(Reading time: 21 - 41 minutes)

11. புதிர் போடும் நெஞ்சம் - உஷா

புதிர் 11

ரு வேளை பப்பி சம்பந்தமா எதுவும்????’, என்று யோசனை வந்து போனது வாசுவிற்கு...

அதற்குள் அவன் சிந்தனையை கலைத்தான் பாலாஜி.

“ஓகே.. மாம்ஸ்! இப்போ கிளம்பினா தான் கான்ஃப்ரன்ஸ் டையத்துக்கு போக முடியும்”, என்று சொல்லிக் கொண்டே எழுந்து கொள்ள... அவனுடன் எழுந்த வாசுவிடம் அவன் மேலும்...

Puthir podum nenjam

“இப்போ புல்லட்டை நான் எடுக்கிறேன்”, என்று கோரிக்கை வைக்க..

“டொராண்டோ வாசு மட்டும் இல்லை.. அவன் புல்லட்டும் பயங்கரமா சீறும்! பார்த்து ஓட்டு!”, என்று பீற்றி விட்டு சாவியைக் கொடுத்தான் வாசுவிற்கு எப்பொழுதும் போல இப்பொழுதும்  டோர்னேடோ பிழையாகி டொராண்டோ வாக தான் வந்தது அவன் வாயில்...

பாலாஜியின் பின் வாசு ஏறியதும் அந்த புல்லட் சீறிப் பாய்ந்தது... ஆனால் அது சீறிய வேகத்திலே... அடுத்த சில நொடிகளில் தன் சீற்றத்தை விட்டு உருள ஆரம்பிக்க...

திகைத்த பாலாஜியின் கண்கள் இப்பொழுது தான் கவனித்தன... பெட்ரோல் சுத்தமாக காலியாகி இருப்பது என்பதை..

“என்ன மாம்ஸ்! ரிசர்வ்ல இருந்தப்பவே பெட்ரோல் போடலையா”, கோபத்தோடு கேட்கவாறு... அவன் கண்கள் சுற்றும் முற்றும் பெட்ரோல் பங்க்கைத் தேடிப் பார்க்க.. தெய்வாதீனமாக அருகிலே ஒரு பெட்ரோல் பங்க்! நிம்மதி பெருமூச்சு விட்டவனிடம்..

“என் புல்லட்டை என்ன நினைச்ச! சிக்த் சென்ஸ் டெக்னாலஜி! பெட்ரோல் இல்லைன்னா பங்க் முன்னாடி ஆஃப் ஆகும்... “, என்று கிடைத்த வாய்ப்பை எல்லாம் தனக்கு சாதமாக்கி..

“எப்படி மாம்ஸ் இப்படி!!!”, சிநேகமாக சிரித்துக் கொண்டே, பெட்ரோல் நிரப்பும் இடம் நோக்கி கால்களால் வண்டியை நகர்த்த...

அந்த சமயம்.. பின்னால் அமர்ந்திருந்த வாசு..

“அங்கே பாரு.. அது....... ஆர்யாவோட மேக்ஸ் சாஃப்ட் லோகோ போல தெரியுதே.... ஐடி கார்ட்டோ......”, என்று பாலாஜியிடம் சுட்டு விரலால் காட்ட...

இவர்கள் பைக் நின்ற இடத்திலிருந்து சற்று தள்ளி...தரையில் குப்பையோடு குப்பையாக  கிடந்தது அந்த அடையாள அட்டையைக் காட்ட..

மேக்ஸ் சாஃப்ட்டின் லோகோவின் பளிச் நிறம்... பாலாஜியின் பார்வையிலும் சட்டென்று விழ,

“பெட்ரோல் போட வந்த இடத்தில் யாரோ ஐடி கார்ட்டை மிஸ் பண்ணியிருப்பாங்க போலவே”, என்று பாலாஜி சொன்னது தான் தாமதம்..

டொர்னேடோ வேகத்தில் சுழன்று இயங்கி அந்த ஐடி கார்ட்டை மீட்டெடுத்து பைக்கின் பின்னால் அமர்ந்த வாசு...

