(Reading time: 10 - 19 minutes)

ரிப்பா, அப்ப நாங்க போறோம், வா செல்வம்,’ என்று எழுந்து போவதைப் போல் நடித்தான், எல்லோரும் சிரித்தனர்

‘சரி, என்ன ஸ்வீட் ஆர்டர், பண்ணலாமா?’ என்று கேட்டான் ருத்ரா

‘கண்டிப்பா, என்ன ஆர்டர் பண்ணலாமா, கல்பனா?’ என்று கண்ணை சிமிட்டி கேட்டான் தினேஷ், அவளும் வெட்கப் பட்டுக் கொண்டே, “சரி!” என்று தலை ஆட்டினாள்,

'என்ன ஸ்வீட்?' என்று எல்லோரையும் கேட்டு ஆர்டர் கொடுத்தான் ருத்ரா  

சந்தோஷமாக 'தாத்தாவுக்கு போன் செய்து சொன்னான், செல்வமும் தங்கள் வீட்டுக்கு போன் செய்தான், இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, இரு வீட்டாரும் பேசி இப்பவே வருகிறோம் என்று சொன்னார்கள், அவர்களிடமும் சொல்லி பெண்ணும், இப்பவே ஹோட்டலிலிருந்து நேரே இங்கு வந்துடட்டும் நாங்களும் பார்த்துவிடுவோம் என்று கூறி ருத்ராவுக்கு போன் செய்தார்கள், இங்கு நேரே எல்லோரும் வந்து விடுங்கள் அவர்களிடம் சொல்லிவிட்டேன்,’ என்றார்.

இவர்கள் எலோரும் சாப்பிட்டு கிளம்பினார்கள் வீட்டுக்கு, அங்கே உள்ளே நுழையும்போதே, எல்லோரும் இவர்களை வரவேற்றனர், கிண்டல் செய்தனர், எல்லாரும் சந்தோஷமாக கல கல வென்று பேசினர், சனிக்கிழமை என்றதனால் எல்லோரும் வீட்டில் இருந்தனர், பெரியவர்கள் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர், கற்பகம், தன் பெண்ணின் உதவியோடு, கேசரி கிளறி கொஞ்சம் பஜ்ஜியும் போட்டு எல்லோருக்கும் கொண்டு வந்தாள், பெண்கள் எல்லாம் அவளுக்கு உதவி செய்தார்கள், கணேஷின் மனைவி, கமலா, அப்போதுதான் உள்ளே வந்தாள், அவளிடம் விவரித்தார்கள்,தினேஷுக்கு வரப் போகும் மனைவியை ஏற இறங்கப் பார்த்தாள், பிறகு தன் பெண் வனிதாவைக் கூட்டிக் கொண்டு அவர்கள் ரூமுக்கு போனாள்,

"என்னடி, அவங்க சொன்னவுடன் கல்யாணத்துக்கு தலை ஆட்டிட்டியா, அம்மாகிட்ட கேக்கனும்னு ஏன் சொல்லல?"  

"இந்த வீட்டில, தாத்தாவுடைய வார்த்தைய யாரும் மீறமாட்டோம், அவரோட முடிவுதான், எல்லோருடைய முடிவும், இது உனக்கு எப்படி தெரியும்?"

"அப்புறம் என்ன சொன்ன, அம்மாவைக் கேட்டுச் சொல்றேன்னு சொல்லனுமா?யாரு என்னோட அம்மா? எங்க மூன்று பேருக்கும், அம்மா இருக்காங்களா, எங்க? அப்படியிருந்தா, ஏன் எங்களுக்கு எல்லாம் பாட்டியும் பெரியாம்மாவுமே  செய்யறாங்க, தாத்தாவும், ருத்ரா அண்ணாவுமே எல்லாம் செய்யறாங்க….?”

எங்க அம்மான்னு நீ கூட இருந்தால் தானே நான் சொல்வதற்கு! அசிங்கமா இருக்கும்மா அம்மா இருந்தும், எங்களுக்கு இல்லை, என்று நினைப்பதற்குபோதும் இந்த பேச்சு, ஒருவேளை நீ உண்மையாவே அம்மா என்ற கடமையை செய்ய நினைத்தால், வாயை மூடிக் கொண்டு இந்த கல்யாணத்தில் உன் பங்கை நீ செய், பிறகு, என் தங்கைகளுக்காவது, அம்மா என்று இனி கூட இருந்து உன் கடமையை செய், உன் பாசத்தைக் காட்டு..." என்று கூறி விடு விடு என்று கீழே சென்று விட்டாள்.

Episode # 04

Episode # 06

தொடரும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.