக்கு போங்க மாப்பிள்ள... நான் பார்த்துக்கறேன் என் பெண்ணை... 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.