(Reading time: 8 - 16 minutes)

26. நினைத்தாலே  இனிக்கும்... - புவனேஸ்வரி 

தீப்தியின் கன்னத்தில் அறைந்த கவீனுக்கே கைகள் சுரீர் என்று வலிக்கவும் தான் எவ்வளவு வேகமாய் அவளை அடித்து விட்டோம் என்பதை உணர்ந்தான் அவன் .. அதுவும் இத்தனை பேரின் முன்னே இப்படி நடந்திருக்கவே கூடாது .. இதுநாள் வரை தீப்தியாய் முன்வந்து தான் அவனிடம் உரிமை பாராட்டி கொண்டிருந்தாள் .. ஆனால் இன்று அவனது செயலினால் , அவனே உரிமை எடுத்து கொண்டது போல அல்லவா அர்த்தம் ஆகிறது ? ஆத்திரக்காரனுக்கு  புத்தி மட்டு என்பதை நிரூபித்து தலை குனிந்தான் கவீன் ..

" டேய் என்னடா பண்ணுறது ? ஏதாச்சும் டைலாக் சொல்லுடா எல்லாரும் அமைதியா இருக்குறத பார்த்தா , அடுத்து எல்லாரும் ப்ரின்சி ரூமுக்கு போகனும்டா " என்றான் செல்வம் கலவரத்துடன்.. அதுதான் சரி என்பது போல பெல் சத்தம் கேட்கவும்

" சனியன் புடிச்ச பெல்லு , எந்த நேரத்துல அடிக்கிது பாரேன் ..மவனே இன்னைக்கு எல்லாருக்கும் டண்டனக்கா த்தான் " என்றான் அருண் .. கன்னத்தில் கை வைத்தபடியே கவீனை  முறைத்து கொண்டு நின்றாள்  தீப்தி ..

ninaithale Inikkum

கவீன்  தரையை பார்க்க , தீப்தி கவீனை  பார்க்க , மற்ற அனைவரும் அவர்களை வேடிக்கை பார்க்க முதலில் சுதாரித்தவள் அனு  தான் .. தனதருகில் நின்ற நந்திதாவின் முகத்தை பார்த்ததும் சிரிப்பு தான் வந்தது அவளுக்கு ..

" அடியே வாயில கொசு ஈ எல்லாம் புகுந்து குடும்பம் நடத்த போகுது ..கடையை மூடு " என்றாள் ..

" என்ன அனு  இது "

" உன் வாய் தான் "

" ஐயோ அதை சொல்லல .. கவீன்  இப்படி பண்ணிட்டானே .. பாவம் தீப்தி "

" சாத்தான் வேதம் ஓதலாம் .. ஆனா சாத்தானுக்கே வேதம் ஓத கூடாது அமுல் பேபி "

" ப்ச்ச்ச் .. அவளை  நமக்கு பிடிக்காது தான் .,. அவள் அடாவடிக்காரி தான் .. அதுக்காக இப்படியா பண்ணனும் ?"

" நந்து ,  அவளை அறையனும்னு நினைச்சிருந்தால் கவீன்  அதை எப்பவோ பண்ணி இருக்கணும் ! ஜெனியை கஷ்டப்பதுத்தினபொது , அவன் கிட்ட வந்து கொழைஞ்சப்போது, இதுக்கெல்லாம் உச்ச கட்டமாய் நம்ம நெப்போலியன் அப்பா ..அதான் ஜெனியின் அப்பாக்கிட்ட  அவங்க லவ் பத்தி போட்டு கொடுத்தது , இப்படி எத்தனை சிட்டிவேஷன்ல நமக்கே அவளை அறைஞ்சா என்னன்னு  தோன்றி இருக்கு ? ஆனா அப்போ எல்லாம் அமைதியா இருந்தவன் இப்போ செம்ம கோபத்துல இருக்கான்னா கண்டிப்பா காரணம் இருக்கும்  .. "

" அதுக்காக ?"

