(Reading time: 18 - 35 minutes)

னாலும் அது ஒரு டெம்ப்ரரி ஃபீல் தானே தவிர, நேரம் வர்றப்ப நிஜம் புரியுறப்ப கல்யாணத்தை முழு மனதாய் ஏற்கும் பக்குவம் உள்ளவள்தான் நிலவினி என பவிஷ்யாவிற்கு நம்பிக்கை. சோ இப்போ வந்த நேரத்துல இருந்து வழக்கம் போல உற்சாகம் குறையாமல் அவள் வாயாடிக் கொண்டிருந்ததால் மனதளவில் இந்த கல்யாணத்தை நிலவினி விரும்புகிறாள் என்றே நினைத்தாள் பவிஷ்யா.

 “ஏய் என்ன? என்னைப் பார்க்க விளையாடுற மாதிரியா இருக்கு? நான் படு சீரியஸாதான் ப்ளான் போட்டுட்டு இருக்கேன்….” நிலவினியின் டோன் அவள் உண்மையைதான் கூறுவதாக புரிய வைக்கிறது பவிஷ்யாவை.

“அந்த ஜெயநாதன் பொண்ணுக்கு கொண்டல்புரம் மில்காரங்க வீட்ல சம்பந்தம் பேசி முடிச்சுருக்கானாம்….அவளுக்கும் நம்ம பெரியவளுக்கும் ஒரே வயசுதான…இவ கல்யாணத்தையும் சீக்கிரம் முடிக்கனும்…” தன் அப்பா  அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தது ஞாபகம் வருகிறது பவிஷ்யாவிற்கு.

கல்யாணம் நிச்சயமாகிட்டுன்னு அடுத்தவங்க வரைக்கும் தகவல் வந்த பிறகு கல்யாணத்தை நிறுத்தினா இந்த நிலுவும் அவ ஃபேமிலியும் மனசு கஷ்டப்டுற மாதிரி எவ்ளவு விஷயத்தை ஃபேஸ் செய்ய வேண்டி இருக்கும்? மாப்பிள்ளை சரியில்லைனா நிறுத்துறது வொர்த்……பட் இது என்ன சின்னப்பிள்ளத்தனம் என்றிருந்தது பவிஷ்யாவிற்கு.

ஆனால் நிலவினி இந்த டோனில் இருக்கும் போது எதிர்த்து பேசினால் என்ன நடக்கும் என்றும் பவிஷ்யாவிற்கு தெரியும். ஆக அவள் போக்கில் போய்தான் சரி செய்தாக வேண்டும்.

 “அப்படி என்னடி ப்ளான் செய்திறுக்க?” குட் ஃப்ரெண்ட் டோனிற்கு மாறினாள் பவிஷ்யா.

“விளையாட போறேன்……. நான் விளையாடுற விளையாட்டுல இந்த மாப்ள வீடு எப்படி தலை தெறிக்க ஓடுதுன்னு பாரு…”

“அதான் அதென்ன விளையாட்டு?” இவள் என்ன செய்து வைக்க போகிறாளோ என்றிருந்தது பவிஷ்யாவுக்கு.

“ உன்ட்ட அப்பவே சொன்னேனே சாத்து சாத்து மாத்து மாத்து….”

“நான் இப்ப உன்னை மொத்து மொத்து….சும்மா சும்மா என் லைன்ல தலையிடாத” சொல்லும் போதே பவிஷ்யாவின் மனதிற்குள் தன் கண்ணோடு சேர்த்து சிரித்தான் அவன்……  அந்த நினைவை ஒதுக்கித் தள்ளும்படியாய்  தலையை ஆட்டிக் கொண்டாள் அவள்.…..

