(Reading time: 10 - 20 minutes)

"ந்த அளவு உங்களாள கொடுக்க முடியும்?ஒரு அளவுக்கு அப்பறம் நீங்களே ஏழை தான்!ஆனா,என்னால உண்மையை கொடுத்துட்டே இருக்க முடியும்!எந்த எல்லையும் எனக்கில்லை!சின்ன சின்ன பொண்ணுங்களை கடத்த விற்கிறீங்க!ஒரு தாய் தானே பத்து மாசம் கருவுல உங்களையும் சுமந்தாங்க?உங்க மனைவியும் பொண்ணு தானே?உங்க வாரிசும் பொண்ணு தானே?"

"அதிகம் பேச வேண்டாம்!உனக்கும் தங்கச்சி இருக்குன்னு நினைக்கிறேன்?புதுசா வேற கல்யாணம் ஆகியிருக்கு!திடீர்னு இரண்டுப் பேரும் காணாம போயிட்டாங்கன்னா?"-அவன் புன்னகைத்தான்.

"என்ன சார் வந்ததுல இருந்து நீதி,நியாயம்னு பேசறதுனால ரொம்ப நல்லவன்னு நினைச்சிட்டீங்களா?ஆக்ஷூவலி அப்படி பேசுறவன் தான் ரொம்ப கெட்டவனா இருப்பான்!நான் என் தங்கச்சியையும் மனைவியையும் கூட்டிட்டு வரேன் நீங்க வைத்து வளர்க்கிற எந்த அடிமை நாய்களுக்காவது தைரியம் இருந்தா! எந்த நாயாவது ஆண் நாயா இருந்தா என்னை மீறி தொட சொல்லுங்க!"-ரகுவரன் அதிர்ந்து போனார்.

"வயசுக்கு மரியாதை தந்து அமைதியா போறேன்.இல்லை..நாளைக்கு இதே பேப்பர்ல உங்க கண்ணீர் அஞ்சலி நியூஸ் வந்திருக்கும்!"-அவன் கம்பீரமாக எழுந்து சென்றான்.

வெளியே வந்தவனின் முன் பயத்தோடு நின்றான் கார்த்திகேயன்.

"டேய் மச்சான்!என்னாச்சுடா?"

"வா  சொல்றேன்!"

பத்திரிக்கை அலுவலகத்தில்...

சர்வ சாதாரணமாய் அமர்ந்திருந்தான் ராகுல்.

"டேய்!இல்லாத பிரஷரை வர வைத்துடுவ போலயே!என்னடா ஆச்சு?"-ராகுல் தன் கண்ணாடியை கழற்றினான்.அதில் ஏதோ மாறுபடிகளை செய்து,அதிலிருந்து சிறு மேரா பிலிமை எடுத்தான்.

"ஆதாரம் கிடைச்சிடுச்சு மாம்ஸ்!"-கார்த்திகேயன் வாயை பிளந்துவிட்டான்.

"எப்படிடா பண்ண?"

"உள்ளே போன உடனே செக் பண்ணானுங்க!நான் என்ன பண்ணேன்.கண்ணாடி மெட்டல் சார் பத்திரமா வச்சிக்கோங்கன்னு அவன்கிட்டயே கொடுத்து வாங்கிட்டேன்.ரூம்குள்ள போகுறதுக்கு முன்னாடி கால் தடுக்கிறா மாதிரி தடுக்கி அங்கே எந்த கேமராவும்,கேட்ஜட்டும் வொர்க் ஆகாம செயயுற மெஷின் டிவைஸ்சை சுவிங் மூலமா ஃபால்ட் பண்ணிட்டேன்."

"அது இருந்ததுன்னு உனக்கு எப்படி தெரியும்?"

"என் மொபைல் கொடுத்த பீப் சவுண்ட் வைத்து!"-அவன் ஆனந்தத்தில் ராகுலை கட்டிக்கொண்டான்.

"அடுத்து என்ன?பேப்பர்ல போட்டுவிடலாமா?"

"இல்லை...இது வேற ஒருத்தர்கிட்ட போக போகுது!"

"யாரு?"

"அப்பா!"

"டேய்!எழுந்திரிடா!"-பத்தாவது முறையாக குரல் கொடுத்தார் நிரஞ்சன்.

"போடா!இன்னும் கொஞ்ச நேரம்!"

"நிரு!விடேன் அவன் தூங்கட்டும்!"-ரகுவின் குரலை காற்று கொண்டு வந்தது.

"தெய்வமே!!மது இவனை எப்படி தான் சமாளித்தாளோ!"-என்று தலையில் அடித்துக்கொண்டு வெளியே வந்தார.்

ஹாலில் ஏதோ நாளிதழை புரட்டிக் கொண்டிருந்தார் ரகு.மகனை நினைத்து மனம் கர்வம் கொண்டது.

ரகுவின் முகமாற்றத்தை ஓரளவு ஊகித்திருந்தார் நிரஞ்சன்.

மனம் நண்பனின் ஏக்கத்தை எண்ணி கவலைக் கொண்டது.

"அப்பா!"-தவமிருந்து ஈன்ற குரல் செவிக்கருகே ஒலிக்க திடுக்கிட்டு திரும்பினார் ரகு.

அவரைக் கண்ட ராகுலோ,சில நொடிகள் தாமதித்து நிரஞ்சனை நோக்கி,"அப்பா இல்லை?"என்றான்.

ரகுவின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தவர் இயல்பு நிலைக்கு வர,

"வாடா பெரியவனே!உள்ளே வா!"என்றார்.ராகுல் தயங்கி நிற்பதை கண்ட ரகு பெருமூச்சுவிட்டு உள்ளே சென்றார்.

"அதான் போயிட்டார்ல வர வேண்டியது தானே!"-என்று அவர் அழைக்கவும் இவன் "நிரு!"என்று ஓடிச்சென்று அவரை அணைத்துக்கொண்டான்.

"என்ன வீட்டுக்குக் கூட வரலை!"

"ம்..அதுக்குள்ள தான் உன் அப்பா தரதரன்னு இங்கே இழுத்துட்டு வந்துட்டானே!"-அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கண்களை கசிக்கியப்படி வந்தார் சரண்.

ராகுலை கண்டவர்,

"டேய் வாண்டு!"என்றார்.

"அப்பா!"என்று அவரை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான் ராகுல்.

"மிஸ் யூ அப்பா!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.