(Reading time: 16 - 32 minutes)

ப்படியே அவளை அள்ளிக்கொண்டான் ரிஷி 'போடா... உன் சாக்லேட்டை நீயே வெச்சுக்க. தீக்ஷா என் பொண்ணுடா...' அதன் கன்னங்களில் முத்தமிட்டான் ரிஷி.

எல்லாரிடமும் புன்னகை பிறக்க சஞ்சாவின் முகத்தில் கொஞ்சமாக ஏமாற்றம் பரவியதும் நிஜம். அதற்கும் மேலாக கொஞ்சம் திகைத்துத்தான் போனான் சஞ்சா.

'எப்படி ஒரே நாளில் அவனிடம் ஒட்டிக்கொண்டாள் குழந்தை????. இதுதான் ரத்த பந்தம் என்பதா??? இதை பிரிக்க நான் யார்?

சின்ன புன்னகை கலந்த பெருமூச்சுடன் அதன் அருகில் வந்து சாக்லேட்டை அதன் கையில் கொடுத்துவிட்டு அதன் கன்னம் வருட அவன் முகம் பார்த்தது குழந்தை. அவனை ஏமாற்றி விட்டோம் என்று தோன்றி இருக்க வேண்டுமோ???

'தீக்ஷா  நாளைக்கு டாடிகிட்டே வந்திடுவேன்...' என்றது மெதுவாக.

'சரிடா... சரிடா பட்டு செல்லம். நாளைக்கு வந்திடு சரியா? என்று அதன் கன்னத்தில் முத்தமிட்டவன்  ரிஷியின் முகம் பார்த்து சொன்னான்.....

'நீயும் ஊருக்கு வந்து வீட்டுக்கு வரவே இல்லைடா .நாளைக்கு காலையிலே எல்லாருக்கும்  நம்ம வீட்டிலே தான் சாப்பாடு'

You might also like - Vasantha bairavi... A neat family story...

ரிஷி குடும்பம் விடை பெற்று செல்ல அவர்கள் கார் சென்ற திசையையே சிறிது நேரம் பார்த்திருந்தான் சஞ்சா. தீக்ஷா அவனிடம் ஒட்டிக்கொண்டதை இன்னமும் அவனால் நம்பவே முடியவில்லை. இது தான் ரத்த பந்தமா???? 

அவன் நினைவுகள் கொஞ்சம் பின்னோக்கி நகர்ந்தன. தீக்ஷா பற்றிய விவரங்கள் அவனுக்கு தெரிய வந்தது ஒன்றரை வருடங்களுக்கு முன்னால். ரிஷி இந்த நாட்டை விட்டு லண்டன் சென்று விட்டிருந்த நேரம் அது. அப்போது சஞ்சா நடித்துக்கொண்டிருந்த  ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு செங்கல்பட்டில் நடந்துக்கொண்டிருந்தது.

அந்த திரைப்படத்தில் அவனுக்கு தங்கையாக நடித்துக்கொண்டிருந்த ஒரு துணை நடிகையின் குழந்தை தீக்ஷா. அந்த துணை நடிகை தான் திவாகரின் தங்கை. தீக்ஷாவின் தந்தை உயிரோடு இல்லை.

.அப்போது தீக்ஷாவுக்கு ஒன்றரை வயது இருக்கும். குழந்தைகள் என்றால்  அவனுக்கு உயிர் என்பதால் படப்பிடிப்பு இடைவேளைகளில் தீக்ஷாவுடனே  பொழுதை கழிப்பான் சஞ்சா. அது எப்படி நடந்ததோ????  அவனிடம் ஒட்டிக்கொண்டது குழந்தை. அவனும் அதன் மீது பாசம் வைத்து விட்டிருந்தான்

அந்த படப்பிடிப்பின் பொது தீக்ஷாவின் அம்மா நோய் வாய் பட மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு உதவுவதற்காக தீக்ஷாவின் அம்மா தனது வாழ்க்கையின் கடைசி நிமிடங்களை எண்ணிக்கொண்டிருந்த மருத்துவமனையை அடைந்திருந்தான் சஞ்சா. அங்கே தான் அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கே தனது தங்கையுடன் இருந்தான் திவாகர். அவனை  பார்த்ததும் எழுந்து அமர்ந்தாள் அந்த நடிகை. 

'நீங்க என்னை பார்க்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் அண்ணா.' என்றாள் சஞ்சாவை பார்த்து. 'என் மனசிலே ரொம்ப நாளா இருக்கிற ஒரு விஷயத்தை உங்க ரெண்டு பேர் கிட்டேயும்  சொல்லணும்' என்றாள் திவாகரையும் பார்த்தபடியே.

இருவரும் கேள்வியாக பார்க்க அவளை பார்க்க நான் தான் ஏழையாவே பிறந்து ஏழையாகவே சாகறேன். என் பொண்ணாவது வசதியா வளரணும். அதுக்கான அதிர்ஷ்டம் அவளுக்கு இருக்கு. அவளோட சித்தப்பா அவ்வளவு பெரிய நடிகரா இருக்கும் போது அவளுக்கு என்ன கவலை. அவளை அவர்கிட்டே சேர்த்திடுங்க'

சத்தியமாக சஞ்சாவுக்கு எதுவுமே புரியவில்லை. 'நீ யாரை பத்தி சொல்றே? என்றான் அவளை பார்த்து.

'உங்க ஃப்ரெண்ட் ரிஷி...'  என்றாள் அவள் நிதானமாக.

