(Reading time: 21 - 41 minutes)

ற்று முன் சொன்னதையே ஆங்கிலத்தில் சொன்னான்.. ஆனால், இந்த முறை அழுத்தம் இன்றி.. ஆறுதல் போல சொல்ல...

பாலாஜிக்க , “ஓ...ஓகே ஆர்யா!”, என்ற பதிலைத் தவிர வேறு வழி தெரியவில்லை ..

“ஆர்யமன் ”, மறுபடியும் திருத்தி விட்டு அவன் இணைப்பைத் துண்டித்து விட..

ஆக மொத்தம் சசி பற்றி தெரிந்து கொள்ளவென்று முயன்ற பாலாஜிக்கு குழப்பமே மிஞ்சியது.

“ப்ச்.. இவன் என்ன பிடி கொடுக்காம பேசுறானே... அய்யோ... ஒட்டடை குச்சி என்னத்தை இழுத்து வைக்கப் போறியோ??!!! இன்டரன்ஷிப் முடிந்ததும் முதல் வேலையா வந்து  உன்னை ஊருக்கு அழைச்சிட்டு போகணும்.. இல்லை உன் கூட குப்பை கொட்டணும்‘, எந்த திருப்தியும் அடையாதவனாக தனக்குள் முடிவெடுத்தான் பாலாஜி!

அவனுடன் பேசி விட்டு அலைபேசியை வைத்த ஆர்யமனுக்கும் எரிச்சலாக வந்தது..

‘நாள் முழுதும் அவ ஆர்யா ஆர்யான்னு உயிரை எடுத்தா.. இப்போ இவன்.. ஹர்ஷா உன் மொத்த குடும்பமும் என்னை குத்தகைக்கு எடுத்து புண்ணாக்குறதுக்குன்னே இருக்கீங்களா???..’, என்று பொங்கிய ஆத்திரத்தை...

மற்றொரு கையில் இருந்த அந்த கவரில் வந்த லாவண்டர் வாசம் கலைத்தது..

பப்பியின் பிரத்யோக லாவண்டர் வாசம் இவன் சுவாசத்தில் கலந்து மனதை இறக்கை கட்டி பறக்க வைக்க...

தினேஷ்ஷூடன் பைக்கில் கிளம்பியவ்னுக்கு... அவன் பேசிய எதுவும் காதிலே விழவில்லை..

‘பேசப் பேச அமைதியாக வருகிறானே.. ‘, என்று சந்தேகமாக தினேஷ்  ரியர் வியூ கண்ணாடியில் பார்க்க.. இவனோ அந்த கவரை வைத்துக் கொண்டு தவக் கோலம் பூண்டிருக்க...

‘இவனுக்கு ஏதோ சரியில்லை.. நிஜமாவே கோக் மேல க்ரஷ்ஷா இவனுக்கு??? நம்பவே முடியலையே!’, குழம்பிப் போனான் தினேஷ். தினேஷ்க்கு ஆர்யமன் நல்ல நண்பன் தான்! அதற்காக எல்லாவற்றையும் கேட்டு விட முடியாதே... அப்படி ஒரு எல்லையில் தானே எல்லாரையும் நிறுத்தி வைத்திருக்கிறான்.. அதை மீறினால் அவன் தள்ளிப் போய் விடுவான்.

தினேஷ் ட்ராப் செய்ததும், அவனிடமிருந்து விடைபெற்று வீட்டிற்குள் நுழையும் முன்னே, ஆர்யமனை வரவேற்றது ஹை டெசிபலில் உறுமிய வாசுவின் குரல்!!! 

“நானும் ஆவேன்டா ஐ. பி. எஸ்”,  அவர்கள் வீட்டில் இருக்கும் சரவுண்ட் சவுன்ட்டில்.. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அவன் குரல்.... ரிப்ளே மோட்டில் மீண்டும் மீண்டும் ஒலித்து.. வீடெங்கும் எதிரொலித்தது..

அதைக் கேட்டால் ஆர்யமனுக்கு கடுப்பு வந்து கத்தியிருக்க வேண்டும்...  இன்றோ பாசத்துடன்... “வாசு”, என்றழைத்த படியே வீட்டிற்குள் வர..

வாசுவோ சலனமின்றி கட்டிலில் கவுந்தடித்து படுத்திருக்க... அதைக் கண்டவனது கைகள் இந்த நேரம் துருதுருவென்று இயங்கி இருக்க வேண்டும்..

ஆனால், இன்றோ எதுவும் பேசாது அமைதியாக கையில் இருந்த கவரை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றான்..

அன்று பெய்திருந்த மழையில் தரை முழுவதும் ஈரமாக இருக்க..  மாடியின் தடுப்புச் சுவரில் சாய்ந்த படி.. அந்த கடிதத்தை படிக்க ஆரம்பித்தான்...

ஒவ்வொரு எழுத்தையும் படிக்க படிக்க இவன் மனம் ஆனந்த கூத்தாடியது..

அப்படி ஒன்னும் அவள் மானே, தேனே என்றெல்லாம் எழுதவில்லை.. நான்கு வரி புதிர்.. அதன் கீழே பப்பி என்ற கையெழுத்து... இது தான்!

வைரக் கல் தன் உருவத்தினால் அல்ல... கடினத்தன்மை பெற்ற அந்த சிறு கல்... ஊடுருவும் ஒளியை தனக்குள்ளே பல்வேறு கோணங்களில் பிரதிபலித்து அனுப்பி விடும் அரிய குணத்தினாலே மதிப்பு பெருகிறது..

அதே போல... பப்பியின் எழுத்துக்கள் இவனுக்கு வைரக்கற்கள்... இவன் மனதில் ஊடுருவி முக அக எதிரொளிப்பாய்.... இருண்டு போன இவன் உள்ளத்திற்கு.. ஒளி வெள்ளத்தை பாய்ச்சும் திறன் பெற்றது...

உயிரில்லை

ஆனாலும்.. காற்று வேண்டுமே நான் வாழ....

உருவமும் இல்லை...

ஆனாலும்  வான் நோக்கி பல கைகள் ஏந்தி நிற்பவன் நான்..

நான் யார்?

கண்டு பிடி கண்டு பிடி....

லாவ்ண்டர் வாசம் வீசிய காகிதத்தில்.. பொன் எழுத்துகளால் எழுதப்பட்டு இருந்ததை ரசித்து படித்தவனுக்கு அதற்கான பதில் கண்டு பிடிக்க  நானோ செகன்ட் கூட ஆகவில்லை..

அளவுக்கதிகமான IQ அவனது பலம்.. அவனுக்கு  இணையான அறிவாற்றல் கோடியில் ஒருவருக்கு இருப்பதே அபூர்வம். அதை நிரூபிக்கும் ஐ.கியூ தேர்வுகளில் பங்கேற்பதில் ஆர்வமின்றி ஒதுங்கி விட்டவன்!

“தீ”, என்று பதிலை கண்டுபிடித்தவன்...

“தித்திக்கும் தீ...”, என்றான் புன்னகையுடன் அந்த காகிதத்தில் இருந்து விழி அகற்றாது...

“ஐ எம் மேட் அட் யு பப்பி.. இந்த நாலு வரியை கண்ணில் காட்டாம ஒரு மாசமா என்னை தவிக்க விட்டுட்டியே!!! எனக்கு கிடைக்கிற இந்த  சந்தோஷத்தை பறிக்கிறதுல அப்படி என்ன திருப்தி உனக்கு?”,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.