(Reading time: 16 - 32 minutes)

ப்போ பேசலைனா தப்பாயிடுமே... சரி பேசி சமாளிப்போம்.. ' அத்தை... உங்க பெண்ணை பத்தி நான் சொல்லனும்னு இல்ல ஆனா அவளை பாத்துக்க யாரும் தேவையில்ல.. ஏன் நீங்க என்ன .. நானும் கூட அவ பக்கத்தில இருந்து பார்த்துகனும்னு அவசியமில்லை... இத்தனை வருஷமா நீங்க தான் பாத்துகிட்டு இருந்தீங்களா? மாமா இறந்ததிலிருந்து குழலீ அவளையும் அவ குடும்பத்தையும் அவளே தனியாளா தானே பார்த்துகிட்டா... அதனால.. அவளுக்கே அவளை பார்த்துக்க தெரியும்... ஷி இஸ் சேல்வ் பில்ட்.. அவளே சமாளிச்சுப்பா... நான் ஊருக்கு போனாகூட! சோ தேங்கஸ் உங்க உதவிக்கு!' என்றான் பிரபு.

எனவோ மாப்பிள்ள யாருதான் நாங்க சொல்றதை கேட்கறீங்க? என்னவோ செய்யுங்க! ஏதாவது உதவி தேவைனா கால் செய்யுங்க... நாங்க அரேஞ்ச் பண்ணறோம்.. ஏனா டேக்சாஸ்லயிருந்து அடிக்கடி வந்து போக முடியாது பாருங்க.. அதனால தான் சொல்லறேன்! சரி... பார்த்துக்கோ குழலீ... நாங்க புறப்படறோம்!

அவர்கள் சென்றுவிட்டனர். திரும்பி வந்து அவள் அருகில் அமர்ந்தவன்..'எப்படி இந்த மாதிரி ஆளுங்களை வைத்து மேனேஜ் செய்த சக்தி?? ஹாரிபிள் பீபுள்!' என்றான்.

பூங்குழலீ அவனை முரைத்துக்கொண்டிருந்தாள்.

அய்யோ ஏதோ தப்பா சொல்லிட்டேன் போல??

என்ன ஆச்சுடா? ஏதாவது தப்பு செய்துட்டேனா?

அப்போ நீங்க ஊருக்கு புறப்பட போறீங்க? இவ்வளவு நேரம் என்கிட்ட சொன்னது எல்லாம் பொய் தானே? அது எப்படி... 'அவளுக்கே அவளை பார்த்துக்க தெரியும்... ஷி இஸ் சேல்வ் பில்ட்.. அவளே சமாளிச்சுப்பா... நான் ஊருக்கு போனாகூட!'.

இல்லடா அது வந்து....

சொல்லுங்க... அவங்கதான் எப்படி பேசினாங்கனு கேட்டீங்கல... பதிலுக்கு நீங்க யாரு என் மனைவியை பார்த்துக்கனு கேட்டீங்களா? அவளை பார்த்துக்க கணவன் நான் இருக்கேனு சொன்னீங்களா??? எப்படி அவளே சமாளிச்சுபாளா?? தயவு செய்து நீங்க புறப்படுங்க ஊருக்கு!

விடாமல் பேசிக்கொண்டிருந்தவளை பாவமாய் முகத்தை வைத்து பார்த்துக்கொண்டிருந்தவன்... ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் அவள் பேச்சை நிறுத்த அவளது முகத்தை பற்றி கண்ணோடு கண் பார்த்தவாறு 'நான் மட்டுமில்ல நீயும்தான் என்கூட இந்தியா வர... எத்தனை நாள் நானும்தான் உன் இஷ்டபடியே உன்னோட ஸ்கிரிப்ட் படியே வாழ்றது! கொஞ்ச நாள் இந்த டேரக்டர் ஸ்கிரிப்ட் படியும் வாழலாம்... என்று அவள் இதழ்களை சிறை செய்தான் தன் இதழ்களால்!

என் அன்பார்ந்தசில்சீ நண்பர்களே! இன்றுடன் சரியாய் ஒரு வருடமாகிறது என் உயிர்சக்தி யின் முதல் எப்பிசோட் சில்சீயில் வெளிவந்து.. இந்த ஒரு வருட காலமும் என்னுடன் பயனித்த கருத்துக்களை பகிர்ந்து என் ஆர்வத்தை தூண்டிய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

அடுத்த அத்தியாத்துடன் என் உயிர்சக்தி முடிவு பேரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன் நீலா...

Episode # 23

Episode # 25

{kunena_discuss:833}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.