(Reading time: 8 - 16 minutes)

"ப்படி ஒன்னும் இல்லையே ..நீங்க எப்போ வந்திங்க ?"

" நீ உன் அண்ணன்கூட பேசிட்டு இருந்தியே அப்போதே வந்துட்டேன் " என்று புன்னகைத்தார் அவர் .. " அண்ணன் கூட பேசும்போதா ? இதையும் நம்ம எம்டன் சிரிச்சுகிட்டே சொல்றாரே... இதுக்கு பின்னாடி என்ன இருக்கோ நாராயணா " என்று மனதிற்குள் புலம்ப

" ஆமா யாரு போன்ல ? உனக்கு அண்ணன் எல்லாம் இருக்காங்கன்னு எனக்கு தெரியாம போச்சே .. ! இருந்த ஒருத்தரும்  செத்துட்டாருன்னு நெனைச்சேனே " என்றவர் கூறும்போதே

" என்னங்க " என்று கோபமும் எரிச்சலுமாய் குரல் உயர்த்தி இருந்தார் நளினி ..

" ஷ்ஷ்ஷ்ஷ் எதுக்கு கத்துற ? உன் அண்ணனும் அவர் உறவும் வேணாம்னு தலை முழுகிட்டு தானே வந்தோம் ? மறந்து போச்சா உனக்கு ?"

" எதையும் நான் மறக்கல .. அதுக்காக உயிரோடு இருக்குற என் அண்ணனை இப்படி சொன்னா நான் சும்மா இருக்கனுமா ?"

" என்னம்மா உரிமைக்குரல் ஜாஸ்தியா இருக்கு " என்று அவர் கேட்கும்போதே

" அம்மு , வரவர உன் மருமக என்னை கண்டுக்கவே மாட்டேன்னு இருக்கா பாரேன் " என்று துள்ளலாய் வீட்டுக்குள் நுழைந்தான் சந்துரு  கதிருடன் .. காலை நேரம் தந்தை ஹாஸ்பிட்டலுக்கு போயிருப்பார் என்ற நம்பிக்கையில் துள்ளலுடன் வந்தவன் , அங்கு அய்யனாரை போல நின்ற ஞானபிரகாஷை பார்த்து பின்வாங்கினான் .. கோபத்திலும் பதட்டத்தில் சிவந்திருந்தது நளினியின் முகம் .. ஏதோ ஒன்று சரி இல்லையே , என்று அவன் உணரும் முன்பே, அவனது வார்த்தைகள் அடுத்த கலவரத்திற்கு விதை போட்டு வைத்தது ..

" செத்தாண்டா சந்துரு " என்று வாய்க்குள் முணுமுணுத்தான் கதிர் .

" டேய் , என்னடா நடக்குது இந்த வீட்டுல ? " என்று கோபமாய் கர்ஜித்தார் அவர் ..

" ஒ .. ஒன்னும் இல்லையே அப்பா .. நீங்க எப்போ வந்திங்க ? "

" ஏன் வந்திங்கன்னு கேட்காமல் போனியே ரொம்ப சந்தோசம் சந்துரு "

"அப்பா !!!!!"

" சும்மா கத்தாத .. இப்போ நீ என்ன சொல்லிட்டு இங்க வந்த ? இந்த வீட்டுல எனக்கு தெரியாமல் என்னென்ன நடக்குதுன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா ? உங்க அம்மா என்னவோ அண்ணன்னு சொல்லிட்டு இருக்கா . நீ மருமகள்ன்னு  சொல்லுற ..என்னடா இதெல்லாம் ? நீயும் உன் அம்மாவும் எனக்கு பிடிக்காததை செய்யணும்னு முடிவெடுத்து இருக்கீங்களா  ?" என்று  அவர் கோபமாய் கேட்கவும்

" நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல அப்பா .. அம்மாவுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ..  நந்திதா மாமாவோட பொண்ணுன்னு தெரியறதுக்கு முன்னாடியே அவளை நான் மனசுல நினைச்சுட்டேன் அப்பா ..” என்று உண்மையறியாமல் உளறி கொட்டினான் .. மகனின் வாரத்தைகள் இடியாய் செவியில் "சந்துரு " என்று உறுமினார் அவர் .

