(Reading time: 21 - 41 minutes)

ழகிய தமிழ் மகனுக்கும்... அழகிய தமிழ் மகளுக்குள்ள... ஆயிரம் விஷயம் இருக்கும்?”, என்றது ஆர்யமன் குரல்..

“ஹூம்கும். தோத்தி(வேட்டி), தெரியலை கட்ட...  தும் கோ (உனக்கு) டமில் மகன் டைட்டில் கொடுக்குது தேடி தேடி... ”, கிண்டலாக ஒலிக்கிற அந்த ஜூனுன் தமிழ் மற்ற முனையில் இருந்த பாலாஜிக்கு சிரிப்பு வர...

அந்த கிண்டலை எல்லாம் சட்டை செய்யாது...

“ஹெவன்லி ஸ்மெல்”, என்ற ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்த படி ஆர்யமனின் சொல்லவும்....

“பப்பி கொடுத்ததுன்னாலும்... பப்பியை மாதிரி மோப்பம் பிடிக்க கூடாது”,

என்றது அந்த சன்னமாக வந்த ஆண் குரல்..

‘ஓ... அப்படி என்ன அந்த கோக் கொடுத்து இருப்பா... ‘, ஆர்வமின்றி இருந்த பாலாஜி மூளை தன் ஜேம்ஸ் பான்ட் வேலையை ஆரம்பிக்க... அதே சமயம் ஆர்யமன் குரல் உயர்ந்து....

“பப்பியா????!!!! உனக்கு எப்படி தெரியும்?”,

என்பது  பாலாஜிக்கு கேட்க.. ‘பப்பி??’, மறுமுனையில் கேட்ட ஆர்யமன் குரலில் இருந்த அதிர்ச்சியை கவனித்த பாலாஜியின் முகம் ஒரு முறுவலை ஏந்தியது...

இப்பொழுது ஆர்யமன் கேள்விக்கு பதில் அளிப்பது போல சன்னமான அந்த ஆண் குரல் -

“நம்ம கோக் தும்மல் போட்டா கூட நோட் செய்வோம்ல... பெட் நேம் நோட் செய்ய மாட்டோமா!!! சரி.. என்ன லவ் லெட்டரா?!!!!”

‘பெட் நேம் ங்கிறதை தப்பா புரிஞ்சிகிட்டு..  ‘பெட்(pet)’ டையே பேரா வைச்சு கூப்பிடுறாங்க - இட் ஹெப்ப்ன்ஸ் ஒன்லி இன் இந்தியா! ஹா... ஹா..’, என்று தனக்குள் சிரிக்க ஆரம்பித்த பாலாஜியை அதிரடியாக வந்த ஆர்யமன் குரல் தடுத்தது...

“கிளம்பு!!!!”, என்று அதிகாரமாக... அவனை கிண்டலடித்த அந்த ஆண் பேச்சை வெட்டி விடும் விதமாக..

‘இப்போ என்ன ஆச்சு...’, என்று அந்த உரையாடலை கவனித்த பாலாஜி சற்றே மிரண்டு!!! மேலும் அவன்,

‘ஓ.. அந்த கோக்கோடு இவரை ஓட்டுறது பிடிக்கலையா... அய்யோ.. இந்த டென்ஷனோட என்கிட்ட பேசினா?? குதிரை வேற.. தேவைபட்டா பேசுன்னு பில்டப் கொடுத்தானோ... லைன்னை கட் செய்துட்டு அப்புறமா பேசிக்கலாம்’, என்ற முடிவுடன்  அலைபேசியை காதிலிருந்து எடுக்கப் போக..

“ஹலோ...”, என்ற அழைப்பு - இப்பொழுது தான் தன் அழைப்பை கவனித்து பேச வருகிறான் என்பது பாலாஜிக்கு புரிய... அதற்குள்  மீண்டும் ஆர்யமன்,

“...ஹலோ... ஸாரி வெயிட் செய்ய வைத்துட்டேன்!!! சொல்லுங்க நீங்க யார்? எதுக்காக கால் செய்தீங்க”, என்று விசாரிக்க...

பாலாஜி, “ஹாய்.. நான் பாலாஜி! ஹர்ஷ்ஷோட கசின். அஞ்சனா பத்தி உங்ககிட்ட பேசலாம்னு நினைச்சேன்..”, என்று ஆரம்பிக்க..

மறு முனையில் யோசனை ஓடியிருக்குமோ... என்பது எதிர்முனையில் இருந்த சில நொடி மவுனத்தில் புரிந்து கொள்ள முடிந்தது பாலாஜியால்..

“ம்ம்...என்ன விஷயம்?”,

இந்த கேள்வியில்.. இருந்த விலகல் தன்மை.. அடுத்து பேசுவதை யோசித்து பேச வேண்டும் என்று பாலாஜியின் மூளை அறிவுறுத்த...

“நீங்க இருக்கிறதாலே எந்த கவலையும் இல்லைன்னு ஹர்ஷ் சொன்னான்.... இருந்தாலும்.. அஞ்சுவோட இன்னொசென்ட் நேச்சரை மிஸ்யூஸ் பண்ணிடக் கூடாதேங்கிற பயம்.... ஜாயின் செய்த அன்னைக்கே சசின்னு யாரையையோ.. க்ளோஸ் ஃப்ரண்ட்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கிறா... அதான் உங்ககிட்ட அவங்களை பத்தி கேட்கலாம்ன்னு...”, என்று இழுக்க...

மறு முனையில் சில நொடி மவுனம்...

பின், தொண்டையைச் செருமியவன்...

“சசி நல்ல டைப் தான்..  ஒர்ரி பண்ண அவசியம் இல்லை.”, என்று சொன்னவன்...

“ஒரு பொண்ணை தப்பா புரிஞ்சிடக் கூடாதேங்கிறதுக்காக சொல்றேன்... பொதுவா மத்தவங்களைப் பத்தி விசாரிக்கவோ விமர்சிக்கவோ பிடிக்காது பாலாஜி! ”

என்பதை அழுத்தமாக சொல்லி முடிக்க...

‘சொந்த விஷயங்கள் பேச விருப்பம் காட்ட மாட்டான் என்று சொன்னது பாலாஜிக்கு புரிகிறது. இருந்தாலும்....

“அஞ்சுக்கு வெளியுலக எக்போஸர் கிடையாது.. கொஞ்சம் பார்த்துக்கோங்க..”

ஆர்யமனோ, ‘இந்த எட்டு மணி நேரத்தில் டெலிவரி மேனேஜர் வேலை பார்க்கவே பத்தாது.. இதில் பாடி கார்ட் வேலை வேற பார்க்கணுமா...’, என்று கடுப்பாகி...

“ஒர்க் விஷயத்தை தாண்டி.... மானிட்டர் பண்றது எல்லாம் ப்ராக்டிக்கலா ஒத்து வராது! அதே சமயம் அவங்களுக்கு ஏதாவது பிரச்சனையோ.. உதவி தேவைபட்டாலோ என்னை கண்டிப்பா அப்ரோச் செய்யலாம்!”

அழுத்தம் திருத்தமாக அவன் சொல்ல... திகைத்த பாலாஜி ஏமாற்றமாக உணர்ந்தான்... ஒரு வார்த்தைக்கேணும் என் பொறுப்பு என்று சொல்லாமல் கை கழுவுகிறானே என்றிருந்தது... அவன் யோசிக்கும் பொழுதே... ஆர்யமன் மீண்டும் சொன்னான்..

“I can’t watch her but will definitely listen to her!”,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.