(Reading time: 11 - 22 minutes)

05. உன்னால் மகுடம் சூடினேன்...!!! - அக்தர்

மாலை நேரம் வீட்டிர்கு கிளம்ப போன தோழியை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு நகரத்திலுள்ள மிகப் பெரிய அங்காடிக்கு சென்றாள் இந்திரா. சித்தாராம்மாவின் மகள் அஞ்சுவிர்கு பிறந்தநாள் என்பதால் துணி மற்றும் பரிசுப் பொருள் பகுதிகளை அலசி ஆராய்ந்து ஒரு அழகான புத்தாடை, மிட்டாய், பரிசு மற்றும் சில இனிப்பு வகைகளையும் வாங்கிக் கொண்டு ஷீத்தலுடன் அஞ்சுவை காண சென்றாள்.

வீட்டிர்கு வந்த புது விருந்தாளியான ஷீத்தலிடம் சித்தாராவின் இரண்டாம் மகள் ஜினு மட்டும் நன்றாக ஒட்டிக் கொண்டாள். வாங்கி வந்த பொருட்களை கொடுத்ததும் அஞ்சுவிர்கு சந்தோஷம் தாங்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் சித்தாராவிடம் கல்லூரியிலுள்ள தோழிகளுடன் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என கேட்டதற்கு 'ஒரு நல்ல வேலை வாங்கி உன் சொந்த சம்பாத்தியத்தில் தோழிகளுடன் என்ன வேண்டுமோ  செய்... இப்போது படிப்பை மட்டும் கவனி..' என்ற பதிலே முகத்தில் பாறையாய் வந்த மோத 'இனி எதையும் நானாக ஆசைப்பட்டு கேட்க மாட்டேன்' என்று வீர வசனம் பேசியவளின் விருப்பத்தை சரியான நேரத்தில் எந்த முன்னறிவிப்பும் இல்லாது நிறைவேற்றிவிட்டாள் இந்திரா.

அடுத்த நாள் காலை புத்தாடை அணிந்து மிதமான அலங்காரத்துடன் இளஞ்சிவப்பு நிற சுடிதாரில் அன்று மலர்ந்த ரோஜாவை போல் அழகாக வந்து நின்ற மகளை ஆசையாய் தழுவிய சித்தாரா மனமார வாழ்த்தவும் செய்தாள். கல்லூரி செல்வதற்கு முன் இந்திராவை பார்த்து விட வேண்டும் என வேலைக்கு கிளம்பிய தாயுடனே அஞ்சுவும்  கிளம்பினாள். சிறு வயதில் ஒரே ஒரு முறை பிராபகரன்  வீட்டிர்கு சென்றதோடு சரி அதன் பின் சித்தாராவும்  தன் மகள்களை அழைத்துச் சென்றதில்லை அவர்களும் அதை பற்றிக் கண்டு கொண்டதில்லை. 

Unnal magudam sudinen

அஞ்சுவை கண்டதும் நிரஞ்சனாவிர்கும் பிரபாகரனிர்கும் ஒரே ஆச்சர்யமாகி போனது. "எவ்வளவு அழகா வளந்துட்டா.. இதனால தான் மகளை கண்ணுல காட்டாம இருந்தீங்களா சித்தாராம்மா....?" என்ற நிரஞ்சனாவின் வார்த்தைகளில் அன்பான குற்றச்சாற்று மிளிர பதிலுக்கு "அய்யோ அப்படி எதுவும் இல்லம்மா..." என்ற சித்தாராம்மாவின் முகத்தில் சங்கடத்தையும் மீறி மகளின் அழகால் பெருமையும் பூரிப்பும் தான் ஜொலித்தது. இருவரிடமிருந்தும் பிறந்தநாள் வாழ்த்தை பெற்ற அஞ்சுவின் கண்கள் இந்திராவையே தேட அதை கண்டுகொண்ட நிரஞ்சனா "ஓ... இந்திராவ பார்க்கனுமா.??" என்றாள் சிரிப்புடன்.

