(Reading time: 6 - 12 minutes)

17. கிருஷ்ண சகி - மீரா ராம்

நீ இப்பவே போயாகணுமா ராஜா?...” - காவேரி

“ஆமா மதர்… நான் கண்டிப்பா போய்த்தான் ஆகணும்… போயிட்டு நாலைஞ்சு நாளில் வந்திடுவேன்…”

“அவ்வளவு நாள் ஆகுமா?...”

krishna saki

“ஆமா மதர்… முக்கியமான ஆப்பரேஷன் எல்லாம் இருக்கு… நான் போயே ஆகணும் மதர்…”

“ஹ்ம்ம்… புரியுது ராஜா… ஆனா இந்த நேரத்துல நீ அங்க?...”

“மதர்… கவலைப்படாதீங்க… நாங்க சீக்கிரம் வந்துடுவோம்…”

“நாங்கன்னா?...”

“நானும் நதிகாவும் மதர்…”

“அவ இப்போ எதுக்கு ராஜா?... அவ இங்கேயே இருக்கட்டுமே…”

“இல்ல மதர்… அவ என் கூட இருக்கட்டும்… நான் திரும்பி வரும்போது அவளை இங்க விட்டுட்டு போயிடுறேன்… இப்போ அவ என் கூட வரட்டும்…”

“சரி… ராஜா… உன் விருப்பம்…” என அவர் சற்றே வருத்தத்துடன் கூற, மகத் ஆதரவாக அவரின் கைகளைப் பிடித்துக்கொண்டான்…

காவேரியிடம் கிளம்புகிறேன் என சொல்லிவிட்டு வெளியே வந்தவன், நதிகாவையும் கிளம்ப சொல்லிவிட்டு வந்த போது ருணதியை சந்தித்தான்…

“துருவனை பத்திரமா பார்த்துக்கோ… அவனை தனியே விடாத… பாட்டிகிட்ட விட்டுட்டு வந்துடு அவனை…”

You might also like - Kadhalai unarnthathu unnidame... A romantic story...

“நீங்க சொல்லுறதைப் பார்த்தா… மறுபடியும்?...” என அவள் இழுக்க,

“அப்படி எல்லாம் எதுவுமில்லை… எதுக்கும் நாம கவனமா இருக்குறது நல்லதுன்னு சொல்லுறேன்… அவ்வளவுதான்… நீ தேவை இல்லாம மனசைப் போட்டு குழப்பிக்காத…”

“ஹ்ம்ம்… சரி… நதிகா எதும் அவங்களைப் பத்தி சொன்னாளா?...”

“ஹ்ம்ம்… முகமூடி போட்டிருந்ததால அவங்க யாருன்னு அவளுக்கு தெரியலை…”

“பாவிங்க… யாரு இப்படி செஞ்சாங்கன்னு தெரியலையே…”

“தெரியவரும் சீக்கிரம்… நீ தைரியமா இரு…” என சொல்லியதும், அவளும் தலை அசைத்தாள்..

சில நிமிட மௌனப் பரிமாற்றத்திற்குப் பின்,

“நான் கிளம்புறேன்… நீ பார்த்து பத்திரமா இரு… காலையில இங்க வரும்போதும், சாயங்காலம் வீட்டுக்குப் போகும்போதும்… ரொம்ப கவனமா இரு…”

“எனக்கு என்ன வந்தாலும் பரவாயில்லை… என்னைப் பத்தி நான் கவலைப்படுறதா இல்லை…” என அவள் அலட்சியமாக பதில் சொன்னதும்,

“உன்னை கவனமா இருன்னு சொன்னேன்… அதை மட்டும் செய்… மிச்சத்தை நான் பார்த்துப்பேன்…” என அவன் குரலில் ஒரு அழுத்தத்துடன் சொல்ல,

அவள் அவனை புரியாமல் பார்த்தாள்…

“என்னாச்சு?...” என அவன் கேட்க

அவள் “இல்லை… நீங்க சொன்னது புரியலை….” என்றாள்…

“இப்போதைக்கு புரியாமல் இருப்பதே நல்லது…” என்றவன் அவள் அவனை பார்த்துக்கொண்டிருக்கும்போதே,

“நான் ஊருக்குப் போகிறேன்…” என சொல்ல,

“என்ன…” என திகைத்தவள், “போயிட்டு வரேன்னு சொல்லுறதுக்கு உங்களுக்கு என்ன?...” என கோபமாக வார்த்தைகளை வெளியிட,

அவன் மனதிலோ புன்னகை தவழ்ந்தது…. முகத்திலோ எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை அவன்…

“என்ன சொன்ன?...” என அவன் அவள் சொன்னது காதிலேயே விழாதது போல் கேட்க

“இல்ல… பொதுவா.. எங்க கிளம்பினாலும், போயிட்டு வரேன்னு சொல்லணும்னு பெரியவங்க சொல்லுவாங்க… அதான்…” என அவள் மிக அமைதியாய் சொல்ல,

அவன், “ஓ…” என்றான்….

அவள் அமைதியாகவே இருக்க,

“ஹ்ம்ம்… வரேன்…” என்றபடி சொல்லிவிட்டு, அவள் புன்னகையை பார்த்தபின்பே அங்கிருந்து அகன்றான்…

டேய்… ஜித்…” என கத்திக்கொண்டே தருண் வர,

“டேய்… அவன் தான் எதுவோ போல் இருக்கான்ல… நீ கொஞ்ச நேரம் சும்மா இருடா…” என்றான் ராஜேஷ்…

“அவனை ஏண்டா திட்டுற?... அவனாவது என்னை கூப்பிடுறானே… எனக்கு சந்தோஷம் தான்…” என்றான் ஜித் சற்றே வருத்தத்துடன்….

“ஏண்டா… என்னாச்சு… எதுக்கு நீ இப்படி பேசுற?...” -ராஜேஷ்

“வீட்டுல ஒரே பிரச்சினைடா… செம கடுப்பா இருக்குடா அங்க இருக்கவே… சே…” என்றான் வருத்தம் மறைந்து கடுப்புடன்…

“என்னாடா மச்சான் நடந்துச்சு?... நீ இவ்வளவு வருத்தப்பட்டு நான் பார்த்ததே இல்லையே… என்னாச்சுன்னு சொல்லு மச்சான்?...” என தருண் அவன் தோளில் கைவைத்து கேட்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.