“  உங்களுக்கும் மாமாவுக்கும் என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது .. ஆனா எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அவளோடுதான் ..குணா போன பிறகு நான் எப்படி இருந்தேன்னு உங்களுக்கே தெரியும் ..என்னை மாற்றியவளே அவதான் .. அவளை  வேணாம்னு நீங்க நினைச்சா, நான் சந்தோஷமாய் இருக்குறதையும் நீங்க வேணாம்னு நினைக்கிறதா தான் அர்த்தம் "

"ஓஹோ .. எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு இப்போ என்கிட்டே சொல்லுறியா சந்துரு ? எங்க இருந்து வந்தது இவ்வளவு தைரியம் ?"

" உங்க கிட்ட இருந்து தான்பா "

" .."

" நாம தப்பு பண்ணாதப்போ  எதுக்கும் பயப்பட கூடாதுன்னு நீங்கதானே சொன்னிங்க ?"

" கதிர் "

" அப்பா "

" நான் ஏதாச்சும் சொல்லுறதுக்குள்ள அவனை கூட்டிட்டு உள்ளே போ " என்றவர் சோர்வாய் பொத்தென நாற்காலியில் அமர்ந்து விட்டார் .. கணவனின் கோபத்தை சந்திக்க தன்னை தயார் படுத்தி கொண்டிருந்த நளினி , அவர் மௌனமாய் அமர்ந்து விடவும் பயந்தே போய்விட்டார் .. கணவரின் அருகில் அமர்ந்து அவரின் கையை பிடித்து கொண்டார் ..

" ன்னடி சொல்லுறான் உன் மவன் ? நந்திதா உன் அண்ணன் மகளா ?"

".."

" கேட்குறேன்ல சொல்லு ! "

" ஆமா "

" உனக்கு இது எப்போ தெரியும் ?"

" தெரியும் அவ இங்க படிக்க வந்தப்போவே "

" ஆக, அம்மாவும் மகனுமாய் சேர்ந்து என் முதுகுல குத்திட்டிங்க அப்படிதானே ? இவ்வளவு தானா இல்ல வேற ஏதும் இருக்கா ?"

" உங்ககிட்ட சொல்ல வேணாம்னு நினைக்கலைங்க .. ஆனா  உங்களுக்கு இது பிடிக்காதுன்னு தான் சொல்லல "

".."

" ஏதாச்சும் பேசுங்க "

" என்ன பேச சொல்லுற ? எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சு , நீங்க அவங்ககிட்ட பேசாமலா இருந்திங்க ? எனக்கு தெரியாமல் இருந்தா போதும்னு தானே நினைச்சிங்க ? அதுலயே தெரிஞ்சது இந்த வீட்டுல எனக்கு என்ன இடம் இருக்குன்னு "

" எதுக்கு இப்படி எல்லாம் பேசுறிங்க ? "

"என் இடத்துல நீ இருந்திருந்த இப்படி பேசிட்டு இருப்பியா நளினி ? ".. என்ன சொல்வார் அவரும் ? உண்மைதானே ? உண்மையை மறைக்க அவர்களுக்கு என்று ஒரு  காரணம் இருந்தாலுமே , தனது கணவர் பக்கமும் நியாயம் இருக்கிறதே ?

நளினியின் மௌனத்தை சகித்து கொள்ள முடியாமல் வீட்டில் இருந்து வெளியேறினார் ஞானப்ரகாஷ் .. அவர் காரை  எடுத்து கொண்டு போக, அவரின் நினைவுகளோ , அந்த வீட்டை சுற்றி பயணித்தது .. (என்ன நடந்துச்சு ? அடுத்த வாரம் சொல்றேன் )

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 25

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 27

நினைவுகள் தொடரும்...

Buvaneswari is continuing the story from where it was let off... Appreciate your comments but no comparisons between the three writers please...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.