(Reading time: 10 - 19 minutes)

05. என் மனதை தொட்டு போனவளே - VJ G

தினேஷ் இறங்கி வந்தான், ரொம்ப ப்ரெஷாக இருந்தான், அவனிடம் ஜூஸைக் கொடுத்து, தானும் ஒரு கிளாஸ்ஸை எடுத்துக் கொண்டான், இருவரும் குடித்தவுடன், தாத்தா ரூமிற்கு அழைத்துக் கொண்டு போனான்

தாத்தா அவர்கள் இருவரையும் பார்த்தார், அவர் ருத்ராவின் பார்வையில் புரிந்துக் கொள்வார் ஏதோ இருக்கிறது என்று, அந்த அளவுக்கு அவர்களுக்குள் ஒரு புரிதல்.

'தினேஷ் வந்தியா வா, உனக்கு ஒரு பெண் பார்த்திருக்கிறேன், இந்தா போட்டோ, பார்த்துச் சொல் உனக்கு பிடித்திருந்தால், நாளைக்கே போய் பெண்ணை பார்த்துவிட்டு வரலாம்,' என்றார்

en manathai thottu ponavale

'நீங்களே முடிவு பண்ணிவிடுங்கள் அப்பா,'என்றான் மகன், அவர் ருத்ராவைப் பார்த்தார், அவன் கண்ணால் ஜாடைக் காட்டினான்

‘தாத்தா நான் ஒரு ஐடியா சொல்கிறேன், அந்தப் பெண்ணை அவர்கள் அண்ணனோ, தம்பியோ, ஹோட்டலுக்கு கூட்டி வரச் சொல்லுங்கள் அங்கே பார்த்துக் கொள்ளட்டும், அவர்களுக்குப் பிடித்தால் பேசிக் கொள்ளட்டும், என்ன சொல்கிறீர்கள் இருவரும்,’ என்று கேட்டு ‘சித்தப்பா முதல்ல போடோவைப் பாருங்கள் பெண்ணைப் பிடித்திருந்தால், நேரில் பார்க்கலாம்,'என்றான் ருத்ரா

தினேஷ் போடோவைப் பார்த்தான், பெண் நன்றாகத்தான் இருந்தாள்,'சரி, ஹோட்டலுக்கு வரச் சொல்லுங்கள், நானும், ருத்ராவும் போறோம்,’ என்றான் தினேஷ்

‘சரிப்பா நாளைக்கே வரச் சொல்கிறேன்,’ என்று ருத்ராவைப் பார்த்தார், ஒரு வெற்றிப் புன்னகை வீசினான் பேரன், அவனைப் பார்த்த நீலகண்டனுக்கு கர்வமாக இருந்தது.

'அப்புறம், தினேஷ், நம் வனிதாவுக்கு நல்ல வரன் வந்திருக்கிறது, நம் வீட்டில், ஞாயிற்றுக் கிழமை பெண் பார்க்க வரச் சொல்லப் போகிறேன், பையன் நம் ருத்ராவுக்கு தெரிந்தவன், பாங்கில் வேலை,’என்றார்,

'நல்லதுப்பா, நானே சொல்லனும்னு இருந்தேன், நம் வீட்டு பெண்ணை நாமே ஒன்றும் சொல்லக் கூடாது என்று விட்டு விட்டேன், அவள் ஒரு பையனுடன் சுத்துவதை நான் பார்த்தேன்' என்றான் தினேஷ்

தாத்தாவுக்கும், பேரனுக்கும் ஒரே ஷாக்,!யாருக்கும் தெரியாது என்று நினைத்திருந்தது, இவனுக்குத் தெரிந்திருக்கிறதே என்று,

'ஏண்டா என்னிடம் சொல்லவில்லை!நீ அப்பாவுக்கு சமம்டா தட்டிக் கேட்டிருக்க வேண்டாமா? இல்லை என்னிடமாவது சொல்லியிருக்க வேண்டாமா?, ஏதாவது ஏடா கூடமாக ஆகியிருந்தால், அந்தப் பெண்ணின் வாழ்க்கை அழிந்திருக்குமே, நம் வீட்டு பெண்ணில்லையா? சரி, இனிமேலும் இதைப் பத்தி யாரிடமும் சொல்லாதே உன் மனசிலிருந்து அழித்து விடு, சரி அவர்களிடம் பேசிவிட்டு உனக்குச் சொல்கிறேன், நீ போ!'  என்று அனுப்பினார்

ஒரு பெரு மூச்சு எடுத்து வெளியிட்டார்..

