(Reading time: 21 - 41 minutes)

வன் குடும்பத்தினர்  தொடர்பு கொள்ளும்  “வானத்தைப் போல” வாட்ஸ் ஆப் க்ரூப்பிற்கு அஞ்சனா சசியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை போட்டு

“நம்ம குடும்பத்துக்கு அடுத்த படியா என் மனதிற்கு நெருங்கிய நண்பேன்டா !!!”, என்று செய்தி அனுப்பியிருந்ததைக் கண்டதும்... பொறுக்க முடியாமல்,

ஹர்ஷவர்தனை தொடர்பு கொள்ள... அவனோ தூக்க கலக்கதோடு அலைபேசியை எடுக்க.. எடுத்த எடுப்பிலே பாலாஜி தன் விசாரணையை ஆரம்பிக்க...

“ஏன் டென்ஷனாகுற... எனக்கு நல்லா தெரிஞ்ச ஆர்யமன் டீம்ல தான்டா அஞ்சு இருக்கிறா! சோ, பயம் இல்லை!”,

என்ற அலைபேசியை வைக்க போன ஹர்ஷவர்தனை பாலாஜி விடவில்லை... சசியைப் பற்றி தனது சந்தேகத்தை எழுப்ப... அமெரிக்காவில் வளர்ந்த ஹர்ஷவர்தனுக்கு பாலாஜி அதிகம் அவளை அடக்குவதாக... அவள் சுதந்திரத்தை தடுப்பதாகவே எண்ணம் இருக்க...

“ஏன்? அவளுக்கு ஃப்ரண்ட்ஸ் சர்கிள் உண்டாகுறது நல்ல விஷயம் தானே..”

என்று அறிவுரை சொல்ல ஆரம்பிக்க...  சமாதானமடையாத பாலாஜி,

“ப்ச்.. உனக்கு புரியாது.. அந்த ஆர்யா..வா.. சூர்யாவா.. அவர் நம்பரை கொடு”

என்று நச்சரிக்க... ஹர்ஷவர்தன் முதலில் தயங்கினான்.

“ரொம்ப அவசியம்ன்னா மட்டும் பேசு.... அவன் பிஸ்னஸ் தவிர வேற பெர்சனல் விஷயங்கள்  பேச விருப்பப்பட மாட்டான்“, என்று சொல்ல.....

“சரி.. சரி நான் பார்த்துக்கிறேன்”, என்ற பாலாஜி அடுத்ததாக அழைத்து ஆர்யமனை...

எத்தனிக் டே முடிந்து தினேஷ்ஷூடன் வீட்டிற்கு கிளம்பியவனுக்கு...

தினேஷ்ஷின் பைக்கில் எப்படி அமர்வது என்று ஒத்தையா இரட்டையா போட்டுக் கொண்டிருந்தான்...

வேட்டியை மடித்து கட்டி உட்காருவதை அசௌகரியமாக உணர்ந்தவன்... ஒரு பக்கம் காலை போட்டு உட்கார பில்லியினில் அமர....

“ரியர் வியூவில் அவனைப் பார்த்து தலையில் அடித்த தினேஷ்..

“பாரு அங்க... வோ லடுக்கி(அந்த பொண்ணு) சாரி  டபுள் சைட் போட்டு ஜாதா ஹே!!!!!!!!”, என்று முன்னால் சென்ற வண்டியைக் காட்ட....

அது அவனுக்கு பெருத்த அவமானமாகப் பட,

‘ச்சே.. வெட்கத்துக்கு விசா கொடுத்து அனுப்பி விட்டு.. நாம தொடை தட்டிரு அளவுக்கு இந்த வேட்டியை ஏத்தி கட்டுறோமாக்கும்!!!’

என்று எதற்கும் துணிந்தவனாக.. தோரணையாக அதை மடிக்கும் பொழுதே... அதை செய்ய விடாது  அலைபேசி சிணுங்கியது...

