(Reading time: 16 - 31 minutes)

ந்த காரில் இவன் பறப்பது போலவும்.. சுற்றிலும்.. இவனை கொஞ்சிய படி பெண்கள் கூட்டம் கெக்கே பிக்கே என்று சிரித்த வருவது  போலவும்.. கனவு உலகில் சஞ்சரித்துக்  கொண்டிருந்தவனை பாலாஜி உலுக்க.. நிகழ்வுக்கு வந்த வாசு...

“கிளம்பலாமா?”, கேட்டுக் கொண்டே இவன் காரை அன்லாக் செய்ய......

“டேய்.. இந்த புல்லட்டை ஓட்டி போர்!!! உன் காரை நான் எடுக்கிறேன்”, என்று சொல்ல...

“அட புல்லட் உங்களதா!!!! சூப்பர் மாம்ஸ்.. அதில் போகலாம்!“, என்று புல்லட் பக்கம் போக..

‘அட பாவி வாசு.. வாயை விட்டுட்டியே!!! ஆஸ்டன் மார்ட்டின் கனவு!!!!!’,

“இல்லைடா... நாம இந்த கார்லே”, என்று ஆரம்பித்தவனை இடைமறித்த பாலாஜி,

“சிங்கம் கெட்டப்ல இருக்கிற உங்க  கூட புல்ல்ட் ல போறது செம கெத்து !!! பக்கத்திலே வேற எத்திராஜ்!! பொண்ணுங்க முன்னாடி என்னை மாதிரி சின்ன பசங்களுக்கு அதானே வெயிட்!”, என்று சொல்ல...

“என்னடா இன்ஸ்பெக்டர் கிட்டேவா?”, கேட்டான் வாசு

“அட வாங்க  மாம்ம்ஸ்!!! நீங்க சிங்கம் - ஹூயுமன் டொரன்டோ!!! பைக் உறுமினா தான் இபகெட் ”-, என்று சொல்ல..

‘நான் ஹூரோவாகலாம்ன்னு ஆசைபட்டா.. இவ மாம்ஸ் மாம்ஸ்ன்னு வேற மாமா ஆக்கிடுவான் போலவே’, என்று அங்கலாய்த்துக் கொண்டவனால், அந்த அன்பு ????!!! கோரிக்கை தவிர்க்க முடியவில்லை..

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த உயர்தர உணவுகளைத் தவிர்த்து விட்டு மக்கள் நெருக்கடி நிறைந்த தி.நகரில் அந்த சிறியதொரு ஆந்திரா மீல்ஸ் உணவகத்தில்... ரசித்து உண்டு கொண்டிருந்த பாலாஜியை பார்க்க வியப்பாக தான் இருந்தது வாசுவிற்கு...

“இன்ஸ்பெக்டரா ப்ரமோட் ஆனதுக்கு இருந்து இருந்தும்  இப்படி ஆந்திரா மீல்ஸ்ல ட்ரீட் கொடுக்க வைச்சிட்டே போ”, என்று அவன் அங்கலாய்த்து கொள்ள...

“அப்படியா????!!!!! இது ட்ரீட்டா??”, அதிர்ந்து பாலாஜி கேட்க.. அதை எதிர்பார்க்காத வாசு சமாளிப்பாக,

“ஹை பட்ஜெட் ட்ரீட் வைக்க நான் என்ன ஐ.பி.எஸ்வா ஆகியிருக்கேன்! இன்ஸ்பெக்டரா தானே ஆகியிருக்கேன்! நானும் ஆவேன்டா ஐ.பி.எஸ்! அப்போ கொடுப்பேன்டா ஹை பட்ஜெட் பார்க் செராட்டான் ட்ரீட்!”, என்று வீர வசனம் பேச,

சிரித்த பாலாஜி, “பஞ்செல்லாம் நல்லா தான் இருக்கு. அந்த டோர்னேடோ டர்ன் எடுக்கிற ரிஸ்க்ல தான் கொஞ்சம் கால் ட்விஸ்ட் ஆகுது மாம்ஸ்! சரி.. ஜோக்ஸ் அபார்ட், உங்களுக்கு இன்ஸ்பெக்டர் ஜாப் பிடிச்சிருக்கா? எப்படி போகுது?”, என்று இவன் தீவிரமாக கேட்க.. அப்பொழுது சளைக்காமல் வாசு,

“ஐ.பி. எஸ்.ல உள்ள கெத்து இல்லை.. பட், இட்ஸ் ஓகே.. என் தங்கச்சி ஆசையா உங்க அங்கிள் கிட்ட சொல்லி வாங்கி கொடுத்திடுச்சு.. வேண்டாம்ன்னு சொன்னா அது மனசு கஷ்டபடும் பாரு! அதான் ஒத்துகிட்டேன்!”,

என்று பெருந்தன்மையாக சொல்ல...

கெத்து விடாமல் பேசுபவனை கண்டு வாய்விட்டு சிரித்தான் பாலாஜி.

“சரி.. அப்போ அங்கிள்கிட்ட சொல்லி டி ப்ரோமட் செய்ய சொல்லிடலாம்! உங்க அஞ்சு தங்கச்சி கவலை பட்டாலும், எங்க ஆர்யா அண்ணா சந்தோஷப் படுவார்”, என்று இவன் வாரி விட...

“ஹய்யோ... இப்படி என் தன்மானத்தை தட்டி எழுப்பி எழுப்பி, வாயை கிளறி... பொங்கல் வைக்க ப்ளான் பண்றதுல என் உயிர் நண்பனுக்கு  அசிஸ்டெண்ட் டைரக்டரா எப்போ ஆன?”

“நீங்களே வந்து வாலண்டியரா தலையை கொடுக்கிறப்போ... அதுக்கெல்லாம் அவசியமே இருக்காதுன்னு அண்ணாவே சொல்வாரே”, சிரித்துக் கொண்டே பதிலளிக்க..

வாசு நினைவு வந்தவனாக...

“ஆர்யாவுக்கு தெரியாதா நீ வந்தது?”

“நானே அஞ்சுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைச்சிருக்கேன்... அண்ணாவுக்கு தெரிஞ்சது.. அப்புறம் இரண்டு பேரும் சேர்ந்து எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்திடுவாங்க!”,

என்று பாலாஜி சொல்லவும்...

வாசுவிற்கு அன்று காலை ஆர்யா அவனை அலைபேசியில் அழைத்து..

“அவளை ஏமாத்துறேனே மனசு கஷ்டமா இருக்கு....”, என்று புலம்பியது  இவன் மண்டையைக் குடைந்தது...

‘ஒரு வேளை பப்பி சம்பந்தமா எதுவும்????’, என்று யோசனை வந்து போனது வாசுவிற்கு...

தொடரும்

Episode 09

Episode 11

{kunena_discuss:922}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.