(Reading time: 21 - 41 minutes)

னக்கு தெரியாது! இன்னைக்கு மட்டும் இதை பார்க்கலைன்னா... எனக்கு ஆறுதலே கிடைச்சிருக்காது!!!”

இயலாமையில் கண்களை மூடி அந்த கடிதத்தில் முகம் புதைத்து சரணடைந்தவன்.. 

‘இந்த ஆறுதல் எல்லாம் எத்தனை நாளைக்கு உன்கிட்ட இருந்து கிடைக்கும்ன்னு  தெரியலை!!!’,

‘அதுக்காக கடவுள்கிட்ட உன்னை எனக்கு கொடுன்னு  கேட்கலை! உனக்கு  எந்த தீங்கையும் கொடுக்காதேன்னு மட்டும் தான் கேட்கிறேன்...’

வலியை தீர்க்கும் வழியோ... மனது தேடும் பிடிப்போ... ஒரு இழப்பின் வழியில்... எந்த பிடிப்பிற்கு செல்லாமல் மனதை இருக்கியவனுக்கு ஒரு உறவின் இழப்பை மற்றொரு உறவால் தான் ஈடு செய்ய முடியும் என்பது அறியாமல் நெஞ்சுருக வேண்டினான்..

எத்தனை நேரம் அசையாது இருந்தானோ.... மீண்டும் தூவானம் தூரலிட... சிந்தை கலைந்தவன்... மாடியிலிருந்து இறங்கி வந்து தனது லேப்டாப்பை கையில் எடுத்தவன்...

இன்னும் வாசு அசையாது கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்ததை கவனித்து அவனருகில் வர...

வாசுவின் முன்னிருந்த  பம்பரத்தை விநோதமாக பார்த்த ஆர்யமனுக்கு அவனை சீண்டும் எண்ணம் தலை தூக்கி விட்டது!

‘வாசு...”, ஒரு கையால் அவன் தோளை உலுக்க... அவன் அசையாததால்...

தனது லேப்டாப்பால்  அவன் மீது ஒரு மெல்லமாய் ஒரு போடு போட...

“அய்யோ.. வலிக்குதுடா!!”, அவன் துள்ளி எழுந்து கொள்ள...

ஆர்யமன், “நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன் மச்சி!!! வா போய்..”, என்று ஆரம்பிக்கும் பொழுதே...

“ஏன்டா.. எனக்கு வலிச்சா உனக்கு ஹேப்பியா இருக்குமே!!!”, என்று அலுத்துக் கொள்ள...

இன்னும் “நானும் ஆவேன்டா ஐ. பி. எஸ்”, என்று அலறிக் கொண்டிருந்த ஸ்பீக்கரை அணைத்து விட்டு வாசுவிடம் திரும்பியவன்...

“அது தெரிஞ்ச விஷயம் தானே டா! சரி விடு... இந்த சந்தோஷத்தை கொண்டாட நாம போய்...”

“சரக்கடிக்கலாமா???”, கேட்டான் வாசு ஆவலாக...

“மனிதர் உணர்ந்து கொள்ள மனித நட்பா இது சரக்கடிக்கிறதுக்கு? அதையும் தாண்டி புனித...”, ஆர்யமன் தீவிரமாக பேச ஆரம்பிக்க...

வாசுவோ இடைபுகுந்து, “வேண்டாம் மாப்ளே! புனிதத்தோட  புனிதத்தன்மையை கெடுத்துடாதே!!! எங்க போறோம்ன்னு பில்டப் பண்ணாம சொல்லு”, என்று பதற..

“ஒரு ஐ.பி.எஸ் பாடிக்கு ... சரக்கு இல்லை சாப்பாடு தான் முக்கியம்!!! சோ, ஆந்திர மீல்ஸ்!!!!”

“ஆந்திரா மீல்ஸ்ஸா.. ஸாரி.. மாப்ளே.. நான் கனவு கான்றதுல பிசியா இருக்கேன்..நீ வேணா போயிக்கோ”

என்று அந்த பம்பரத்தை சுழல விட்டு கவுந்தடித்து படுக்கப் போக...

அவன் செய்கை புரியாது விழித்த ஆர்யமன், “என்னடா பம்பரத்தை சுத்த விடுற??”, என்று கேட்க,

“இங்கிலீஷ் சரளமா பேச இன்ஸ்பெக்ஷன் படத்தை பார்க்க சொல்லி சொன்னேல?”, வாசு விளக்க ஆரம்பிக்க.... ஆர்யமன்,

“இன்ஸ்பெக்ஷனா?????!!!! ஓ.... இன்செப்ஷனா...”, என்று சரி செய்ய... வாசுவோ,

“அது என்ன ஆப்ஷனோ மச்சி! அப்துல் கலாம் கனவு காண சொல்லியிருக்கிறார்.. விவேகானந்தர் நீ என்னவோ நினைக்கிறியோ அதுவா ஆவாய்ன்னு சொல்லியிருக்கிறார்.. “

“அப்துல் கலாமையும் விவேகானந்தரையும் கலந்து... அதுக்கு ஹாலிவுட் ரேஞ்ச்ல ஒர்க் அவுட் செய்றேன் மச்சி!  இப்போ கனவுலே ஐ.பி.எஸ் ஆகுறேன்.. எட்டு என்கவுண்டர் பண்ணிட்டேன் மாப்ளே.. இன்னும் இரண்டு பண்ணா.. ரவுண்டா பத்தாகிடும்.. சோ அது வரைக்கும் டோன்ட் டிஸ்டர்ப் மீ”

என்று மீண்டும் படுக்க போக...

ஆர்யமன், “மச்சி இப்போ நல்ல மூட்ல இருக்கிறேங்கிறதாலே... இப்படியே இருப்பேன்னு மட்டும் கனவுலயும் நினைச்சிடாதே!” என்று மிரட்டலை அசால்ட்டாக வைக்க.....

“அதுக்கு தான்... என் கனவுலே பர்ஸ்ட்டே உன்னை என்கவுண்டர் செய்துட்டேன்”, என்று வாசுவும் அதே அசால்ட்டில் கவுன்டர் கொடுக்க..

சந்தோஷத்தை பகிர ஆசையாக வந்த ஆர்யமன் கடுப்பாகிப் போக, ‘கனவு காண்றியா.. கனவு’, உள்ளுக்குள் கருவியவாறு,

“மச்சி... கனவுலே இருக்க.. உன் போன் பாஸ் கோட் டை மறந்தும்  எனக்கு சொல்லிடாதேடா”, என்று நினைவு படுத்துவது போல தூண்டில் போட....

“அதெப்படி ஒன்று இரண்டு மூணு நாலு ன்னு நான் மறக்க கூடாதுன்னு வைத்த பாஸ்வேர்ட்டை மறந்தும் சொல்லவே மாட்டேன்டா உன்கிட்ட”, என்று வாசுவும் சிக்குவது தெரியாமல் சிக்கிக் கொள்ள..

“சொல்லிடாதேடா.. யு கண்டின்யூ...”, என்று அவன் கனவை கெடுக்க விரும்பாத  அப்பாவி போல சொல்லிச் சென்றான் ஆர்யமன்... பாவம் அவன் வைக்கும் ஆப்பு... அது கிடைத்த பின் தானே வாசுவிற்கு தெரியும்!!!

தொடரும்

Episode 10

Episode 12

{kunena_discuss:922}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.