(Reading time: 5 - 10 minutes)

18. கிருஷ்ண சகி - மீரா ராம்

குட் மார்னிங்க் மகத்…”

“குட் மார்னிங்க் சார்…” என தன்னுடன் பணிபுரியும் டாக்டர் ஒருவருக்கு பதில் வணக்கம் சொல்லிவிட்டு தனதறையினுள் நுழைந்தான் அவன்…

பேஷண்ட்-ஐ பார்த்துமுடித்துவிட்டு டேபிள் வெயிட்டை வைத்து உருட்டிக்கொண்டிருந்தான் மகத்…

krishna saki

அந்நேரம்,

“தம்பி…” என்ற குரல் கேட்க

“வாங்க தாத்தா…” என்றான் அவன்…

சதாசிவம் தாத்தா அறையினுள் வேகமாக வருவதைப் பார்த்தவன்,

“வாங்க தாத்தா… எப்படி இருக்கீங்க… காலையில வீட்டுக்கு வந்தேன்… நீங்க இங்க வந்துட்டதா பாட்டி சொன்னாங்க… உடனே இங்க வந்தேன்… உங்களைக் காணோம்…” என சொல்ல

“நீ வந்துட்டேன்னு இப்போதான் அந்த டாக்டர் சொன்னார்… அதான் ஓடி வந்தேன்…” என்றார் அவரும்…

“இங்க தான தாத்தா இருக்குறேன்… எதுக்கு இவ்வளவு அவசரம்… வாங்க உட்காருங்க முதலில்…”

“அதெல்லாம் இருக்கட்டும்… நதிகா எப்படி இருக்குறா?...”

“நல்லா இருக்குறா தாத்தா…”

“அவளை அங்கேயே விட்டுட்டு வந்துட்டீயா?...” என அவர் இல்லத்தை நினைவுபடுத்தி கேட்க…

அவனோ “ஹ்ம்ம்… ஆமா தாத்தா… காலையிலேயே பார்வதி பாட்டிகிட்ட விட்டுட்டு வந்துட்டேன்….” என சொல்ல

தாத்தாவிற்கோ சந்தோஷம்… அது அவர் முகத்தில் பிரதிபலிக்க, அவனுக்கும் புன்னகை வந்தது…

“அங்க எல்லாரும் நல்லா இருக்குறாங்களா மகத்?...”

“எல்லாரும் நல்லா இருக்குறாங்க தாத்தா…”

You might also like - Kanaamoochi re re... A romantic comedy...

“ரொம்ப சந்தோஷம்ப்பா… ஆமா நீ இன்னும் இரண்டு மூணு நாள் கழிச்சு வருவேன்னு தான சொல்லிட்டு போன… ஆனா இப்போ சொன்ன தேதிக்கு முன்னாடியே வந்துட்டியே… எதாவது முக்கியமான விஷயமா?...”

அவர் கேட்டதும், அவன் சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தான்…

“என்னாச்சு மகத்?... எதாவது பிரச்சினையா?...”

“…….”

அவனிடமிருந்து பதில் வராது போக, அவர் அவனருகே சென்றார்…

“என்னாச்சுப்பா… எதாவது நடக்க கூடாதது நடந்துட்டா?...”

“தாத்தா…” என அவன் அவரின் கண்களைப் பார்க்க

“சொல்லு மகத்… என்னாச்சு?...” என அவர் சற்று அழுத்தம் கொடுத்து கேட்க

அவனும் நடந்ததை சொன்னான்….

“என்னால நம்பவே முடியலை மகத்… காவேரியா இப்படி செஞ்சது?...”

“ஆமா தாத்தா…. மதர் இப்படி செய்வாங்கன்னு நானும் எதிர்பார்க்கலை…”

“விடு மகத்… காவேரி ஆரம்பிச்சத இன்னைக்கு காவேரியே முடிச்சிட்டா…. அவ்வளவுதான்…”

“நீங்களும் இப்படி சொல்லுறீங்களே தாத்தா….”

“வேற என்ன சொல்ல சொல்லுற மகத்?.., காவேரி என் ஊர்க்கார பொண்ணு தான்… எனக்கு தங்கச்சி முறை கூட… அவ உன் வாழ்க்கையில குருமூர்த்தி பொண்ணை கொண்டு வந்ததுக்கும் ஒரு காரணம் இருக்கும்… இன்னைக்கு அவளை உன் வாழ்க்கையில இருந்து விலக்கினதுக்கும் ஒரு காரணம் இருக்கும்… ஆனந்த் போனதும் அவ வாழ்க்கையில படாத கஷ்டமா துன்பமா?... எவ்வளவு சமாளிச்சான்னு எங்க எல்லாருக்கும் தெரியும்… இன்னைக்கு அந்த இல்லத்தை இவ்வளவு தூரம் கொண்டு வந்ததுக்கு காரணமே அவ தான்… அவ இல்லன்னா இன்னைக்கு அந்த இல்லமே இருந்திருக்காது…” என சொல்ல

“உண்மைதான் தாத்தா… அந்த இல்லம் இல்லன்னா நானும் இருந்திருக்க மாட்டேன் இங்க இப்படி டாக்டரா உங்க முன்னாடி…” என்றான் அவன் சற்றே கண் கலங்கியபடி…

அவனின் கண்களைப் பார்த்தவர், பேச்சை திசை திருப்ப எண்ணி, “மகத்… நதிகாவை கடத்தினவங்க யாருன்னு தெரிஞ்சதா?...” எனக் கேட்க…

“இல்ல தாத்தா… அதைப் பத்தி தான் யோசிச்சிட்டிருக்கேன்….”

“இதுல யோசிக்க என்ன இருக்கு மகத்… நிச்சயம் குருமூர்த்தி பொண்ணு தான் செஞ்சிருப்பா… வேற யாரு இவ்வளவு கீழ்த்தரமா செய்ய முடியும்?...”

“இல்ல தாத்தா… எனக்கும் அவ மேல கொஞ்சம் சந்தேகம் தான்… ஆனா அவ இத செய்யலை தாத்தா…”

“இல்ல மகத்… அவதான் செஞ்சிருக்கணும்…”

“அவ செய்யலைன்னு என்னால உறுதியா சொல்ல முடியும் தாத்தா…” என்றான் அழுத்தமாக அவன்…

“எப்படி சொல்லுற மகத்?...” என புரியாமல் அவர் கேட்க

“அவ இப்படி செய்யக்கூடிய ஆள்தான் தாத்தா… அவளுக்கு இப்படி ஒரு எண்ணமும் இருந்திருக்கும்… அது எனக்கும் தெரியும்… அவளால ருணதிக்கு ஆபத்து வந்தாலும் வரும்னு தான் ருணதிக்கு துணையா எப்பவும் இருந்தேன்… ருணதி கூடவே நான் இருக்குறதால அவ கவனம் அடுத்து குழந்தைங்க மேல திரும்பிடுமோன்னு நான் நினைச்சதும் உண்மைதான்…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.