“கார்ட் தூசியா இருக்கே... என் கரை படாத கைக்கு வந்த சோதனையா... இந்தா நீயே துடைச்சு கொடு”, என்று பந்தா விட்ட படி அதை பாலாஜியிடம் கொடுக்க..

‘கடவுளே.. கிடைக்கிற கேப் ல எல்லாம் செல்ஃப் டப்பா அடிக்கிறாரே.. ’, என்று எண்ணியவாறு.. அந்த அடையாள அட்டையை வாங்கி தனது  கர்சீஃப்பால் அதில் படிந்திருந்த தூசியைத் துடைக்க...

என்ன உந்துதலோ... அவன் கைக்குட்டை முதலில் அகற்றியது.... அந்த  அடையாள அட்டையில் இருந்த புகைப்படத்தின் மீதிருந்த தூசை... 

இவன் பார்வை அதில் பளிச்சிட்ட முகத்தில் படிந்தது....  அந்த சிறு அட்டையில்... தெரிந்த அந்த சின்னஞ்சிறு திருத்தமான வட்ட முகம்...

அந்த முகத்திற்கு மையமாக சின்னஞ்சிறு வட்ட பொட்டு.. அதன் மேல் சந்தனம்... அதற்கு கீழ் குங்குமம்...

இவையெல்லாம் ‘நானோ’ சைஸ்ஸில்  தெரிந்த விஷயங்கள் என்றாலும்... அந்த நானோ செகன்ட்டில்  இவன் கண்கள் மைக்ரோஸ்கோப்பை விட நுணுக்கமாக பார்க்கும் கருவியாக  இயங்கி... அவனை அதை ரசிக்க வைத்தது..

‘சரியான பழமா இருப்பா போலவே!’, என்று அலட்சியமாய் புன்னகைத்தவனின் பார்வை ஆர்வத்துடன் அந்த முகத்தின் மற்ற லஷ்சணங்களை உள்வாங்க..

இவன் விழிகள் அந்த நிழல் படத்தில் கட்டுப் பட்டு கிடக்க... விரல்களோ  இவன் துடைக்கும் வேகத்தைத் குறைத்து.. அதன் முகத்தை அளவிடுவது போல வருட..

‘துடைச்சு கொடுன்னு சொன்னா... என்னடா செய்ற...”, அதட்டிய வாசுவின் பார்வையும் பாலாஜியின் பார்வையும் அந்த அடையாள அட்டை மீது செல்ல...

“பொண்ணு சூப்பரா இருக்கு! எங்க கொடு”, என்று கேட்க... பதறிப் போனான் பாலாஜி.

“பரவாயில்லை மாம்ஸ்.. நானே அண்ணா வை பார்க்கிறப்போ கொடுத்துக்கிறேன்”, என்று வேக வேகமாக தனது பாக்கெட்டில் திணித்தான் அந்த அடையாள அட்டையை...

அவன் செய்கை அவனுக்கே வியப்பை அளிக்க... ‘ச்சே.. ஏன் சின்னபிள்ளைத் தனமா பிகேவ் பண்றோம்’, என்று தனக்குள்ளே எண்ணிய படி பெட்ரோலை நிரப்பி விட்டு வண்டியைக் கிளப்பினான்..

பைக்கை செலுத்தும் பொழுதே... பல கேள்விகள் இவன் மண்டையைக் குடைந்தது... இந்த பொண்ணு பேர் என்னன்னு பார்க்கலையே... பாய் ஃப்ரண்ட் இருந்தா.. அதுன்னாலும் பரவாயில்லை கல்யாணம் ஆகியிருந்தா..??’

‘அது மட்டும் உண்மையென்றால்....’, என்ற நினைப்பே மனதை வருத்த...

‘அய்யோடா.. நான் ஏன் இப்படி யோசிக்கிறேன்?? அஞ்சுவைப் போல கண்டதும் காதல்ன்னு  நானும் ஏதாவது முட்டாள்த்தனமா....’

திடுக்கிட்ட பாலாஜி ப்ரேக்கிட்டு புல்லட்டை நிறுத்த...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.