"ஹே ஃப்ராடு..இங்க என்ன பன்ற.. ?? ஓ வக்கீலா... வெளியே சீப்பான க்ரிமினல் வேலை செஞ்சுட்டு உள்ள லாயர் கோட் போட்டுக்கிறது... நல்லாருக்கே... ??" என ஹிந்தியில் கிண்டலாக சற்று ஆத்திரம் கொதிக்கும் குரலில் பேசிய ஷ்யாமை பார்த்து அதிர்ச்சி மாறாத நிலையில் 'இல்லை' என்பது போல் தலையசைத்தாள் ஷீத்தல் கண்ணீர் கோர்த்து விட்ட கண்களை துடைத்தப்படி.
"என்னை மாதிரி எத்தனை பேர மாட்டி விட்டு காசு பாத்திருக்க...? ஒரு பொண்ணா இருந்துட்டு இந்த மாதிரி செய்ய அசிங்கமா இல்ல..?" என வார்த்தை வடிவில் சாட்டையை கொண்டு பேசுபவனை பாவமாக பார்த்த ஷீத்தல்
"என்னை மன்னிச்சிடுங்க... அன்னைக்கு வேற மாதிரி ஆயிடுச்சு... உங்கள ஒரு முறையாவது பார்த்து சாரி கேட்கனும்னு நானும் ரொம்ப ட்ரை பன்னனேன். பட் ஐ..."
"அடச்சீ நிறுத்து... மாட்டின உடனே மலுப்ப பார்க்கிறயா...? உன்னை எல்லாம்..."
"ஹேய்... வாட்ஸ் ஹேப்பனிங்...?" என இடையில் வந்த ஆர்யனை கண்டு பின் வாங்கிய ஷ்யாம் "ஒன்...ஒன்னமில்லை பாஸ்..." என்றான் திக்கித் திணறி.
ஏதோ சரியில்லை என்று தோன்றினாலும் மீட்டிங் நேரம் வேற நெருங்க அலுவலக வேலை தலை மேல் கிடப்பதால் எதையும் கேட்காமல் முறைத்து கொண்டிருக்கும் நண்பனையும் கண்ணீருடன் நிற்கும் ஷீத்தலையும் ஒரு பார்வை பார்த்து விட்டு "லெட்ஸ் கோ ஷ்யாம்.." என்றவாறு அவசரமாக காரை நோக்கி விரைந்தான்.
உள்ளே கையில் இருந்த ஃபைல் கீழே கிடக்க என்ன நடந்தது என்பதை நம்ப முடியாமல் விழித்துக் கொண்டருந்தாள் இந்திரா. கண்களை இறுக மூடியவளின் நினைவலைகள் ஐந்து நிமிடம் முன் நடந்த நிகழ்வின் பக்கம் பாய்ந்தது.
ஃபைல் மாறிவிட்டது என்றதும் இந்திராவின் மூளை தன் கணவனை சீண்டி வெறுப்பேற்ற பல வழிகளை தேடிக் கொண்டிருந்த சமயத்திலேயே காற்றை போல் உள்ளே நுழைந்த தன்னவனை 'பே'வென பார்த்தவள் சற்றென சுதாரித்து 'என்ன வேண்டும்' என்பது போல் புருவத்தை உயர்த்தி கேள்வியாக பார்க்க, அவளை சிறிதும் சட்டை செய்யாது உரிமையாக இந்திரா அமர்ந்திருந்த சக்கரம் பொருத்திய நாற்காலியை நகர்த்தி விட்டு மேஜை இழுப்பறையில் தன்னுடைய ஃபைலை மும்மரமாக தேட ஆரம்பித்தான்.
'எவ்வளவு தைரியம்' என கொதித்தவள் எழுந்து ஓரமாக கைகட்டி நின்று கொண்டு சற்று கிண்டலான குரலில் "க்கும்..நான் எப்பவும் ஃபைல்ஸ எல்லாம் ரைட் சைட் ட்ரால தான் பத்திரமா பூட்டி வெப்பேன்..." என்றாள் சாவியை ஆள்காட்டி விரலில் சுற்றியப்படி.
சட்டென நிமிர்ந்தவன் 'கொடு' என்பது போல் கையை நீட்டினான். அதே கிண்டல் பார்வையோடு சுவரில் சாய்ந்து நின்றவள் "இந்த பெர்மிஷன், ரெஸ்பெக்ட் இதெல்லாம் உங்க டிக்ஷ்னரிலயே இல்லல்ல...?.. நோ ப்ராப்ளம்.. நான் டீச் பன்றேன்..." என்றவள் வாகாக மேஜையின் மேல் அமர்ந்து கொண்டாள்.
"ப்ச்... கடுப்பேத்தாத.. டைம் ஆச்சு.. எங்க வச்சிருக்க..?" என்றவனை அவனை போலவே சிறிதும் சட்டை செய்யாது
"ம்ம்...சீக்கிரம் எனக்கும் டைம் ஆச்சு.. பசிக்கிது.. சாப்பிட போகனும்... சீக்கிரமா கேளுங்க.."
"என்ன கேட்கனும்..."
"சாரி...எஸ்...ஓ...ஆர்...ஆர்...வை.."
"எப்படி எப்படி... நான்..? உங்கிட்ட...? சாரி கேட்கனும்... ?.."
"ஃபைல் வேணும்னா கேளுங்க... வேண்டாம்னா கிளம்புங்க... சிம்பிள்..."
"யாரும் உள்ள வர மாட்டாங்கெல்ல..?"
"ஹா ஹா....உங்க கஷ்டம் உங்களுக்கு.. டோன்ட் வொரி...யாரும் வர மாட்டாங்க... கமான்.. குயிக்..."
நொடி பொழுதில் அவளை நெருங்கியவனின் மூச்சு காற்று இந்திராவின் நெற்றியை தொட்டு மீழ வழியில்லாமல் தன்னவனின் மூச்சை தானும் உள்ளிழுத்தவளின் இடையை முன்னறிவிப்பில்லாமல் தன்னோடு இழுத்தவன் சிந்திச் சிதராமல் ஒரு ஆழமான முத்தக் காவியத்தை அரங்கேற்றினான். என்ன நடந்தது என்பதை உணர வழியில்லாமல் கண் இமை கூட மூட தோன்றாமல் அசைவின்றி
தன் கைப்பேசி அலறுவது கூட தெரியாமல் சிலைப் போல் அமர்ந்திருந்தாள் இந்திரா.
உள்ளே நுழைந்த மித்ரா இந்திராவின் தோளில் தட்டி கைப்பேசியை கையில் திணித்துவிட்டு சென்றப்பின் தான் தன்னிலை உணர்ந்தாள். கைப்பேசியின் அழைப்பை ஏற்று காதில் வைத்தவளுக்கு தெரியவில்லை தன் விதி விளையாடப் போகும் விளையாட்டு.
Next episode will be published as soon as the writer shares her next episode..
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.