" அவள் வரவுக்காக காத்திருந்தேன் ..
அவள் பார்வைக்காக காத்திருந்தேன்..
அவள் புன்னகைக்காக காத்திருந்தேன்
அவள் காதலுக்காக காத்திருந்தேன் ..
இன்று அவளின்
வார்த்தைக்காக காத்திருக்கிறேன் " கவிதை என்ற பெயரில் உளறி கொண்டிருந்தான் கவீன் ..
" ஹும்கும் தல , இதுக்கு நீ நாசா மாதிரி காத்துட்டு இருக்கோம்ன்னு ஒரே வார்த்தையில் முடிச்சிருக்கலாம் " என்றான் அருண் ..
" அட நீ வேற ஏன்டா ?" என்று கவீன் நொந்து கொள்ளும்போதே அங்கு வந்து நின்றாள் ஜெனி ..
" ஜெலோ "
" என்னை அப்படி கூப்பிடாத நீ "
" .. "
"என்கூட வா "
" எங்க ஜெனி ?"
" சொன்னதான் வருவியா " என்பதை போல பார்த்து வைத்தாள் அவள் .. " இவ வேற எதுக்கு முட்டை கண்ணை உருட்டுறா தெரியலையே " லேசாய் அடிவயிறு கலங்கியது அவனுக்கு .. இருப்பினும் அதை காட்டிகொள்ளாமல்
" உங்கப்பாவோட உளவாலிங்க நம்ம சேர்த்து வெச்சு பார்த்தா வீண் பிரச்சனை ஆகிடும் ஜெனி .. அதான் யோசிக்கிறேன் " என்றான் கவீன் உண்மையாய் ..
" அப்படியா என்ன நடக்கும் கவீன் ?"
" உனக்கு தெரியாதா ?"
" நீ தீப்தியை அறைஞ்ச மாதிரி , எங்கப்பா என்னை அறைவார் அவ்வளவு தானே ?" என்றாள் ஜெனி.. " செத்தான்டா மாப்பிள்ளை " என்று செல்வம் முணுமுணுக்க ,
" மச்சி உங்க குடும்ப பிரச்சனையை தீர்த்துட்டு கூப்பிடுடா ..நாங்க வரோம் " என்று செல்வத்தை கூட்டிக்கொண்டு எஸ்கேப் ஆகினான் அருண் ..
" துரோகி , இப்படி மாட்டி விட்டுட்டு போறானுங்க! ஊர தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்மணி என் கண்மணி " மனசுக்குள் அவனுக்கு பாட்டெல்லாம் கேட்க தலையை உலுக்கி கொண்டான் கவீன் ..
" இப்போ வர போறியா இல்லையா நீ ?"
" ம்ம்ம் " என்றவன் , பார்த்திபன் கையில ஆடுபோல் சிக்கிய வைகைப்புயல் மாதிரி தன்னை கற்பனை செய்து கொண்டே அவளுடன் நடந்தான் ..
இருவரும் நடந்த வழியில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை .. கவீன் குழப்பத்தில் இருந்தான் .. இவளிடம் எப்படி தன்னிலை விளக்கம் அளிப்பது ? என்ன மனநிலையில் இருக்கிறாள் என்பதையே கணிக்க முடியவில்லை அவனால் .. உண்மையை புரிந்து கொள்ளும் பொறுமையில் அவள் இல்ல என்றால் தான் சொல்வதெல்லாம் பொய்யென்று ஆகிவிடாதா ? அதற்காக அவளிடம் சொல்லாமலும் இருக்க முடியாதே ! கால்கள் அவள் போன போக்கில் போய்கொண்டிருக்க ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவனை ஜெனியின் குரல் நடப்புக்கு கொண்டு வந்தது ..
" முண்டம் கண்ணை எங்க வெச்சு இருக்க நீ ? இந்நேரம் தடுக்கி விழுந்துருப்ப " என்றாள் அவள் .. அவள் கோபமாய் பேச, அவனுக்கோ அவளது அக்கறை மனதிற்கு இதத்தை தந்தது .. அப்போதுதான் அவர்கள் இருக்கும் இடத்தை கவனித்தான் ..
" நாம இப்போ எதுக்கு இங்க வந்துருக்கோம் "
" ஏன் ?"
" உங்க லேடிஸ் ஹாஸ்டல்ல நான் எப்படி ஜெனி வர முடியும் "
" இது பாரு கவீன் ஓவரா நடிக்காத .. இதுக்கு முன்னாடி நீ எங்களை பார்க்க வந்ததே இல்லையா ? வார்டன் கிட்ட நான் சொல்லிகிறேன் .. வா " என்று முன்னே நடக்க " எல்லாம் என் நேரம் " என்று நொந்தபடி பின் தொடர்ந்தான் அவன் .. "இங்கயே உட்காரு " என்று அவனை மரபெஞ்சில் அமர சொல்லிவிட்டு சில நிமிடங்களில் தீப்தியின் கையை பிடித்து கொண்டு வந்து நின்றாள் ஜெனி ..
" ஜெ... னி " சத்தமே வராமல் இதழ்களை அசைத்தான் கவீன் ..
"என்கிட்ட உனக்கு பேச எதுவும் இல்ல கவீன் தீப்தி கிட்ட பேசு ... நீ ஏன் அப்படி நடந்துகிட்ட ?"
" என்ன சீன் போடுறியா ?"- தீப்தி
" நீ கொஞ்சம் பேசாமல் இருக்கியா ? எனக்கு உன்னை எப்பவும் பிடிக்காதுதான் .. ஆனா, அதுக்காக இவன் செஞ்சதை நான் சரின்னு சொல்ல மாட்டேன் .. "- ஜெனி
" உனக்கென்ன வேணும் இப்போ ? " என்பது போல விநோதமாய் பார்த்தாள் தீப்தி ..ஆனால் மனதிற்குள் ஜெனியின் செய்கையினால் பரவும் நிம்மதியை அவளால் தடுக்க முடியவில்லை .. தனது கடமை முடிந்து விட்டது போல இருவரையும் பார்த்துக்கொண்டே ஜெனி நகர அவளை கை பிடித்து நிறுத்தினான் கவீன் ..
M | Tu | W | Th | F |
---|---|---|---|---|
TA 🎵 MM-1-OKU 🎵 |
RTT |
MM-2-AMN |
PT |
UKEKKP 🎵 MM-1-OKU 🎵 |
UKEKKP |
UANI |
CM |
UANI |
UKAN |
RTT 🎵 UKEKKP 🎵 |
MM-2-AMN |
UKAN |
TM 🎵 UKEKKP 🎵 |
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Deepti adi vaanginatuku pinne irunta secret terinjiduchi.
Appo Kavin avalai innum frnd-aaga ninaipataal taan koba paddu irukiraan..
Jeny avaluku parintu pesumidam Kavin-i sorry solla solvatu... nalla scene.
Kavin adichathu konjam athigamnalum Dipthikaga evalau yosichirukar. Avanga nalathukaga than ellam seithirukar.
Anu than ettapiya
Flash back start agiduchu.
Subangini enna seithu thanoda anna family and thangai family ai pirichanga?
waiting to read mam.
Kavin, Theephi Jeni scene nalla irunthathu
Kavin Jeni apporach with Dheepthi is awesome.. than friend nalla irukkanum nu avan edutha steps.. really.. he is a good friend..
Nalini & Gnaprakash vazhvil nadandha vishayangal theriya aavala irukku,, waiting for FB