(Reading time: 10 - 20 minutes)

"ண்ணுமில்லை..லேசா தலைவலி!"

"அம்மாவை கூப்பிடட்டா?"

"இல்லை பரவாயில்லைங்க...ரொம்ப முடியலைன்னா நானே கேட்டுக்கிறேன்!"

"ஓ.கே."-அவன் மௌனமாக வெளியேறினான்.

அவனது விலகலுக்கான காரணம் அவள் அறியாதது.ஆனால் அறிந்துக் கொள்ளவே மனம் விரும்பியது.

அவள் உள்ளே இருந்த மற்றொரு அறை வாயிலில் நின்றாள்.

"என்னிக்கும் இந்த கதவை திறக்கிற தைரியம் எனக்கு வந்தது இல்லை.ஆனா,அவரோடு எல்லா வேதனைகளும் இங்கே தான் புதைந்திருக்குன்னு எனக்கு தெரியும்!"-மனதளவில் கூறிக்கொண்டாள்.

"தீக்ஷா!"-மதுவின் குரல் கேட்டு திரும்பினாள்.

"என்னம்மா?என்னாச்சு?ஏன் இந்தக் கதவு முன்னாடி நிற்கிற?"

"ஒண்ணுமில்லை அத்தை!"-மதுவிற்கு விவரம் புரிந்தது.

"ராகுல் இந்த ரூம்குள்ள போக கூடாதுன்னு சொன்னானா?"

"அதெல்லாம் இல்லை அத்தை!"

"என் கூட வா!"-மது அக்கதவை திறந்து அவளை உள்ளே அழைத்து சென்றார்.

அவ்வறை அவ்வளவு நேர்த்தியாக இருந்தது.

"நீ ராகுலோட சரிபாதியாய் அவனோட வாழ்க்கையில வந்துட்ட!அவனோட வாழ்க்கையோட ரகசியங்களை நீ தெரிந்து கொள்வதும் அவசியம்!"-என்று ஒரு திரைச்சீலையை விலக்கிய போது தீக்ஷாவின் விழிகள் விரிந்தன.அச்சில் வார்த்தாற் போல் அவள்முகம்!!திகைத்து போய் நின்றாள்.

"இவங்க கீதா!ராகுலோட அம்மா!"-மேலும் குழம்பியது பெண்மனம்.

"ராகுல் எனக்கும்,அவருக்கும் பிறந்தவன் இல்லை!"

"அவனோட அப்பா பேரு ரகு!"-ராகுலின் கடந்தக்கால வரலாற்றை கூறினார்.

"சின்ன வயசுலயே அப்பா அம்மாக்கு துரோகம் பண்ணிட்டார்னு அவன் மனசுல ஆழமா பதிந்திடுச்சு!அதனால அவன் திருமண பந்தத்தையே வெறுக்க ஆரம்பித்தான்.

என்ன பண்றதுன்னு நாங்க தவிச்சிட்டு இருந்தப்போ தான் நீ அவ வாழ்க்கையில வந்த!எங்களுக்குள்ள நம்பிக்கை வந்தது.அவர் உன்னோட அப்பாக்கிட்ட எல்லாத்தையும் பேசி

உங்க கல்யாத்துக்கு ஏற்பாடு பண்ணோம்!அதுக்கு அப்பறம் நடந்தது உனக்கு தெரியுமே!"

".........."-மது சதியின் கரத்தை பிடித்து,

"என் ராகுல் நிஜமா நல்லவன்!உன் மேலே உயிரையே வைத்திருக்கிறான்!இப்போக்கூட உனக்கு உடம்பு முடியலை என்னன்னு பார்க்க சொல்லி சொல்லிட்டு போறான்."-அவள் கண்கள் துளிர்த்தன.

"அவன் கொஞ்சம் ஈகோ பிடித்தவன்.அதான் அவன் காதலை சொல்ல மறுக்கிறான்.ஆனா,அந்த ஈகோவை தாண்டி அவன் காதலை உனக்கு சொந்தமாக்குறது உன் சாமர்த்தியம்!"-அவள் கன்னத்தை

வருடி பின் அங்கிருந்து நகர்ந்தார்.

தீக்ஷா மீண்டும் கீதாவின் முகத்தை பார்த்தாள்.

"நான் உங்களுக்கு ஒரு வாக்கு தரேன்மா!நிச்சயமா உங்க மகனோட மனதை மாற்றி அவர் இழந்த எல்லா சந்தோஷத்தையும் அவருக்கு திருப்பி தருவேன்!"மனம் உவந்து வாக்களித்தாள் தீக்ஷா.

"சார்!"-ஏதோ சிந்தனையில் இருந்த ரகுவரனின் சிந்தனை கலைக்கப்பட்டது.

"ராகுல் வந்திருக்காரு!"

"வரச்சொல்லு!"-சிறிது நேரத்தில் ராகுல் பிரவேசித்தான்.

"வாங்க தம்பி!உட்காருங்க!"

"தேங்க்யூ!"-அவன் அமர்ந்தான்.

"இதெல்லாம் என்ன தம்பி?"-அவன் பத்திரிக்கையை நீட்டினார்.

அதில்,"பெண்களை கடத்தி விற்கும் ஈன கும்பல்கள் பின்னணியில் இருப்பதோ சிறந்த தொழிலதிபர்!"என்றிருந்தது.

"கன்டண்ட் படிக்கலையா சார்?"

"இதெல்லாம் வேணாம் தம்பி!எங்கேயாவது கொலை,கொள்ளை,கள்ளக்காதல்லு இருக்கும்.அதைப்பற்றி போடு!பெரிய இடத்தோட பகைத்துக்காதே!"

"நீங்க ஏன் சார் டென்ஷன் ஆகுறீங்க?இதுல நீங்க சம்பந்தப்பட்டு இருக்கீங்களா?"-அறியாதவனாய் கேட்டான்.

"இதோப்பாருப்பா!"

"பத்திரிக்கை நடக்குற அநியாயத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வர இருக்கு!ஒரு விஷயத்தை திரித்து சொல்வதற்கோ!நீங்க சொல்ற கொலை,கொள்ளையில மட்டும் கவனம் செலுத்தி பேர் வாங்குறதுல்ல இல்லை!"

"பொறுமையா பேசிட்டு இருக்கேன்.விட்டுவிடு!எவ்வளவு பணம் வேணும் உனக்கு?"

"ஆயிரம் மில்லியன் கோடி!"அவர் திடுக்கிட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.