(Reading time: 10 - 20 minutes)

14. சதி என்று சரணடைந்தேன் - சகி

நாடு திரும்பி இரண்டு நாட்கள் ஆயின. அக்ஷயாவின் நினைவுகள் முழுதும் மனதினை விட்டு அகலாத போதும்,மனம் இனி அவளை நாடேன் என்று உறுதி பூண்டது.

இந்த மூன்று மாதத்தில் ஒருமுறையும் அவள் அழைப்பு விடுக்கவில்லை.

காதல் வரையறை அற்றதாம்!இவள் காதலின் எல்லையை இவனோ கண்டறிந்துவிட்டான்.

Sathi endru saranadainthen

வீட்டிற்கு வந்ததும் தீக்ஷா அளித்த நம்பிக்கை,

"கவலைப்படாதே!இனி எல்லாம் நல்லதுக்கு தான்!"-அவனுக்கு தைரியம் ஊட்டி இருந்தது.

எங்கோ வெளியே செல்ல ஆயத்தமானவனின் கவனம் கலைக்கப்பட்டது அவன் தாயால்!!!

"கௌதம்!இந்தா!"என்று ஒரு கவரை நீட்டினார்.

"என்ன இது?"

"பொண்ணோட போட்டோ!"

"ஓ...உன் அண்ணன் பொண்ணுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கா!ம்...வெரி குட்!"

"இது உனக்கு பார்த்திருக்க பொண்ணோட போட்டோ!"

"என்ன?"

"ம்...நானும் ரொம்ப நாளா டைம் தந்துட்டேன்.நீ மதிக்கிறா மாதிரி இல்லை..அதான்...பொண்ணு எவ்வளவு அழகா இருக்கா தெரியுமா?"

"எனக்கு பிடிக்கலை!"

"இங்கே பிரித்துப் பார்க்காமயே பிடிக்கலைன்னு சொல்றதுக்கு இது சினிமா இல்லை...உன்னை பிடிச்சிருக்கான்னு நான் கேட்கவும் இல்லை!நீ இந்தப்பொண்ணை தான் கல்யாணம் பண்ணணும்!"

"மா!"

"இன்னும் இரண்டு நாள்ல பொண்ணு பார்க்க போறோம்!"-என்றுக்கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார்.கதிகலங்கி போனான் கௌதம்.

இனி என்ன நிகழ இருக்கிறது??எப்படி அவன் இவ்வாழ்க்கையை ஏற்பான்??என்ன செய்ய போகிறான்??

வாழ்வினில் சில சந்தர்பங்கள் மிக நுட்பமானவை!!அச்சந்தர்பங்களில் நாம் முடிவெடுத்தல் அவசியமாகும்!காலம் தாழ்த்தினால் வாழ்க்கையே முடிவெடுத்துவிடும்.

அதனால் விளைவது துன்பமே அன்றி!இன்பம் என்பது கானல் நீரே!!சில பொழுதுகள் உண்மைகளை ஏற்க தயங்கும் மனம் தைரியத்தையும் இழக்கிறது என்பது உண்மையே!!!!

"சொல்லுடா!எதுக்கு வீட்டுக்கு வர சொன்ன?"அவன் விவரத்தை கூறினான்.

"நல்ல விஷயம் தானே!"

"எது நல்ல விஷயம்?நான் எப்படி தீக்ஷா?"

"ஏன்?நீ என்ன தாத்தாவா?"

"ஏ...அதுக்கில்லை.."

"கௌதம்!வாழ்க்கை உனக்கு ஒரு வாய்ப்பு தந்தது.நீ அதுல தவறிட்ட!இப்போ வாழ்க்கையோட சான்ஸ்!"

"தீக்ஷா..நான் சொல்றதை..."

"வேணாம்டா! நீ இதை ஏத்துக்கணும்!அதுவும் இல்லாம வரப்போறவ உன் வாழ்க்கையை மாற்றி அமைக்கலாம்ல?"

"ஏன் பேச மாட்ட?உனக்கென்ன?நீ அசைப்பட்ட வாழ்க்கை கிடைத்துவிட்டது!"-அவள் பேச்சிழந்துப் போனாள்.

"உனக்கு எங்கே இருந்து தெரியும் காதலோட வலி!"-தீக்ஷாவின் கண்கள் கலங்கின.அவளா அறியவில்லை காதலின் வலியை?விரும்பியவன் அருகில் இருந்தும் அவன் ஆறுதலை அடையாதவள் அல்லவா அவள்!!நீண்ட மௌனத்திற்குப் பின்...

"ஒருவேளை அன்னிக்கு மண்டபத்துல எந்த மாற்றமும் நடக்காம இருந்திருந்தா அந்த வலி எனக்கும் தெரிந்திருக்கும்.ஆனா,ராகுல் அதுக்கான வாய்ப்பை தரலை!"-அவள் கூறியது தவறாகிய அவன் காதலை மறைமுகமாய் சுட்டியது.

"தீக்ஷா?"

"............"-அவள் ஏதும் பேசாமல் எழுந்து சென்றாள்.

"தீக்ஷா!"-அவள் செவி சாய்க்காமல் நடந்தாள்.

"உனக்கென்ன தெரியும்?காதலோட வலிப்பற்றி?"கௌதம் கூறியது செவிகளில் ரீங்காரமிட்டது.

தலை சீவிக்கொண்டிருந்த ராகுலின் பார்வை கண்ணாடி வழியே அவளது முக வாட்டத்தைக் கண்டறிந்தது.

ஆனால் அவன் மனம் அதுக்குறித்து அவளிடம் வினவ சக்தியற்று நின்றது.

மனம் அவளிடம் கேள்விகளை தொடுக்க எண்ணினாலும் ஏதோ ஒன்று அவனை தடுத்தது.

எனினும் தைரியத்தை வரவழைத்துக்கேட்டான்.

"ச...சதி!"-அவள் நிமிர்ந்தாள்.

"உடம்பு சரியில்லையா என்ன?"

"அப்படியெல்லாம் எதுவும் இல்லைங்க.."

"பின்ன ஏன் முகம் வாட்டமா இருக்கு?"-அவன் தன்னை புரிந்திருக்கிறான் என்பதே மனதிற்கு ஆறுதலாய் இருந்தது அவளுக்கு!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.