(Reading time: 16 - 31 minutes)

10. புதிர் போடும் நெஞ்சம் - உஷா

புதிர் 10

சி அலைபேசியின் அழைப்பை எடுக்க வெளியேற..

ஸ்ருதி, ‘சசி அக்கா சொன்னதை வைச்சு குழப்பம் தான் மிச்சம்.. ஹூம்.. நம்ம ஃப்ரண்ட்ஸ் அவங்க இன்வெஸ்டிகேஷனை எந்த அளவுக்கு ஓட்டி இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கணும்‘, என்று எண்ணிக் கொண்டே தனது டெஸ்கிற்கு வர.. அவளை  எதிர் கொண்ட அவள் தோழி...

“என்ன ஸ்ருதி! ஹச். ஆரை பார்த்து ஐ.டி. கார்ட் தொலைஞ்சதை ரிபோர்ட் செய்துட்டியா?”, என்று இவள் கேட்டதும் தான் அந்த விஷயமே நினைவுக்கு வர..

Puthir podum nenjam

‘நமக்கே ஆயிரம் பிரச்சனை.. இதில் மத்தவங்க விஷயத்தை யோசிச்சா இப்படி தான் நடக்கும்.. இனி இதை பத்தி பேசக் கூடாது!’, என்று தனக்குத் தானே அறிவுறுத்தி  தலையை உலுக்கியவளைக் கண்டு..

அவள் தோழி தோளைத் தட்டி,

“என்ன ஆச்சு?”, கேட்டவள்.. பின் அவள் பதிலுக்கு காத்திராமல்,

“சரி.. ட்ரையினிங் செஷன்க்கு டைம் ஆச்சு! அங்கே போய் பேசிக்கலாம்”, என்று அழைச்ச சென்றாள்.

அங்கே சென்றதும்... அந்த பேட்ச்சில் இருந்தவர்கள் இருக்கையில் அமர்ந்ததும் சல சலக்க ஆரம்பித்த கூட்டத்தை... அமைதி படுத்திய அந்த பேட்ச்சில் இருந்த அபினவ்,

“ஹே... நாம நேத்து பேசினோம்ல அந்த CTO டாபிக்! இன்னைக்கு அதை கன்பர்ம் பண்ற மாதிரி சுடச் சுட ஒரு ஹாட் நியூஸ் கொண்டு வந்திருக்கேன்..”, என்று ஆரம்பித்தவன்,

ஸ்ருதி, ‘இப்போ தான் அதைப் பற்றி பேசக் கூடாது ன்னு நினைச்சேன்.. மறுபடியும் பேச வைக்கிறாங்களே.. கடவுளே.. இதுக்கு நான் வீட்டில் மெகா சீரியல் பார்த்துட்டு உட்கார்ந்து இருக்கலாம்’, என்று தனக்குள் நினைத்து கொண்டாலும்.. அவள் காதில் தானாக விழுவதை தடுக்க முடியுமா என்ன?

“ஸ்மோகிங் க்ரவுண்ட்ல மார்கெட்டிங் டீம்ல இரண்டு பேர் பேசிகிட்டு இருந்ததை கேட்டேன்.. அதை வைச்சு பார்த்தா... ஆர்யா வுக்கும் மார்க்கெட்டிங் டீம்ல உள்ள கோகிலாவுக்கும்  ஏதோ... சம்திங்.. சம்திங்.. போல... “

“இன்னைக்கு கூட ஹவுஸ் கீப்பிங் பாய்கிட்ட அந்த கோகிலா ஏதோ கவர் கொடுத்து CTO கேபின்ல வைக்க சொல்லி இருக்காங்க.. அதை தான் பெரிய விஷயம் போல டிஸ்கஸ் செய்தாங்க”, என்று அவன் அந்த விவரத்தை சொல்ல...

அதைக் கேட்ட மற்றவர்கள் அதிர்ச்சியாய்... ஆளாளாக்கு ஒன்று பேச...

“அபினவ் இது தப்பு! நாமளா காதுல கேட்கிறதை வச்சு ஒருத்தவங்களை ஜட்ஜ் பண்ணக் கூடாது”, என்று கண்டித்தாள் ஸ்ருதி!

“ஹே... யாரு ஜட்ஜ் பண்ணா.. அத்தனை ‘கேர்ல்ஸ்’ ஸூம் அவரை சைட் அடிக்கிறீங்க.. அப்புறம் எங்களுக்கு பொறாமை வராதா? அவரோட மைனஸ் பாயின்ட்ல்லாம் ஹைலைட் பண்ணா தானே எங்களுக்கு கேப் கிடைக்கும்!”, அபினவ் சொல்ல..

“செம மச்சி”, என்று அவனுக்கு ஹை ஃபை கொடுத்தனர் பேட்ச்சில் இருந்த மற்ற இளைஞர்கள்!

“இத்தனை பொண்ணுங்க பார்த்தாலும்.. அவர் ஒருத்தரை கூட திரும்பி பார்க்கலை! அங்க தான் ஆர்யா வித்தியாசப் படுறார்” - என்றாள் ஸ்ருதி விடாமல்! அதை மற்ற பெண் தோழிகள் ஆமோதிக்க...

“அப்ப அவர் உங்களை பார்க்கலைங்கிறது தான் கவலையா?”, என்று அபினவ் கிண்டலாக கேட்க அனைவரும் சிரிக்க..

ஸ்ருதி அவனை முறைக்க...

அப்பொழுது அந்த அறைக்குள் அரவம் கேட்க.. இவர்கள் சிரிப்பை நிறுத்தி விட்டு திரும்பி பார்க்க... அறைக்குள் நுழைந்தாள் அந்த அழகிய பெண்! அத்தனை பேரும் அசந்து போய் அவளைப் பார்க்க..

“நான் கோகிலா! மேக்ஸ் சாப்ட்டின்  பிஸ்னஸ் டொமைன் பத்தி பேச வந்திருக்கிறேன்...”, என்று தன்னை அறிமுகப் படுத்த..

அனைவரும் மனதிலும் அபினவ் சொன்ன செய்தி தான் நிழலாடியது.. கோகிலாவின் அழகோ.. என்னவோ.. அவன் சொன்ன செய்தி உண்மையாக இருக்குமோ என்று தான் யோசிக்க வைத்தது..

ஆர்யமன், ப்ரொஜெக்ட்டரில் அந்த அமெரிக்க பிரதிநிதிகளுக்கு தனது கண்டுபிடிப்பின் வடிவமைப்பை பற்றிய ப்ரெசென்ட்டேஷனை ஓட விட்டான்...

ஆம், பில்லியன்களில் வருமானத்தை ஈட்ட ஆரம்பித்திருக்கும் கண்டுபிடிப்பு அது! படைப்பு அவனது என்றாலும்.. அந்த படைப்பை பிரம்மாண்டமாக எடுத்துரைப்பது - அவன் மனைவியின் குரல் அல்லவா...

அந்த தேன் குரலோ... அவனை முந்தைய இரவு மஞ்சத்தில் கெஞ்ச வைத்த நினைவுகளை அள்ளித் தந்தது...

“போதும்... இனி உன் ‘லேப்’போட டாப்ல நான் மட்டும் தான் ”, நேரம் போவது தெரியாமல் சோபாவில் அமர்ந்து  வேலை பார்த்துக் கொண்டிருந்த தன்  மடிக் கணினியை பறித்துக் கொண்டு சுதாரிப்பதற்குள், “ஜங்”கென்று மடியில் அமர்ந்த அஞ்சனா.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.