"ஆமாம்மா காலேஜ் போக டைம் ஆனாலும் பரவாயில்ல இந்திராக்கா கிட்ட வாழ்த்து வாங்கிட்டு தான் போவேன் னு என் கூடவே வந்தா.." என சித்தாரா தன் பங்கிர்கு கோர்த்து விட நிரஞ்சனாவிர்கு இத்தனை வருடத்தில் தன் உதவியையோ மகளை கூட்டி வர கூறிய போதோ சாக்கு போக்கு சொல்லி நீங்கி நிற்பவளிடம் இவ்வளவு மாற்றம் வர என்ன மாயம் செய்தால் இந்த பெண் என மருமகளை நினைத்து சற்று பெருமையாக தான் இருந்தது. மாடியில் இருக்கும் வலது பக்க அறையில் தான் இந்திரா இருப்பாள் 'சென்று பார்' என்ற நிரஞ்சனாவின் அனுமதிக்கு பின் சிட்டாய் படிகளில் ஏறி சென்றாள்.

'ம்ம் இந்த ரூம் தான்' என சரியாக இடது பக்க இரண்டாவது கதவை தட்ட போனவள் கதவு திறந்திறப்பது பார்த்ததும் தயங்கி தயங்கி தட்டினாள். 'ம்ம் ம்ம்' என்ற ஆண் குரலின் முனங்கலை அனுமதியாக ஏற்று கொண்டு உள்ளே நுழைந்தாள் அஞ்சு. மரத்தில் வடிவமைக்கப்பட்ட பெரிய ஆடை அலமாரியை திறந்து வைத்துக் கொண்டு வாயில் டூத் ப்ரெஷை கவ்வியப்படி எதையோ அவசரமாக தேடிக் கொண்டிருந்தான் ஆதி. உள்ளே நுழைந்தவள் 'இந்துக்கா' என்றப்படி அலமாரிக் கதவின் விளிம்பினருகில் வந்து நிற்கவும் நம்ம டாக்டர் காலை நீட்டி எரிச்சலாக 'யாரது' எனப் பார்க்க கதவை அகல திறக்குமாறு எட்டி உதைக்கவும் சரியாக இருந்தது. உதைத்த வேகத்தில் அஞ்சுவின் மேல் 'நச்'சென கதவு மோத 'ஆவ்வ்' என்ற சிறு சத்தத்தோடு தரையில் முட்டி போட்டு தலையை கவிழ்ந்து அமர்ந்தே விட்டாள்.

சில நொடிகள் என்ன நடந்தது என ஆதிக்கு ஒன்றுமே புரியவில்லை. "ஹே ஹு ஆர் யு...எப்படி உள்ள வந்த..?" என கேட்டுக் கொண்டே பதட்டமாக அவள் எழுந்து நிற்க கைக் கொடுத்து உதவினான்.  "அஞ்சு...இந்தி...ரா...க்கா... சித்தா...ம்மா.." என துண்டு துண்டாக பயம் நிறைந்த முகத்துடன் பேசியவளை பார்க்க படு பரிதாபமாக இருக்கவும் ஆதி கஷ்ட்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு "கூல் கூல்... ரிலேக்ஸ் அன்ட் ஐம் ரியல்லி சாரி..." என்று சமாதானப்படுத்தியவன் அப்போது தான்  அவளின் இடது கண்ணின் ஓரம் சிறு சிராய்ப்புடன் கூடிய லேசான ஒரு துளி ரத்தத்தை கவனித்தான்.

கதவின் வக்கில் துருத்தி நிற்கும் ஏதோ ஒன்று தான் வேலை பார்த்துவிட்டது போல என்று புரிந்ததும் அவனுள்ளிருக்கும் மருத்துவன் படக்கென விழித்துக் கொள்ள அவளை மெத்தையில் அமர சொன்னதோடு  குளியளறைக்குள் சென்று அவசர அவசரமாக முகம் கழுவி  வந்து மேஜை ட்ராவில் காயத்திர்காக போடப்படும் மருந்தை எடுத்துக் கொண்டு அவளருகில் வந்தான்.  மருந்திட்டு எழுந்தவன் "ம்ம்... இப்போ சொல்லு நீ யாரு..?" என கேட்டான் நிதானமான குரலில்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.