(Reading time: 6 - 12 minutes)

விஜய்… வந்துட்டாண்டா… அவன் வந்ததும் அம்மாவுக்கு கை கால் ஓடலை… அவனைத்தூக்கி வச்சு கொண்டாட்டம்… இதுல பத்தாததுக்கு அப்பா வேற… அவன் மேல பாச மழை பொழியுறார்…. என்னால அந்த கொடுமை எல்லாம் பார்க்க முடியலைடா… எரிச்சல் வந்துட்டுடா…”

“ஓ… உன் தம்பியா… அவன் வந்துட்டானா?... அவன் வெளீயூரில் தானடா இருந்தான்?... இப்போ சும்மா உங்க அம்மா-அப்பாவை பார்க்க வந்திருப்பான்… விடுடா… இரண்டு மூணு நாளில் போயிடுவான்… பாவம் பல வருஷம் கழிச்சு வந்திருக்கான்ல… விடுடா…” – தருண்..

“நீ வேற ஏண்டா மச்சான்… கூட கொஞ்சம் எரிச்சல் படுத்துற?... அவன் இங்கேயே டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்துட்டான்…” என தன் தலையின் மீது கை வைத்து சொல்ல

“என்னது… ஒரேடியா வந்துட்டானா?... அய்யய்யோ…” என தருணும் தொப்பென்று அமர

“டேய்… உனக்கென்ன லூசா?... அவன் தான் கூடப்பிறந்த தம்பி மேல கொஞ்சம் கூட பாசம் இல்லாம இருக்குறான்னா நீயும் அவனை விஜய்க்கு பகையாளி ஆக்காத… பேசாம வாயை மூடிட்டு இரு…” – என்றான் தருணிடம் சற்றே கடுமையுடன் ராஜேஷ்..

You might also like - Oru kootu kiligal... A family drama...

பின்னர், “ஜித்… அவன் உன் தம்பி… அவனை இத்தனை நாள் நீ தள்ளி வச்ச… அவன் எல்லாத்தையும் பொறுத்துகிட்டான்… இன்னமும் அவனை உன் அம்மா அப்பா கிட்ட இருந்து பிரிச்சி வைக்கிறது எனக்கென்னாமோ சரியா படலைடா…” என்றான் ஜித்திடம்…

“இல்ல ராஜேஷ்… அவன் வந்து கொஞ்ச நேரம் கூட ஆகலை… அதுக்குள்ள என்ன மாயம் செஞ்சானோ, என்னை அதட்டி கூட பேசாத அம்மா இன்னைக்கு என் சட்டையை பிடிக்கிறாங்க… என்னை எப்பவும் திட்டுற என் அப்பா, இன்னைக்கு என்னமோ அவன் தான் தன் பையன் மாதிரி பேசுறார்… மொத்தத்துல அந்த வீட்டுல எனக்கு எந்த மரியாதையும் இல்லடா…”

“டேய்… என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்லு… அம்மா எதுக்கு உன் சட்டையைப் பிடிச்சாங்க… நீ அப்படி என்ன செஞ்ச?...” – ராஜேஷ்..

ராஜேஷ் அவ்வாறு கேட்டதும், வீட்டில் நடந்ததை சொன்னான் அவர்கள் இருவரிடத்திலும் ஜித்…

ஜித் சொன்னதைக் கேட்டு ராஜேஷ் பேச ஆரம்பிக்கும் முன்,

“டேய்… இப்பதான் எனக்கு விஷயமே புரியுது… இவன் வர்றான்னு தான் நீ ப்ளானை டிராப் பண்ண சொல்லி எனக்கு அவசரம் அவசரமா போன் பண்ணியா?...” என ஜித்திடம் கேட்டான் பரபரப்புடன் தருண்…

“ஆமாடா…” – ஜித்…

“அட கடவுளே… நம்ம திட்டம் கெட்டுப்போனது இவனாலதானா?... சே…. அந்த ருணதியை ஈசியா உன் பக்கம் திருப்பியிருக்கலாம்… அதுக்குள்ள இப்படி ஆட்டத்தை கலைச்சிட்டானேடா… போச்சே… ஒரு கோல்டன் சான்ஸ்…” என தருண் கோப்பட…

ராஜேஷிற்கு எதுவோ பாதி புரிந்தும் புரியாதது போல் இருந்தது…

“டேய்… என்ன கோல்மால் பண்ணீங்க?... எனக்குத் தெரியாம…” என படபடவென ராஜேஷ் கேட்க

“டேய்… என்னடா பெரிய கோல்மால்… அதை தான் அந்த விஜய் வந்ததால விட்டு தொலைச்சிட்டானே இவன்… சே… போச்சு… இனி அந்த திமிரு பிடிச்ச ருணதியை இவன் பக்கம் கொண்டு வர்றது ரொம்ப கஷ்டம்….” – தருண்…

“எதுவோ தப்பு பண்ணிருக்கீங்க… என்னடா செஞ்சீங்க?.. சொல்லித்தொலைங்க…” என ராஜேஷ் தருணிடம் சண்டை போட,

“அவன் கிட்ட ஏண்டா சண்டை போடுற ராஜேஷ்… உனக்கு என்ன இப்ப விஷயம் தான தெரியணும்… கேட்டுக்கோ… எனக்கு ருணதியை என் பக்கம் கொண்டு வர வேற வழி தெரியலை… அதான் துருவனை கடத்திட சொல்லி தருண்கிட்ட சொன்னேன்… தருணும் அவனுக்கு தெரிஞ்சவங்க மூலமா செஞ்சான்… சந்தோஷத்தோட, இனி ருணதி எனக்குத்தான்னு நம்பிக்கையோட வீட்டுக்குப் போனேன்… அப்பத்தான் விஜய் வந்ததை பார்த்தேன்… அதான் உடனே தருணுக்கு போன் போட்டு பிளானை நிறுத்த சொன்னேன்… விஜய் இந்த மாதிரி கேஸ்ல எஃஸ்பெர்ட்… அவன் மட்டும் இதை மோப்பம் பிடிச்சான் அவ்வளவுதான்… அவன் இங்க வந்து தொலைவான்னு நான் நினைக்கவே இல்லடா… என் திட்டத்தை கெடுத்து குட்டிச்சுவராக்கிட்டாண்டா இந்த விஜய்…” என ஜித் எண்ணியது நிறைவேறாத கோபத்தில் பக்கத்தில் இருந்த பாட்டிலை தூக்கி போட்டு உடைத்தான் ஜித்…

ஜித் சொன்னதைக் கேட்ட ராஜேஷிற்கு ஜித்தின் மேல் கோபம் பயங்கரமாய் வந்தது…

“நீ இப்படி செய்வேன்னு நான் நினைக்கவே இல்ல ஜித்…” என ராஜேஷ் கோபத்தில் கத்த..

“இவன் இப்படிதான் கத்திட்டே இருப்பான்… நீ காதுல வாங்காத ஜித்…” என்றான் தருண் அலட்சியமாக…

தருண் சொன்னதும், ராஜேஷிற்கு அங்கே நிற்க கூட பிடிக்கவில்லை… அவர்கள் இருவருக்கும் போதை தலைக்கேறி ஏதேதோ உளற, அவன் அவ்விடத்தை விட்டு வெளியேறினான் விருட்டென்று…

தொடரும்

Episode # 16

Episode # 18

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.