(Reading time: 12 - 23 minutes)

" கெட்டி மேளம் கெட்டி மேளம் " ப்ரோகிதரின் குரல் அந்த மண்டபத்தையே நிறைய நாதஸ்வர நாதத்தோடு அனைவரின் சிரிப்பொலியும் கலந்திருக்க , நளினியில்  கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தார் ஞானப்ரகாஷ் .. ஒரு மகளின் திருமணம் நின்று விட்டதே என்ற கவலை இருந்தாலும் , இன்னொரு மகளின் திருமணத்தை சீரும் சிறப்புமாய் நடத்தி வைத்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் பெற்றவர்  விழி நனைக்க , சந்தோசம் மட்டும் நிறைந்திருந்த மண்டபத்தில்  பொறாமையும் இயலாமையும் போட்டியிட கையில் இருந்த அட்சதையை வெறுப்புடன் மணமக்கள் மீது வீசினாள்  சுபாங்கினி.. தோற்றத்தில் அச்சு அசல் நளினியை போல இருப்பவள் , குணத்தில் வேறுபட்டே இருந்தாள் .. இரட்டை பிள்ளையை ஒரே மாதிரி வளர்க்கணும் என்ற எண்ணத்தோடுதான்  இருவரையும் சமமாய் பாவித்து வளர்த்தார் ரங்கன் .. ஆனால், குணத்தில் இருவருமே எதிரும்  புதிருமாகத்தான் நின்றனர் இருவரும் .. நளினி இயல்பிலேயே கலகலப்பானவள், விட்டுத்  தரும் மனப்பான்மை அதிகம் கொண்டவள் .. சுபாங்கினி அவளுக்கு அப்படியே நேர் மாறாக இருந்தாள்  ..

டாக்டர் , இஞ்சினியர் என்றாலே மிகபெரிய தொழிலாய்  பார்க்க பட்ட அந்த காலகட்டத்தில் ஞானபிரகாஷ் தனக்கு மருமகனாய்  வந்ததற்காக ரங்கனும் , அவரை கணவரை  அடைந்ததற்காக நளினியும் மிகவும் பெருமைபட்டனர் .. அந்த பெருமை , சுபாங்கினியின் மனதியில் வெறுமையையும் பகைமையையும் வளர்த்து விட்டது ..

" என்னைவிட ஒரு நிமிஷம் லேட்டா பிறந்தவளுக்கு எனக்கு முன்னாடியே கல்யாணமா  ? அப்படியே அனைவரும்  வற்புறுத்தி இருந்தாலும் , என்னை மனதில் வைத்து நீ திருமணத்தை நிறுத்தி இருக்க வேண்டும் ! " என்று  மனதிற்குள்ளேயே புலம்பி தள்ளினாள் ..தனது அக்காவிற்கு தன் மீது பகமை வளர்வதை உணராமலேயே , ஞானபிரகாஷுடன்  புகுந்த வீட்டிற்கு சென்று விட்டாள்  நளினி .. அதன்பின் வந்த நாட்களில் , சுபாங்கினியின் திருமண பேச்சு  , எடுத்த வேகத்தில் நின்று போனது .. தகுந்த வரன் கிடைக்காமல் நாட்களும் தள்ளி  போக , ஊராரின் பேச்சும் அவள் மனதை காயப்படுத்தியது ..

" வெஷம்  டீ .. உன் மனசெல்லாம் வெஷம் .. பாரு உன் தங்கச்சியோட நல்ல மனசுக்கு டாக்டர் மாப்பிளை கிடைச்சு இப்போ ஆண் குழந்தையோடு சந்தோஷமா இருக்கா .. உன் அண்ணனும் கல்யாணம் பண்ணி பெண் குழந்தையோட சந்தோஷமா இருக்கான் .. நீ தாண்டி இப்படி ஒண்டி கட்டையா இருக்க ! எல்லாத்துக்கும் ஒரு நல்ல மனசு வேணும் " என்று அவள் காது படவே பேசினார்கள் சிலர் ..

திருமணம் ஒரு பக்கம் தள்ளி போக , தங்கையின் கணவனை விட தகுதியில்  உயர்ந்தவனை திருமணம் செய்ய வேண்டும் என்ற சுபாங்கினியின் வீராப்பில் 5 வருடங்கள் ஓடியே போயிருந்தது .. 26 வயது யுவதியாய், மணப்பெண்ணுக்கே உரிய அழகுடன் தயாராகி கொண்டிருந்தாள் சுபாங்கினி.. அன்றைய தினம் அவளுக்கு  திருமணம்  என்ற களிப்பில் குடும்பமே ஆர்பரிக்க , சுபாங்கினி  மட்டும் மனதில் வேறொரு கணக்கு போட்டு வைத்திருந்தாள் .. அது என்ன? அடுத்த எபிசொட்ல சொல்லுறேன் .

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 26

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 28

நினைவுகள் தொடரும்...

Buvaneswari is continuing the story from where it was let off... Appreciate your comments but no comparisons between the three writers please...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.