(Reading time: 11 - 22 minutes)

வள் பதில் கூற வாயை திறந்தவள் "ஆதி..." என்ற இந்திராவின் அழைப்பில் இருவருமே திடுக்கிட்டனர். திகில் படத்தில் வரும் காட்சி போல் கதவையும் ஆதியையும் மாறி மாறி பார்த்த அஞ்சுவின் கண்கள் காரணமில்லாமல் கண்ணீரை கொட்டத் தொடங்கியது. 'இப்போ என்ன ஆச்சுனு இந்த பொண்ணு அழுவுது' என்பது மாதிரி அவளையே பார்த்தவன் "உள்ள வாங்க அண்ணி..." என்றான் ஒன்றும் நடவாதது போன்ற குரலில். இந்திரா உள்ளே நுழைந்ததும் அஞ்சுவின் கண்ணீரும் பந்தாவாக கைக்கட்டி மேஜையில் சாய்ந்து நிற்கும் ஆதியும் பார்த்தவள்

"ஹே அஞ்சு... இங்க என்ன பன்ற...? ஆர் யு ஓகே..? இதென்ன காயம்..? ஆதி என்ன ஆச்சு..?"

"ஹா ஹா அண்ணி ப்ரீத் அவ்ட் ப்ரீத் அவ்ட்.. ஒன்னும் ஆகல.. வார்ட்ரோப் டோர் பட்டு சின்னதா அடிப்பட்டிருச்சு... யாரிந்த பொண்ணு... ? டு யு நோ ஹெர்....?"

"காமெடி பன்றியா ..? இவள் சித்தாராம்மா பொண்ணு.... நீ பார்த்ததே இல்லையா..?"

தெரியாது என்பது போல் தோள்களை குலுக்கியவன் தலை நிமிராமல் அழுதப்படி அமர்ந்திருநதவளை சிறு சிரிப்புடன் பார்த்து "ஹாய் அஞ்சு.." என்றான் நட்புடன். அவனின் இளகுவான குரலில் நிமிர்ந்தவள் "நான்.. நான் இந்திராக்கா ரூம் நினைச்சு தான் தப்பா.. சாரி.. நீங்க..." என சரமாரியாக ஹிந்தியில் உளரியவளை பார்த்து ஆதியும் இந்திராவும் ஒருசேர "ஓகே ஓகே......" என்றதும் அஞ்சுவின் முகத்தில் பதட்டத்தையும் மீறி படக்கென புன்னகை பூத்தது.

அதன் பின் இந்திராவிடம் வாழ்த்து வாங்கியதும் அவசரமாக மாட்டிய வளைய வடிவில் உள்ள தன் குண்டு ஜிமிக்கி கழண்டு டாக்டர் சார் ரூமில் தவறுவிட்டதுக் கூட அறியாமல் கல்லூரிக்கு கிளம்பினாள். குளித்து உடை மாற்றி அலமாரி அருகில்  வந்ததும் காலில் தடைப்பட்டது என்னவென்று எடுத்து பார்த்தவனுக்கு சில நிமிடங்கள் கழித்து தான் அது காதணி என்பது புரிந்தது. யாரோடது என்று புரியவும்  'டிக்' கென கலர் கலராய் தொங்கிய அதன் முத்துக்களை தட்டி ரசித்தவன் தன் பர்சினுள் அதை பத்திரப்படுத்தினான். 'எதுக்கு அழுதிருப்பா..?' என்று தன்னையே கேட்டுக் கொண்டவனை கடிகாரம் எட்டு மணியை தொட்டு விடுவேன் என்று முள்ளை நகர்த்தி மிரட்ட  கேள்விகளை மூட்டை கட்டி வைத்து விட்டு அவசரமாக கல்லூரிக்கு கிளம்பினான்.

