(Reading time: 12 - 23 minutes)

" ன்ன சொல்ற "

" உண்மைதான் ! நீ நினைக்கிற மாதிரி அவன் ஏழை இல்ல.. பணக்கார வீட்டு வாரிசு "

" பொய் சொல்ற நீ "

" இதுக்குத்தான் உன்னை அறைஞ்சேன் .. எப்போ பாத்தாலும் அடுத்தவங்க சொல்லுறதை கேட்குறதே இல்லை நீ  .. பிரகாஷ் யாருன்னு கேட்டேன் பொய் சொன்ன நீ .. அவன்கிட்ட பேசதேன்னு சொன்னேன் , என்னை தான் திட்டின நீ .. நேத்து அவன் உனக்கு " என்றவன் பிரகாஷ் தீப்தியின் நெற்றியில் முத்தமிட்டதை சொல்ல விரும்பாமல் பாதியில் நிறுத்தினான் ..

" இது பாரு , நீ எவனையாச்சும் லவ் பண்ணினா எனக்கென்ன ? சொல்லப்போனால் நான் சந்தோஷப்படணும் என்  ரூட் க்ளியர் ஆச்சுன்னு .. விட்டது தலைவலின்னு போயிருப்பேன் நான் பழைய கவினாய்  இருந்திருந்தால் .. ஆனா இப்போ எனக்கு உன்மேலயும் அக்கறை இருக்கு ..சரிதான் போன்னு விட சொல்லுறியா ?"

அவன் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை அவளுக்கு .. அவளுக்கே மனதினுள் பல கேள்விகள் எழுந்தன .. எல்லா கேள்விகளுக்கும் முன்னணியாய் இருந்த முதல் கேள்வி " என் பிரகாஷ் என்னிடம் பொய் கூறினானா ?" என்பதுதான் .. அருகில் இருந்த பெஞ்சில் பொத்தென அமர்ந்து தலையில் கை வைத்து அமர்ந்தாள் .. தான் சொல்ல வந்ததை சொல்லிவிட்ட நிம்மதியில் பெருமூச்சு விட்டான்  கவீன் .. லேசாய் ஜெனியின் பக்கம் சாய்ந்து " ஜெலோ மாமாவுக்கு ஜூஸ் கிடைக்குமா ?" என்று வழக்கம் போல  குறும்புடன் கேட்டு வைத்தான் .. நடந்ததை கேட்டு முடித்த அவளுக்கே தலை சுற்ற " ஞெ  " என்று முழித்தாள்  ஜெனி .. கவலை தோய்ந்த  தீப்தியின் முகத்தை பார்க்க அவனுக்கு பாவமாய் இருந்தது .. ஆனால் இந்த விஷயத்தில் அவள் எடுக்கும் எந்த முடிவும் தனது பேச்சை சார்ந்து எடுத்ததாய் இருக்க கூடாது என்று நினைத்தான் கவீன் .. இப்போதும் அவன் பேச்சை அவள் நம்பினாளா  ? கடவுளுக்குத்தான் வெளிச்சம் . அவள்முன் மண்டியிட்டு அமர்ந்தான் கவீன் ..

" உன்மேல எனக்கு எந்த பகையும் இல்லை தீப்தி .. You deserved to be happy . நீ சந்தோஷமா இருக்கணும் .. உன்கிட்ட பொய் சொல்லுறவன் எப்படி நல்லவனாய் இருப்பான்னு எனக்கு தெரியல .. அதை நீதான் உறுதி படுத்திக்கணும் .. உனக்கு ஏதும்  உதவி வேணும்னா என்னை கேளு .. மத்தபடி நீ தான் முடிவு எடுக்கணும் ..வா ஜெனி " என்று திரும்பி நடந்தான் ..

" கவீன் .. "

" .."

" தேங்க்ஸ் .. அண்ட் சாரி ஜெனி " என்றாள்  தீப்தி .. இருவருமே அவளை பார்த்து தலையாட்ட ,

" இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேனே " என்றான் அவன் .. " என்ன ?" என்பதுபோல இருவரும் பார்க்க

" நீ லேட்டா வர்றன்னு போட்டுகொடுத்த எட்டப்பன்  ச்சி  எட்டப்பி யாரு தெரியுமா ? "

" நந்துவா ?"

" ம்ம்ஹ்ம்ம்ம் அனு  " என்று சிரித்தான் அவன் .. இதற்கென்ன சொல்வது என்று அவள் திருதிருவென விழிக்க

" சரி அப்பறம் பார்க்கலாம் ..ஏதும்னா  கால் பண்ணு " என்றுவிட்டு சென்றான் கவீன் .. இதுதாங்க நடந்தது .. நம்ம தீப்தி பிரகாஷ் பிலுபிலுன்னு பிடிக்கிறது முன்னாடி நாம போயி ஞானபிரகாஷ் சார் ஆ பார்ப்போம் ..

கோபம் என்பதை விட வருத்தத்தில் உழன்று கொண்டிருந்தது ஞானபிரகாஷின் மனம் .. எத்தனையோ முயன்றும் திருமங்கலத்தின் பாரம்பரிய வீடு அவர் கண்முன்னே நின்றது .. காரை கடற்கரையோரம் ஓட்டி  கொண்டே அன்றைய சம்பவத்தில் மூழ்கிபோனார் ..அதே நேரம் தன் மடியில் படுத்திருந்த மகனின் கேசத்தை கோதிக் கொண்டே நடந்த நினைவுகளை கூறத் தொடங்கினார் ..

கொஞ்சம் கொஞ்சமாய் அன்றைய நாட்களில் புதைத்து போன நளினிக்கு தன் மேலேயே கோவமும் குற்ற உணர்ச்சியும் அதிகரித்தது ..என்னத்தான் இருந்தாலும் என் கணவனை  நான் விட்டு கொடுத்திருக்க கூடாதோ ? என்ற கேள்வியின் நினைவலைகளும் சீரிட , வாங்க என்னதான் நடந்துச்சுன்னு பார்ப்போம் .

மதுரை அருகே, திருமங்கலத்தில் கம்பீரமாய் தோற்றம் அளித்தது அந்த பாரம்பரியம் மிக்க பெரிய வீடு .. வீடு மட்டும் அல்ல , அந்த ஊரில் கண்பட்ட இடமெல்லாம் பாஸ்கரனின் தந்தைக்கு தான் சொந்தம். பணத்தில் மட்டும் இன்றி குணத்திலும் செல்வந்தராய் இருந்தவர் ரங்கன் , பாஸ்கரனின் தந்தை ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.