(Reading time: 5 - 9 minutes)

23. கிருஷ்ண சகி - மீரா ராம்

வன் பெயரை கேட்டதும், எதோ யோசனையில் ஆழ்ந்தவளை ஏன் இப்படி யோசிக்கிறாள் என்ற எண்ணத்துடன் அவன் பார்க்க,

“நேரமாச்சு… நீங்க ஸ்கூலுக்கு போயிட்டு வாங்க… நாம ஈவ்னிங்க் பேசலாம்…” என்றவள்,

“மறக்காம சாப்பிடுங்க…” என சொல்லிவிட்டு சென்றுவிட, அவனும் பள்ளிக்குச் சென்றான்…

krishna saki

ங்கே,

“ஹேய்… மகத்… என்னடா… ஏன் இவ்வளவு லேட்?..” என அவனுக்காக காத்துக்கொண்டிருந்தான் அவனுடன் உடன் பயிலும் பிரபு…

“ஒன்னுமில்லடா…” என்ற மகத் அவனுடன் வகுப்பிற்குள் நுழைய, அதன் பிறகு இருவரும் பாடத்தில் மூழ்கினர்…

மதிய உணவு வேளையின் போது, பிரபு அவனுக்கு, தான் கொண்டு வந்த உணவை பிரித்து வைக்க, மகத் மறுத்தான்…

“டேய்… சும்மா டெய்லி… இதையே பண்ணாத… கொஞ்சம் தான வச்சேன்… மரியாதையா சாப்பிடு… கடுப்பேத்தாத… சொல்லிட்டேன்…” என படபடவென பொரிய,

அதைக் கண்டு கொள்ளாமல், மகத், தனது பையிலிருந்து டிபன் பாக்ஸை எடுத்து திறந்த போது, காலையில் அவள் அதில் சாப்பிட்ட நினைவு வர, தானாகவே அவன் இதழ்களில் புன்னகை உண்டானது…

அதைக் கவனித்த பிரபு, “இவனுக்கு என்ன லூசு பிடிச்சிட்டா?... சாப்பாட்டை பார்த்து சிரிக்கிறான்…” என்றெண்ணியவன்,

“டேய்… மகத்… என்னடா?... எதுக்கு இப்போ சிரிக்குற?..” என அவனிடம் கேட்டான்…

“எதுமில்லடா.. பேசாம சாப்பிடு…” என்ற மகத்திற்கோ, அவள் காலையில் அழகாய் எடுத்து சாப்பிட்ட நினைவே வர, பிரபு திட்டுவதையும் பொருட்படுத்தாமல் சிரித்துக்கொண்டே சாப்பிட்டு முடித்தான்…

பள்ளி முடிந்ததும் வேகமாய் கிளம்ப தயாரான மகத்தை இழுத்துப் பிடித்து நிறுத்த முயற்சி செய்து தோற்றான் பிரபு…

வேகமாக அவளின் பள்ளியை அடைந்தவன் அவளைத் தேடி பார்க்க, அவள் அவனைத் தேடுவது புரிந்தது…

“ஹாய்… கிருஷ்ணா…” என அவளருகில் சென்றான் மகத்…

“என்ன என்ன சொன்னீங்க?...” என அவள் ஒருவித பரபரப்புடன் கேட்க,

அவனோ, “கிருஷ்ணா… ன்னு சொன்னேன்….” என்றவன், அவள் பேசும் முன்னரே “ஏண்டா பிடிக்கலையா?...” என சற்றே வருத்தமாக கேட்க,

அவனின் அந்த குரல், அவளை எதுவோ செய்ய, “எனக்கு பிடிச்சிருக்கு…” என்றாள் வேகமாய்…

அவளின் பதட்டமான வேகமான அந்த பதிலில், அவளை விநோதமாக பார்த்தான்….

“என்னாச்சுடா???...” என்ற அவனின் கனிவான குரலில், சகஜமாக ஆனவள்,

“எதுமில்ல… நீங்க சட்டுன்னு பிடிக்கலையான்னு கேட்டதும், என்னமோ மாதிரி ஆயிடுச்சு… அதான் வேகமா பிடிச்சிருக்குன்னு சொன்னேன்… எனக்கு இப்படி பையன் பேர சேர்த்து வச்சீட்டீங்கன்னு பாட்டி கிட்ட சண்டை போட்டிருக்கேன் தினமும்… ஸ்கூலில் கூட அப்படித்தான்… ஆளாளுக்கு ஒரு பேர் சொல்லி கூப்பிடுவாங்க… பட் யாரையும் கிருஷ்ணான்னு நான் இதுவரை சொல்லவிட்டதே கிடையாது… அதை அவங்க சொல்ல ஆரம்பிச்சாலும் தடுத்துடுவேன்…”

அவளின் நீண்ட நிதானமான பதிலை கேட்டவன்,

“ஹ்ம்ம்ம்… நான் இப்போ உன்னை கிருஷ்ணான்னு தான சொன்னேன்… அப்போ நீ ஏன் என்னை தடுக்கலைடா?...” என அவன் அவளுடன் நடந்து கொண்டே கேட்க, அவளது நடை நின்றது…

“என்னம்மா?.... ஏன் நின்னுட்ட?...”