காலை நேர பரபரப்புடன் அன்றைக்கான அலுவல்களை மனதில் ஓடவிட்டப்படி பதினொரு மணிக்கு புதிய க்ளைன்டுடனான சந்திப்பை ஐந்து நட்சத்திர உணவகத்தில் திட்டமிட்டதை தன் கைப்பேசியில் பத்தரை மணி ரிமைன்டர் வைத்த ஆர்யன் மற்றொரு அலுவலகத்தின் ப்ராஜக்ட் முடியும் தருவாயில் அதற்கான திட்டங்கள் நிறைய இருக்க தன்னையே ஆசுவாசப் படுத்திக் கொண்டான்.

தன் அலுவலக அறையில் அமர்ந்து கணிணி பையில் உள்ள கோப்புகளை எடுத்தவன் 'பரத் கேஸ் டீட்டைல்ஸ்' என்றெழுதப்பட்ட கோப்பை புரட்டி பார்த்து தலையிலடித்துக் கொண்டான்..ஒரே மாதிரி வண்ணத்திலுள்ளதால் இந்திராவின் கோப்புகளை மாற்றி எடுத்து வந்துவிட்டதை உணர்ந்து 'சும்மாவே ஆடுவா இதுல இது வேறையா...' என தன்னையே நொந்தவனாய் இந்திராவை அழைக்க கைப்பேசியை எடுத்தான். "இந்து" என்ற பெயரில் நான்கு அழைப்புகள் வந்திருக்க 'சைலென்ட்' மோடில் போட்ட தன் புத்தியை எதைக் கொண்டு அடிப்பதென தெரியாமல் அவசரமாய் திருப்பி இந்திராவிர்கு அழைத்தான்.

"ஹலோ... அது என்னாச்..."

"ஆர் யு ப்ளைன்ட்...? சரி அறிவு தான் அரை அவுன்ஸ் கூட இல்ல.. அட்லீஸ்ட்....."

"ஏய் யு...!! எனக்கு உன்னை மாதிரி வெட்டியா ஆர்க்யு பன்ன டைம் இல்ல.. இப்போ எனக்கு அந்த ஃபைல் வேணும்...நீ எங்க இருக்க..?"

"ஆஃபீஸ்ல.."

"ஒகே... ஐம் கம்மிங் தேர்.."

திருப்பியும் கைப்பேசியில் ஷ்யாமிர்கு அழைத்தவன் "பார்க்கிங் வாடா..." என்றதோடு போகிற போக்கில் ஷ்யாமையும் இழுத்துக் கொண்டு காரை கிளப்பினான்.

"மீட்டிங்க்கு இன்னும் டைம் இருக்கு பாஸ்..க்ளைன்ட் வர லெவன்  ஆகும்..எதுக்கு இவ்ளோ சீக்கிரம்...?.."

"லெவன் ஓ க்ளாக் க்ளைன்ட் பார்க்கனும்... அதுக்கு முன்னாடி இப்போ ஒரு டெவில பார்க்கனும்..."

"டெவில்...? யாரு பாஸ்..?"

"சும்மா வாயேன்டா..அவ பேசிக் கொல்றானா..நீ கேள்வி கேட்டு கொல்லு.."

வக்கீல் ரவீந்தர் அலுவலகம் வந்ததும் ஷ்யாமிர்கு அந்த 'டெவில்' யாரென புரிய சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

"நீங்க போய் வாங்கிட்டு வாங்க பாஸ்... நான் இப்பிடிக்கா ஓரமா நிக்கிறேன்..." என்றான் எள்ளலான் குரலில்.

'உன்னை வந்து பாத்துக்கிறேன்' என்பது போன்ற பார்வையை வீசிய ஆர்யன் விடுவிடுவென உள்ளே நுழைந்தான்.  கைப்பேசியை நோண்டிக் கொண்டே வெளியே வந்த ஷ்யாம் 'டொம்' மென்று யாரோ மேல் மோதி விட "சாரி சாரி..." என நிமிர்ந்தவனின் முகம் ஆத்திரத்தில் சிவந்தே போனது. "அவ்ச்" என்ற சத்தத்தோடு தலையை தேய்த்தப்படி எதிரில் நின்ற ஷீத்தலும் நிமிர மோதியது யாரென அறிந்ததும் பதிலுக்கு அவளும் அதிர்ந்தே போனாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.