“ப்ச்….பவி…பீ சீரியஸ்….உன்னைப் போய் சம்பந்தமில்லாம அந்த வீட்டோட பேசிகிட்டு….” நிலவினிதான்

“மொதல்ல மாத்திகல்யாணம், மோதல் ஃபைட்னு வரைக்கும் கதை சொல்லிட்டு….இப்ப பேசுற பேச்சை பாரு”

“அது ஜோக்….இது சீரியஸ்….சரி சரி…இப்ப என் ப்ளான சொல்றேன் கேளு… அந்த மாப்ளவீட்டுகாரங்க உங்க பொண்ணுக்கு என்ன செய்யனும்னு நினைக்கிறீங்களோ அது உங்க இஷ்டம்…..நாங்க அதுல தலையிட மாட்டோம்னு சொல்லிட்டாங்களாம்….அதை சொல்லித்தான் அப்பா இந்த மாட்டுக்கார மாப்ளைய தலைல தூக்கி வச்சு ஆடுறாங்க……நான் ஒரே பொண்ணு…அப்பாவோட அத்தனை சொத்தும் எனக்குத்தான்னு தெரியாத முட்டாள் குடும்பமா அது…..அதான் பேரத்துக்கு வரலை….அதை அப்பா ஏன் புரிஞ்சுக்கலைனு தெரியலை….நான் இதை base செய்து தான் என் காய மூவ் பண்ணப் போறேன்…”

“என்ன நிலு செய்யப் போற?”

“என்னை விட வசதியான பொண்ணுனு ஒரு பொண்ணு ப்ரஃபைல் அவங்களுக்கு அனுப்பனும்……அதுவும் ரொம்ப இம்ப்ரெசிவா பில்டப்லாம் கொடுத்து….அப்போ அவங்க அது பின்னால போய்டுவாங்க…..குறஞ்ச பட்சம் எங்க வீட்டோட வெட்டிங் பேச்சை ஸ்லோடவ்ன் செய்வாங்க….அதைவச்சு பணத்துக்காக வேற சம்பந்தம் பேசிட்டாங்கன்னு அப்பா காதுல விழுற மாதிரி செய்யனும்……அதை கேள்விபடுறப்ப நல்லவேளை நம்ம பொண்ணு தப்பிச்சான்னு தான் அப்பாவுக்கு தோணும்…வருத்தம் இருக்காது…”

“……………..”

“எப்படி இந்த ஐடியா?.... எதாவது சொல்லு…”

“ஏன் நிலு நிஜமாவே நீ கல்யாணத்தை நிறுத்ற ப்ளான்லதான் இருக்கியா?” பரிதபமாய் கேட்டாள் பவிஷ்யா. நிலவினியின் மேல் உண்மையான அக்கறை கொண்டிருந்தவளுக்கு இந்த திருமணம் நிற்பதால் வரும் மன வேதனைகள் மனதிற்குள் வர உள்ளுக்குள் தவிக்க தொடங்கி இருந்தாள் அவள்..

உண்மையாக முறைத்தாள் நிலவினி.

“இவ்ளவு நேரம் நான் என்ன கதையா சொல்லிட்டு இருந்தேன்..….” கோபம் இருந்தது அவள் குரலில். “சரி விடு…..நீ கொடுக்ற ரியாக்க்ஷன்லயே தெரியுது இது ஒர்க் அவ்ட் ஆயிடும்னு….நைட் உட்கார்ந்து இதுக்கு ஃப்ரொபைல் எல்லாம் ரெடி பண்றேன்…நாளைக்கு அதை எப்படியாவது மாப்ள வீட்ல சேர்க்கனும்”

நிலவினி விடை பெற தயாரானாள்.

அவளது வீடு ஒன்றும் தூரத்தில் இல்லைதான் ஆனால் அவ்வளவு எளிதாக இவளும் அவளும் மீட் பண்ணி விட முடியாது. வீட்டை விட்டு வெளியே கால் வைக்க ஒவ்வொரு முறையும் அப்பாவிடம் பெர்மிஷன் வாங்குவதற்குள் இவளுக்கும் அவளுக்கும் போதும் போதும் என்றாகிவிடும்… டவ்ண் வாழ்க்கையின் எழுதப் படாத சட்டம் குறுக்க வந்து நிக்கும்.

 அதில் நிலவினிக்கு மேரேஜ் வேற ஃபிக்‌ஸ் ஆகி இருக்குது…..இனி மீட் பண்றது ரொம்பவே கஷ்டம்…இதில் இப்போது இவளை விட்டு விட்டால் எப்போது பேசி, இவளுக்கு எப்போது நிலமையை புரிய வைக்கவாம்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.