பாலாஜி தன் அழைப்பு எடுக்கப்பட்டதும், வேகமாக....

“ஹலோ... மிஸ்டர் ஆர்யா?”, என்று கேட்க..

“ஆர்யமன்..”, என்ற அழுத்தமாக திருத்தியது ஆர்யமனின் குரல்.

தன் பெயரை அவன் திருத்திய விதமே ஹர்ஷவர்தன் சொன்னது போல இவனிடம் எளிதாக பேச முடியாதோ.. என்ற எண்ணத்தை இவனுக்கு தோற்றுவிக்க..

“ஸாரிங்க.. ஆர்யமன்... நான் ஹர்ஷ...”, என்று பாலாஜி ஆரம்பிக்கும் பொழுதே..

எதிர்முனையில்,  வண்டியின் இரைச்சலோடு சேர்ந்து வந்த  “ஆர்யமன்”, என்று சன்னமான ஒலித்த  பெண் குரலும்  எதிர்முனையில் இருந்த பாலாஜியின் காதுகளையும் தீண்டியது..

உடனே... “ஹோல்ட் ஆன்..”, என்று  பாலாஜியிடம் சொன்ன ஆர்யமன்... அந்த அழைப்பை ஹோல்ட்டில் போட மறந்து விட்டான் போலும்... எதிர்முனையில் நடந்த உரையாடல் தானாக பாலாஜியின் காதில் விழுந்தது...

“சொல்லுங்க கோகிலா...”, என்றது ஆர்யமனின் ஆர்யமனின் குரல்

“இந்தாங்க...”, என்றது அந்த பெண் குரல்...

‘இந்த பொண்ணு ஆர்யமன்கிட்ட எதோ கொடுக்குது போல.. ‘ என்று காதில் வந்து விழுந்த வார்த்தைகளை தானாக இவன் மூளை கிரகித்தது.. அதைத் தொடர்ந்து... வந்த ஆர்யமன் குரலில் பாலாஜியை வியக்க வைத்தது..

“வாவ்.. யு மேட் மை டே! தேங்க்ஸ்”

அவன் குரலில் குதூகலமான வார்த்தைகள் அதையும் மீறி அத்தனை நெகிழ்ச்சி..

அதற்கு அந்த பெண் குரல் ஏதோ சொன்னது... சன்னமாக வந்த அந்த குரலைத் தொடர்ந்து உயர்த்தப்பட்ட வண்டியின்  இரைச்சலில் அவள் சொன்னது பாலாஜியின் காதில் விழாமல் போய் விட.. 

அடுத்த சில நொடிகளில் அந்த வண்டியின் இரைச்சல் அதிகமான வேகத்திலே தேய்ந்தும் போயிற்று.... ஆக்சிலேட்டரை உயர்த்தி வண்டியில் அந்த பெண் பறந்திருப்பாள்.. என்று இவனால்  அனுமானிக்க முடிந்தது...

‘இப்போ நம்ம கால் க்கு வருவான்’, என்று பாலாஜி எதிர்பார்த்திருக்க...அதற்கு எதிர்மாறாக...

“கோக் கொடுக்குது என்ன ஸ்பெஷலா??”, என்ற சன்னமான ஒலித்தது ஒரு  வேறொரு ஆணின் குரல் - 

இதைக் கேட்ட பாலாஜி, ‘கோகிலான்னா  கோக் க்கா..... ஹா... ஹா... ஆர்யமனுக்கு கோக் என்ன ஸ்பெஷல் கிப்ட் கொடுத்ததோ??? ச்சே.. ஒட்டு கேக்கிறேனே..’, தான் செய்வது தனக்கே அவமானமாக தோன்றினாலும் அதை செய்யாமல் இருக்க முடியவில்லை அவனால்...

அப்பொழுது இவன் சிந்தையை கலைக்கும் விதமாக,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.