சுரீரென பொங்கியது சஞ்சாவுக்கு. 'உளறாதே...'  உயர்ந்து ஒலித்தது சஞ்சாவின் குரல்.

'நான் உண்மையைதாண்ணா சொல்றேன்' என்றாள் அவள். 'அவர் சந்திரிக்கா மேடமோட சொந்த பையன் இல்லை.!!!! என் வீட்டுக்காரரும் அவரும் ஒண்ணா பிறந்த ரெட்டை பசங்க. ஆனா அவரும், அவங்களை பெத்த அம்மாவும் இப்போ உயிரோட இல்லை.'

அதிர்ந்து எழுந்தான் சஞ்சா. அவனுக்குள்ளே கொதித்தது, பணத்திற்காக அவர்கள் போய் சொல்கிறார்கள் என்றுதான் முதலில் நினைத்தான் சஞ்சா.

'நான் பொய் சொல்ல மாட்டேன் அண்ணா' என்றாள் அவள். 'எங்க வீட்டுக்காரர் பார்க்க ரிஷி மாதிரியே இருப்பார். அவர் பிறந்த போது அவர்கூட இன்னொரு பையன் பிறந்ததுக்கு ஆதாரம் இருக்கு. அவங்க அம்மா இந்த விஷயத்தை அவர்கிட்டே சொல்லி இருக்காங்க. ஆனா எந்த நிலையிலும் அவரை தன்னோட தம்பின்னு சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கி இருக்காங்க. அதனாலே அவர் இருந்த வரைக்கும் அவங்க தம்பியை தேடி போனதில்லை' என்றாள் அவள்.

சஞ்சா அவள் வார்த்தைகளை உடனே நம்பி விடவில்லை. ஆனால் அவனுக்கு தெரிந்த சில துப்பறியும் நிறுவனங்களை வைத்து. அந்த திசையில் அவன் ஆராய துவங்கியபோது அவள் சொல்வது உண்மை என நிரூபிக்கும் ஆதாரங்கள் அவனுக்கு கிடைத்தன. அதிர்ச்சியில் மூழ்கி கிடந்தான் சஞ்சா. அதற்குள் தனது அம்மாவை இழந்திருந்தாள் தீக்ஷா.

தனது சுய முகத்தை காட்ட ஆரம்பித்தான் திவாகர். 'ரிஷி அங்கே வந்தே ஆக வேண்டும்' என்றான் அவன். யோசிக்க யோசிக்க மனம் பதறியது சஞ்சாவுக்கு.

'அம்மா... நீ நிஜமாவே என் அம்மா இல்லையாமா? இத்தனை நாள் என்கிட்டே இருந்து இதை மறைச்சசுட்டியாமா? ரிஷியின் உதடுகள் இப்படி ஒரு கேள்வியை எழுப்பினால் சந்திரிக்காவின் நிலை என்னவாகும்?? ' நினைக்கும் போதே பதறியது சஞ்சாவின் உள்ளம்.

எப்படி?????? இதை எப்படி தாங்கிக்கொள்வான் என் நண்பன். அவன் எல்லாமாக நினைக்கும் வைதேகி அவனை பெற்றவள் இல்லை என்ற உண்மையை எப்படி தாங்கிக்கொள்வான் அவன்??? உடைந்து, துவண்டு போய் விட மாட்டனா??. இல்லை இதை நான் அவனிடன் எந்த நிலையிலும் சொல்வதாக இல்லை.' தீர்மானாமாக ஒரு முடிவுக்கு வந்திருந்தான் சஞ்சா.

ரிஷி குடும்பத்தின் வாரிசு யாருமற்ற அனாதையாக வளருவதையும் விரும்பவில்லை சஞ்சா. அந்த நிமிடமே தீக்ஷாவுக்கு டாடியாகி போனான் அவன். திவாகரை பண மழையில் நனைய வைத்து சில நாட்கள் குழந்தையை பாதுக்காக்கும் பொறுப்பையும் கொடுத்திருந்தான். அவ்வபோது தீக்ஷாவை சந்திப்பதையும் நிறுத்தியதில்லை சஞ்சா.

எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்த நேரத்தில்தான் இந்த உண்மைகளை அரவிந்தாட்சன் தெரிந்துக்கொண்டிருக்க வேண்டும். இதை வைத்து, இந்த உண்மையை வைத்து சந்திரிகாவையும், ரிஷியையும் ஒரு சேர தோற்கடித்து விட முடியுமே.!!!!!! அவர்களை கலங்க செய்து விட முடியுமே!!!

பழைய நினைவுகளில் ஒரு பெருமூச்சு எழுந்தது சஞ்சாவிடம். இனி அரவிந்தாட்சன் தனக்கு எதிராக செயல் பட மாட்டார். இனி உண்மைகள் ரிஷியை தொட வாய்ப்பில்லை என்று தோன்றியது சஞ்சாவுக்கு. மனதிற்குள் கொஞ்சமாக நிம்மதி எட்டிப்பார்த்தது.

ஆனால் அவன், சந்திரிக்கா, ராமன் மூவருமே ஒரு உண்மையை அறிந்திருக்கவில்லை!!!!! ரிஷியை பெற்றவள் இன்னமும் உயிருடன் இருக்கிறாள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை!!!!! அதுவும் அவர் சஞ்சாவின் அருகிலேயே அவன் வீட்டிலேயே இருக்கிறார் என்று அவனுக்கே தெரியவில்லை.!!!!

Episode # 13

Episode # 15

மழைச்சாரல் தொடரும்......

{kunena_discuss:886}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.