(Reading time: 16 - 31 minutes)

பாட்டை ப்ளே செய்த பாலாஜி யாருக்கும் கேட்டு விடுமோ என்று சுற்றும் முற்றும் பார்த்து யாரும் இல்லாததை உறுதி செய்து கொண்டவன் நிம்மதி பெருமூச்சு விட... அங்கே புயலென முதுகைக் காட்டிய படி தோன்றினார் அந்த காவல் துறை அதிகாரி...

சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்

இவன் நடந்தால் போதும் நிலமும் வணங்கும்

ஹேய் சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்

ஐம்பூதங்கள் யாவும் இவனுள் அடங்கும்

வந்த வேகத்திலே படக்கென்று ஒரு அபெளட் டர்ன் போட்டாரே பார்க்கலாம்...

சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்

கம் ஆன்... ஏ....

இவன் நின்றால் போதும் நகரம் நடுங்கும்

சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்

இவன் கண்டால் போதும் அகரம் தொடங்கும்

சிங்கம்...

அந்த அதிரடி திகைத்து பாலாஜி நிமிர... அந்த அதிகாரி.. அவர்... அவர்... அட.. அவன்.. நம்ம வாசு தாங்க... சாதாரண வாசு இல்லை இன்ஸ்பெக்டர் வாசு!!!!!!

பாவம் அவன் பில்டப் கொடுக்க முயன்று.. சற்று ‘ஓவர் டோஸ்’ ஆகிப் போக... அந்த வழு வழுத் தரையில்... இவன் பம்பரமாக சுழன்று அபெள்வ்ட் டர்ன் எடுக்கும் பொழுது பூட்ஸ் வழுக்க.... இவன் விழப் போக...

அதிர்ந்த பாலாஜி... அவனைப் பிடிக்க வருவதற்குள்....

“ஸ்டெடி! ஸ்டெடி! ஐ எம் ஸ்டெடி சிங்கம்”, என்று தனக்குள் சொல்லிக் கொண்டே  தன்னிலை படுத்திக் கொண்ட அந்த சிங்கம் பாலாஜியிடம் திரும்பி,

“பதட்டப்படாதே பாஜி! நான் விழலை... இது ரொம்ப ரிஸ்க்கான டொரான்டோ ஸ்டைல் அபவுட் டர்ன்!!!”, என்று பெருமிதமாக சொல்ல..

அவன் சொன்னதை கண்டு கொள்ளாத பாலாஜியின் கண்களோ...

“மாம்ஸ்.. ஏதோ அதிகாரி வருவார்ன்னு சொன்னீங்க??”, என்று அவனையும் தாண்டி தேட...

வாசுவிற்கு சொத்தென்று ஆயிற்று.. “ஏன் என்னை பார்த்தா அதிகாரியா தெரியலையா?”, என்றான் நெஞ்சை நிமிர்த்தி!!!

“அய்யோ.. காமெடி பண்ணாதீங்க மாம்ஸ்!”, சிரிப்புடன் சொல்லிக் கொண்டே கீழே கிடந்த தொப்பியை எடுத்துக் கொடுக்க.... அதை தன் தலையில் மாட்டிக் கொண்டு..

“டேய்... சிட்டுவேஷன் சாங்ல... துரை சிங்கம் பேர் மேட்ச் ஆகலை! அதுக்காக இப்படியெல்லாம் பேசக் கூடாது!”, என்று கண்டித்தவனாக.. தன் பேட்ஜ்ஜ காட்டி,

“இன்ஸ்பெக்டர் வாசு - ஹுயுமன் டொரான்டோ”, என்று ஒரு எக்கு எக்கி நின்று காட்டி அழுத்தி சொல்ல...

இவன் இரண்டாவது முறையாக டொரான்டோ என்று சொல்லவும்..

‘டொராண்டோ வா... அது ஊராச்சே. இவர்  டொர்ன்னேடோ வை சொல்றாரோ (சூறாவளி)’, என்று யோசித்தவன்..

“ஓகே .. ஓகே மாம்ஸ்! ஒய் டென்ஷன். நோ டென்ஷன்.. ஆந்திரா மீல்ஸ் சாப்பிட்டு அந்த டொர்னேடோவை ஆஃப் பண்றோம்..”, என்று சொல்லி ஆசுவாசப்படுத்தி விட்டு பார்க்கிங் லாட்டிற்கு செல்ல...

“நீங்க எப்படி மாம்ஸ் இங்கே?”, என்று பாலாஜி கேட்க...

“அது அந்த மீடியாவில் பாப்புலாரா சொல்றாங்களே அந்த சேட்ஜி கொலை கேஸ்.. அதை இன்வெஸ்டிகேட் செய்ய”, என்று ஆரம்பித்து பேச...

“வாவ்.. அந்த கேஸ் நீங்க தான் ஹேண்டில் பண்றீங்க..”, பாலாஜி கேட்க..

“சை.. சை.. அந்த டுபாக்கூர் கேஸ்சை வேற ஒருத்தர் பார்க்கிறார். நான் அவரை பக்கத்தில் ட்ராப் செய்துட்டு அப்படியே.. ஹோட்டல் ஊழல் கேஸ் இருக்குல்ல”, என்று வாசு சொல்ல..

“ஓ... அந்த கேஸ் ஹேண்டில் பண்றீங்களா..”

“சை.. சை.. அரசியல்வாதிங்களை பகைச்சி.. அவங்க ரிவ்ன்ச் எடுத்து.... இருக்கிற ஒரு லைஃப்பை எதுக்கு டீல்ல விடணும்.. ‘, என்று அதையும் தட்டி கழிக்க ...

“அப்புறம் எதுக்கு இந்த பக்கம் வந்தீங்க?”, என்று பாலாஜி கேட்க..

“அந்த கேஸ்ல அடிபட்டார்ல மினிஸ்டர் மைத்ரேயன் - அவர் இந்த கான்பிரன்ஸ்க்கு வந்திருக்கார். அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வந்த அதிகாரியை ட்ராப் பண்ண வந்தேன்...’, என்று வாசு முடிக்க..

“ஓ.. அவ்வளோ தானா... இதை முதல்லே சொல்லியிருக்கலாம்”, முணுமுணுத்துக்கொண்டே தனது காரை எடுக்க சென்றவன்...

அருகிலிருந்த ராயல் என்ஃபீல்ட் புல்லட்டைப் பார்த்ததும்...

“மாம்ஸ் ஹர்லி டேவிசன் வைச்சிருந்தாலும்.. இதுல உள்ள கெத்தே தனி”, என்று அதை வியந்து வாசுவிடம் திரும்ப...

“இதாடா உன் காரு!!!”, என்று  பாலாஜியின் அந்த  சிகப்பு நிற ஆஸ்டன் மார்டனை தடவி கொடுத்துக் கொண்டிருந்தான்..

‘சே.. இன்னைக்கு இந்த காரை எடுத்துட்டு அந்த எத்திராஜ் பக்கம் ஓட்டிட்டு போனா... அத்தனை ஃபிகருங்களும் என்னை திரும்பிப் பார்க்கும்’,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.