தாத்தாவுக்கு ஒரே ஆச்சர்யம் நமக்குத் தோணவேயில்லை இந்த சின்ன பையனுக்கு இருக்கிறது கூட நமக்கு இல்லையே என்று வருத்தப் பட்டார், அவனை தட்டிக் கொடுத்தார்,
'தாத்தா நீங்கள், பாட்டி, சித்தப்பா, அம்மா, அப்பா கிளம்புங்கள் நான் பெரிய வேண் எடுக்கிறேன், போகிற வழியில் பழம்,பூ, எல்லாம் வாங்கிக் கொள்ளலாம், அப்புறம் அவங்க நாளைக்கே நிச்சயம் பண்ணிடலாம் என்கிறார்கள், அதற்கு என்ன வாங்க வேண்டுமோ இன்றே வாங்கி விடுங்க' என்றான் .
'சரிப்பா' என்றார்
'தாத்தா.....கார்த்திக் கல்யாணம்கூட சீக்கிரம் முடித்துடுங்க அவங்களை அங்க ஊரிலேயே செட்டில் பண்ணிடுங்க, முடிந்தால்..' என்றான்
“சரி!” என்று தலையை ஆட்டினார்.
அங்கிருந்து வெளியே கிளம்பப் போனான், அங்கே தன் டேபிளில் மேலிருந்த பைக் சாவியை எடுத்துக் கொண்டு, பைக் எடுத்துப் போய் பழம், பூ எல்லாம் வாங்கி வந்தான்
அதற்குள் இவர்கள் எல்லாம் ரெடி ஆனார்கள், தங்களுடைய இன்னோவாவை எடுத்துக் கொண்டு வந்து அதில் எல்லோரையும் ஏறச் சொல்லி, தானே டிரைவ் செய்து கூட்டிப் போனான்
அங்கே குமார் வீட்டில் அவன் ரெடியாக காத்திருந்தான்,
“எல்லோரும் வாங்க,வாங்க,” என்று குமாரும் அவன் அம்மாவும் அழைத்தார்கள்
தாத்தாக்கும் பாட்டிக்கும் குமாரைப் பார்த்து நல்ல திருப்தி அடைந்தார்கள்,
குமார், ருத்ராவின் அம்மா, அப்பா, சித்தப்பா எல்லோருக்கும் அவன் அம்மாவை அறிமுகப் படுத்தினான்….
பிறகு தாத்தா கேட்டார், 'உங்கள் பூர்வீகம்….” என்று தொடங்கி, பரஸ்பரம்,தாங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியதை, தெரிந்துக்கொண்டார்கள், பிறகு குமா ரின் அம்மாவிடம், நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?' என்று கேட்டார் நீலகண்டன்
‘நான் என் வீட்டு மருமகளை எதிர்பார்கிறேன், உங்கள் பெண்ணை என் பையனுக்குப் பிடித்திருக்கிறது, அதே போல் உங்கள் பெண்ணுக்கும் என் பையனைப் பிடித்திருக்கிறது, எனக்கு அவ்வளவுதான் வேண்டும்,’ என்றார் குமாரின் அம்மா
எல்லோரும் அவனை குமார் என்று கூப்பிடுகையில், அவன் அம்மா கேட்டாள், ‘அவனை நாங்கள் சிவா என்போம்’ என்றார்... அதற்கு சிரித்துக் கொண்டே குமார் தன் அம்மாவிடம் சொன்னான், ‘ருத்ராவின் அப்பா பேரும் இதுதான் அதனாலே ருத்ரா என்னைக் குமார்ன்னு கூப்பிடுவார்,’ என்று சொல்லவும், சிவாவும், கற்பகமும் வாஞ்சையுடன் தன் மகனைப் பார்த்தனர்,
‘இந்த மாதிரி பையனை இந்தக் காலத்தில் பார்ப்பது ரொம்ப கஷ்டம், நல்ல பிள்ளை,’ என்றார் குமாரின் அம்மா
'சரி உங்களுக்கு வேண்டுமோ, வேண்டாமோ, நாங்கள் செய்ய வேண்டியது என்று ஒன்று இருக்கு இல்லையா,’என்றார் நீலகண்டன்
‘அது உங்க இஷ்டம் என்னவோ அதை செய்யுங்கள், ஆனால் ஒன்றே ஒன்று,பெண் ரொம்ப சின்ன வயது என்று சொன்னான்,என் மகன், எந்த ஒரு காரணமும் சொல்லாமல் சீக்கிரம் கல்யாணம் செய்து, எங்க வீட்டுப் பெண்ணை எங்களோடு அனுப்பிவிட்டு, நீங்கள் நிம்மதியாக இருங்கள்,'என்றார்
'சரி, அப்படியே செய்கிறோம்,' என்றார் நீலகண்டன்
'பெண்ணுடைய அப்பாக்கு ஏதாவது கேட்க வேண்டுமா மாப்பிள்ளையிடம்,' என்றார் நீலகண்டன், தன் மகன் கணேஷைப் பார்த்துக் கேட்டார்
'என்னப்பா, என்னிக்கு உங்களை மீறி நான் பேசியிருக்கேன்'என்றான் கனேஷ்
‘சரி அப்போ நீங்க நாளைக்கு வந்து விடுங்கள் நாளைக்கே நிச்சயம் செய்து விடலாம், எவ்வளவு பேர் வருவீர்கள் என்று சொன்னால், எல்லா ஏற்பாடும் செய்ய சரியாய், இருக்கும், அப்படியே மாப்பிள்ளையோட “விரல்” அளவு வேண்டும்,மோதிரம் வாங்க,’என்றார் தாத்தா
ருத்ரா தான், தன் மோதிரத்தை குமாரின் கை விரலில் போட்டு சரியா இருக்கா என்று பார்த்தான், ‘ஒரு சுற்று பெரிதாக வேண்டும்,’ என்றான்,
‘சரி,நாங்கள் கிளம்புகிறோம்,’ என்று கிளம்பினார்கள்.
அவர்கள் வீடு வந்தவுடன் தினேஷை கூட்டிக்கொண்டு போனான் ருத்ரா, அவர்கள் போயிருக்கும் போது அந்தப் பெண் கல்பனாவும், அவள் தம்பியும் அங்கு காத்திருந்தனர், முதலில் அவர்கள் ருத்ராவைப் பார்த்தனர், அவன் உடனே ‘இவர்தான் தினேஷ், இவர்தான் மாப்பிள்ளை,” என்று கூறினான், நான்கு பேரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகப் படுத்திக் கொண்டனர், பிறகு “அவர்கள் பேசட்டும் நாம் வெளியே நின்று பேசலாமே,”'என்று அவள் தம்பி செல்வத்தை வெளியே கூட்டிக் கொண்டு போனான், ருத்ரா,
ஒரு பதினைந்து நிமிஷம் கழித்து வந்தார்கள், அவர்கள் நன்றாக பேசிக் கொள்ள ஆரம்பித்திருந்தார்கள், இவர்கள் வந்தவுடன் இருவரும் வெட்கப் பட்டார்கள், ‘நாங்கள் கரடியா,’ என்று ருத்ரா சிரித்துக் கொண்டே கேட்கவும் தினேஷ்தான், ‘ஆமாம், வந்துவிட்டாய் அப்புறம் என்ன?' என்றான்