(Reading time: 5 - 10 minutes)

01. ஹேய்..... சண்டக்காரா... - ஜோஷ்னி

hey sandaikaraa

ந்த ரம்மியமான அந்தி மாலை பொழுதில், ஆங்காங்கே தோன்றியிருந்த வான் நட்சத்திரதுக்குப் போட்டியாக ஜொலித்துக் கொண்டிருந்தது அந்த திருமண மண்டபம். வாசலை அழகாக்கிய கோலங்கள், வந்த விருந்தினர்களின் கூட்ட நெரிசல், நிற்க கூட நேரம் இன்றி சுழன்று கொண்டிருந்த உறவினர்கள் என அந்த இடமே கல்யாண கலையுடன் அம்சமாக காட்சி அளித்தது.

மணமேடை அலங்காரங்கள்  அனைத்தும் மணமக்களுக்காக காத்திருந்தன. பட்,

ஸ்டேஜ்கு ஃபர்ஸ்ட் என்ட்ரி குடுக்க வேண்டிய மாப்பிள்ள.. வொய் லேட்? வாங்க போய் பாப்போம்...........

“ இந்த ஹேர்ஸ்டைல் எல்லாம், ஆதாம் காலத்துலயே அழிஞ்சுடிச்சாம். இதையும் ஒரு ஸ்டைல்னு நீங்களும் வச்சுட்டு சுத்துரீங்களே..!!! ராமா! ராமா..! ”

“ ஒஓஓய்ய்...... அது போன அவதாரம் மகி. இப்போ நான் கண்ணன் ”. கையை புலாங்குழலாக்கி, கண் சிமிட்டிய படி போஸ் கொடுத்தான் அவன்.

“ நீங்க கண்ணன் அவதார் இல்ல அத்தான் . கேமரோன் அவதார். கருமம் கருமம்.. நானும் புள்ளைக்கு கல்யாணம் ஆகபோகுது, திட்டக்கூடாதுனு பார்த்தா, ஒவரா தான் ஸீன் ஓட்டுறீங்க. இப்போ மட்டும் நீங்க கம்முனு உட்காரல, கும்மு கும்முனு கும்மிடுவேன் சொல்லிடேன். ”

“ ஹீ..ஹீ.. உத்தரவு எஜமானி ” என்று ஒரு கையைக் கட்டி, மறுக்கையால் வாயை மூடி அடக்கமாக அமர்ந்தான் கண்ணன்.

“ ஹான்.. அது..அந்த மரியாதை இருக்கட்டும். நாளைக்கு கல்யாணம் முடியுற வரை இப்டி கப்-சிப்னு இருக்கோனம் “ என்று சொல்லி அவன் முன் கண்ணாடியுடன் கூடிய டேபிளின் மீது ஏறி அமர்ந்து அவன் ஹேர்ஸ்டைலை ஒரு வழியாக்கினாள் மகதி.

இப்போ இவங்க யாருனு நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா? சொல்றோம்.

மகதி இஸ் த ஸீவீட் மாமா பொண்ணூ ஒப் கண்ணன்.

“ டேய் கண்ணா.. ரிசப்ஷன்க்கு டைம் ஆச்சு டா இன்னும் என்ன பண்ற? “ என கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தார் மகேஸ்வரி, கண்ணனின் அன்னை.

“ அத்தை, அத்தான் ஹேர்ஸ்டைல் கேவலமா இருக்குதுல, அதான் நான் சரி பண்ணி விடுறேன் “,

"சீக்கிரம் சரி பண்ணுடா அம்மு. இவனுக்கு எதுவும் ஒழுங்கா பண்ண தெரியாது. எல்லாத்துலயும் லேட் வேஸ்ட் அண்ட் டேஸ்ட் லெஸ் ஃபெலோ “.

தன் இமேஜை டொட்டல் டாமேஜாக்கிய அன்பு அன்னையை முறைத்தவாறே கண்ணன்,

“அம்மா திஸ் இஸ் டூ மச் உங்க அம்மு தான் லேட் பண்ணுறா. நான் குட் பாய் மா. பாருங்க, அரைமணி நேரமா என்  தலைல  என்னனமோ ட்ரை பண்ணுறா. அடியேய் மகி, உன் ப்ராக்டிஸ் மேட்ச் – க்கு என் தலை தான் கிரவுண்டா ”

“அவ சின்ன பொண்ணுடா, நீ தான் சீக்கிரம் கிளம்பி இருக்கணும். சீக்கிரம் கிளம்பு “ என கூறி சென்றுவிட்டார் அவன் அன்னை.

காது , கண் , மூக்கு என்று பாரபட்சமே இன்றி மூன்றிலும் புகை வர,

“ சரி தான் தாயே......” சௌண்ட் விட்டவன், மகதியிடம் திரும்பி பரிதாபமாக, ” தலைய சீக்கிரம் விடுறீங்களா அம்மணி “

“ ம்‌ம்‌ம்.......... விட்டாச்சு  விட்டாச்சு கிளம்புங்க  “

“ ஹான் ஹான் நன்றி மகாராணி “

“ தேங்க்ஸ் சொல்லி டைம் வேஸ்ட் பண்ணாம ஸ்டேஜ்க்கு போங்க “

“போறேன்.. போறேன்.. " என மீண்டும் டைம்‌மாக்கிய கண்ணனை, “ அத்த, அத்தான் இன்னும் ரெடி ஆகல..” என தன் அத்தையிடம் மாட்டி விட்டு கண்ணனிடம் இருந்து எஸ்‌ஸ்‌ஸ் ஆனாள் மகி.

“ அய்யோ இல்லமா… இதோ கிளம்பிடேன் ” என்று கண்ணன் அலறியது அவள் காதில் விழ தவறவில்லை.

விருந்தினர்கள் அனைவரும் கூட, மணமக்கள் மேடை ஏற கோலாகளமாக தொடங்கியது வரவேற்பு.

கோட் சூட்- இல் கம்பீரமாக காட்சி அளித்தான் கண்ணன். ‘பொண்ணு மட்டும் என்ன குறைச்சலா!!’ என நினைக்கும் வண்ணம் பேபி பிங்க் அண்ட் ஒயிட் கலர், ஃபூள்ளி ஸ்டோன் வொர்க் லேகங்காவில் அப்சரஸாக ஜொலித்தப்படி  ஒரு கிலாசிக் என்ரி கொடுத்தாள், மணமகள் ஷண்மதி.

கண்களால் அவளை விழுங்க அவன் முயல, அவனையே பார்த்தப்படி மேடை ஏறியவள் முகம் மேலும் பிரகாசித்தது, அவன் காதல் பார்வையால். தொடர்ந்து ஒரு புன்னகையுடன் அவன் நிற்க, அருகில் வந்த மகி,

“ அந்த ‘ஈஈ.. ‘ னு ஒபன் ஆகி இருக்குற வாட்டர் டாங்க்-யை கொஞ்சம் கிலோஸ் பண்ணுங்க அத்தான். அப்புறம் யூஸ் பண்ணிக்கலாம் “ என்றாள்.

ஒரே ஒரு நொடி இவள் புறம் திரும்பி முறைத்தவன், மறு நொடியே அவனது ஷணுவிடம் திரும்பி, தனது டியுட்டியை கண்டினியு செய்தான்.

“ ஈஷ்வராராரா.. “ தலையில் அடித்துக்கொண்ட மகதி ஒரே ஜம்பாக,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.