“மத்தவங்க சொல்லும்போது எனக்கு பிடிக்கலை… ஏன் என் பாட்டி கூப்பிடும்போது கூட கோபப்பட்டு திட்டுவேன்… ஆனா….”

“ஆனா…. என்னம்மா?...”

“நீங்க கூப்பிட்டப்போ எனக்கு எதுவும் சொல்லத்தோணலை…” என அவள் தன் சின்ன கண்களை உருட்டி விழிக்க, அவன் சிரித்தான்…

“எதுக்கு சிரிக்குறீங்க?...”

“இல்லடா… நீ இப்படி உருட்டி பார்க்கும்போது….”

“பார்க்கும்போது?.. என்ன?... சொல்லுங்க…”

“ஹ்ம்ம்… எனக்கும் சொல்லத்தெரியலையே…” என்றான் அவனும் இருகைவிரித்தபடி…

“அய்யோ… நான் சின்னப்பொண்ணு… எனக்கு சொல்லத்தோணலைன்னா கூட ஒரு லாஜிக் இருக்கு… பட் நீங்க என்ன விட அஞ்சு வருஷம் பெரிய பையன்… உங்களுக்கும் சொல்லத்தோணலைன்னு சொன்னா எப்படி சகி?...” என அவளும் மூஞ்சியை உம்மென்று வைத்துக்கொண்டு சொல்ல,

“ஹேய்… என்ன சொன்ன நீ?... மறுபடியும் சொல்லு?...” என அவன் ஆர்ப்பரிக்க,

“நான் என்ன சொன்னேன்… வளர்ந்தும் உங்களுக்கு சொல்லத்தோணலைன்னு சொன்னேன்… வேற எதுவும் சொல்லலையே…” என அவள் இலகுவாக சொல்லிக்கொண்டே தன் கையில் இருந்த வாட்டர் பாட்டிலின் கயிரை பிடித்து ஆட்டிக்கொண்டே நடக்க,

“இல்லடா… நீ என்ன சகின்னு சொன்ன…” என அவன் சொன்னதும், சற்று யோசித்தாள் அவள்…

“ஹேய்… நான் உங்கிட்ட தாண்டா பேசிட்டிருக்கேன்… காலையிலேயும் என் பேர் சொன்னதும் யோசனைக்குப் போயிட்ட… இப்பவும் அதே மாதிரி யோசிக்குற… என்னடா ஆச்சு உனக்கு?..” என அவன் சற்றே கவலையோடு கேட்கவும்,

“ஹ்ம்ம்.. உங்க பேருக்கு என்ன அர்த்தம்னு யோசிச்சிட்டிருக்கேன்…” என்றாள் அவள்…

“இவ்வளவு தானா?... இத எங்கிட்ட கேட்டிருக்கலாமே நீ அப்பவே…”

“ஹ்ம்ம்… சாயங்காலம் கேட்டுக்கலாம்னு தான் காலையில கேட்கலை…… ஹ்ம்ம்… சரி சொல்லுங்க… என்ன அர்த்தம்?...”

“மகத்ரு- கடவுள் விஷ்ணுவோட பேர்…”

“ஓ… என்னோடது ராதாராணி பேர்…” என அவள் முகம் மலர சொல்ல

“அப்படியா என்ன அர்த்தம்?... சொல்லுடா…”

“கிருஷ்ண ப்ராணாதிகா- ராதா இருக்குறாங்கல்ல, அவங்க பேர்… கிருஷ்ணருக்கு அவரோட சொந்த லைஃப்-அ விட அந்த ராதா தான் ரொம்ப பிடிச்சவங்களாம்…”

(Krishna Pranadhika - A name of Srimati Radharani, which means “She is dearer to Lord Krishna than His own life”.)

“சூப்பர்டா….” என அவனும் உளமாற சொல்ல,

“சரி… சூப்பர் சொன்னது இருக்கட்டும்… பாதி பேருக்கு அர்த்தம் சொல்லிட்டீங்க… மீதி பேருக்கு யார் அர்த்தம் சொல்லுவா?...”

“ஓ… சகி- அர்த்தமா?...”

“ஹ்,ம்ம்… ஆமா…”

“ஹ்ம்ம்… உன் பாதை வந்துடுச்சு… இப்போ போயிட்டு வா… நாளைக்கு காலையிலே வரும்போது சொல்லுறேன்… சரியா?...” என அவன் அவளுக்கு கை அசைத்து டாட்டா காட்டிவிட்டு செல்ல, அவளும் அவனுக்கு கை அசைத்து விடைபெற்றாள்…

தொடரும்

Episode # 22

Episode # 24

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.