'என்ன ருத்ரா இது, யாருக்கும் தெரியாது என்று நினைத்திருந்தது, இவனுக்கு..... ,'என்று நிறுத்தினார்

'சரி விடுங்க தாத்தா, அந்தப் பையனுக்கே எல்லாம் சொல்லியாச்சு, அதனால் கவலைப் பட வேண்டாம், என்றான்

'சரி, என்ன தினேஷ், திடீர்ன்னு, கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டான்! ’ என்று விசாரித்தார்

அவனும் சிரித்துக் கொண்டே, நடந்த விஷயத்தை சொன்னான், ‘அதுமட்டுமில்லை இப்போ உங்களுக்கு நம் கார்த்திக்கின் விஷயமும் சொல்கிறேன்,’ என்று அதையும் சொன்னான், ‘அவனுக்கும் கல்யாணம் செய்துவிடுங்கள் தாத்தா, அதான் நல்லது அதுவும் கூடிய சீக்கிரமே,’ என்றான்

'இதை ஏண்டா என்னிடம் இத்தனை நாளா சொல்லலே,'

இல்லை, அதை சொன்னால் அவனுக்கு கல்யாணம் பண்ணிடுவீங்க, அவன் படிக்காமல் விட்டுடுவான், இப்போ, உங்களையும் அந்தப் பெண்ணையும் காட்டி பயமுறுத்தி அவனை படிக்கவைத்தேன்,அதான் சமயம் வரும்போது உங்களிடம் சொல்லலாம்  என்று,என்னை மன்னித்து விடுங்கள்  ' என்றான்

'போடா பைத்தியக்காரா, நீ எனக்கு பேரனா கிடைக்க என்ன தவம் செய்தேனோ என்று சந்தோஷப் பட்டுகொண்டிருக்கிறேன், ஒரே நாளில நீ மூன்று கல்யாணத்துக்கு வழி பண்ணியிருக்க, என்னோட ரெண்டு பிள்ளைகளை அவங்க வாழ்க்கை முறையை சரி பண்ணியிருக்க, நான் என்னென்னு சொல்லறது?' என்று கண்களில் கண்ணீரோடையே கூறினார்..

டுத்த நாள் காலையில் தாத்தா, தினேஷையும், ருத்ராவையும் கூட்டு அந்தப் பெண்ணின் தம்பியின் போன் நம்பரை கொடுத்து பேசிகொள்ளச் சொன்னார், ருத்ராதான் பேசினான் டைம், ஹோட்டல் பேர் சொல்லி வரச் சொன்னான், அடுத்து குமாரிடம் பேசி அடுத்த நாள் எத்தனை மணிக்கு வருகிறார்கள் என்று கேட்டான் , 'அவனும் காலையிலேயே வந்து விடுவோம் அங்கேயே நிச்சயம் வைத்துக் கொள்ளலாம் என்று அம்மா சொன்னார்கள்,' என்றான்,

‘குமார் உங்கள் வீட்டு அட்ரஸ் கொடுங்கள் நாங்கள் நேரே போய் உங்கள் அம்மாவிடம் பேசுவதுதான் முறை அதனால், அட்ரஸ் கொடுங்க,’ என்றான் ருத்ரா

'சரி, ருத்ரா நான் மெசேஜ் அனுப்பறேன்,'

‘நீங்கள் எத்தனை மணிக்கு ஆபிஸ் போவீங்க கொஞ்சம் பெர்மிஷன் போட முடியுமா, நாங்கள் காலையிலேயே வரோம், ‘என்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.