" ஹே இந்த வாணிராணில வர்ற ராதிகா மாதிரி எல்லாரோட பிரச்சனையும் தீர்த்து வைக்க பிறந்தவள் மாதிரி சீன் போடாதே .. நமக்கு ஆயிரத்து எட்டு வேலை இருக்கு .. இப்படியே நின்னு வேடிக்கை பார்த்தா , அவளை நம்ம முன்னாடி அவமானப்படுத்த தான் கவீன்  இப்படி பண்ணான்னு சாத்தான் நெனச்சுக்கும் ..அதுகூட பரவாயில்ல , ப்ரின்சி இப்போ ரவுண்ட்ஸ் வர்ற நேரம் .. மாட்டினோம்னா , மட்டன் ஆக்கிருவார் .எப்படி வசதி? என்றவள் கூலாய் கேட்கவும் , அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வகுப்புக்கு ஓடினாள்  நந்து .. அவர்களின்  பாதையே தங்களது பாதை என்பது போல  செல்வன் அருணும்  நடக்க ஆரம்பிக்க , " தல இப்போ ஒன்னும் பேச வேணாம் வா " என்று செல்வம் கவீனையும் இழுத்து கொண்டு போனான் .. தீப்தி மட்டும் வகுப்புக்கு போகாமல் தனது அறைக்கு ஓடினாள்  ..

" நல்ல வேளை  மச்சி , கைய புடிச்சி இழுத்து என்னை  காப்பாத்தின .. என்ன பண்ணுறதுன்னே  தெரியாம போச்சு " என்று சிரித்தான் கவீன் ..அவனையே கேள்வியாய்  பார்த்தனர் இருவரும் ..

" என் மூஞ்சில இறுதிசுற்று  க்ளைமாக்ஸ் ஆ ஓடுது ஏன்டா இப்படி பார்கறிங்க  ?"

" தல , உனக்கு அவ்வளவு சீக்கிரம் கோபப்பட மாட்டியே .. என்ன ஆச்சு உண்மைய சொல்லு "

" அதுவா ?" என்றவனின் முகத்தில் தீவிரம் பரவியது

" மச்சி , நீ  வந்து " என்று செல்வத்தின் முகத்தை கூர்ந்து பார்த்தவன் சில நொடிகள் மௌனமாய் இருந்துவிட்டு ,

" நீ இல்ல , வேற யாரு கேட்டாலும் என்னால சொல்ல முடியாது டா " என்று கூறி ஓடியே விட்டான் வகுப்புக்கு .. அவன் எப்போதும் போலத்தான் இருந்தான் ..முகத்தில் எப்போதும் போல புன்னகைக்கு பஞ்சம் இல்லாமல் , செயலில் குறும்புக்கு பஞ்சம் இல்லாமல் தான் இருந்தான் அவன் .. வின்சியிடம் தப்பித்து ஓடி வந்த ஆருவுக்கு நடந்தது எதுவும் தெரியாமல் இருக்கவும், அவள் இயல்பாய் அவனோடு பேசிக்கொண்டு இருந்தாள் .. அனுவோ தன்னுடைய எதிரிக்கு நல்ல பரிசு தந்த நண்பனுக்கு எந்த பீச்சில் சிலை வைக்கலாம் என்ற அளவிற்கு  கற்பனையில் இருந்தாள் ..

" ஹப்பாடி நல்ல வேளை  ஜெலோ அங்க இல்ல " என்று நிம்மதியாய் இருந்தவனுக்கு தெரியாது , நடந்தது அனைத்தும் அவளுக்கு தெரியும் என்று ! நீண்ட நாட்களுக்கு பிறகு அன்றுதான் அடிக்கடி ஜெனியை பார்ப்பதும் ஜாடையில் பேசுவதுமாய் இருந்தான் கவீன் .. ஆனால் ஜெனியோ அவனை கண்டுகொண்டதாய் தெரியவே இல்லை .. அதற்காக ஒதுங்கி போகவும் இல்லை .. கவீனை  தவிர்த்து அனைவரிடம் பேசிக்கொண்டு இருந்தாள்  அவள் .. இந்த கண்ணாமூச்சிக்கு அன்று மதியமே ஒரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்ற முடிவுடன் பாடத்தை கவனித்தான் கவீன் ..

" ன்னத்தான் நடக்குதுன்னு பார்ப்போம் அண்ணா .. நான் கண்டிப்பா எல்லாரையும் கூட்டிட்டு வரேன் " என்று போனை வைத்த நளினியின்  முதுகில் கை வைத்து திருப்பினார் ஞானபிரகாஷ் ..

" வ ... வாங்க ..என்ன இப்போவே வந்துட்டிங்க ?"

“சும்மாதான் .. ஏன் வர கூடாதா ? "

" அப்படி நான் சொன்னேனா ?"

" உன் முகத்தை பார்த்தா , ஏதோ விருப்பம் இல்லாமல் வரவேற்ற மாதிரி இருக்கே " என்றார் அவரும் விடாமல் .

" நான் வந்தது உனக்கு பிடிக்கலையா நளினி ? இவ்வளவு பதட்டமாய் இருக்க ?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.