(Reading time: 8 - 16 minutes)

13. சதி என்று சரணடைந்தேன் - சகி

சில நேரங்களில் விழிகள் காணும் காட்சிகளானது உண்மை நிலையை மறவ செய்து மனவேதனையை உண்டாக்கும்.

சர்வமும் சிக்கலான மாயையை அளிக்கும்.அத்தகு சந்தர்பங்களில் மனவுறுதியை இழக்க வேண்டாம்.இறைவனால் பறிக்கப்பட்ட எதுவும் நம்முடன் வாழும் பாக்கியமற்றது என்பதை உணருங்கள்.கீர்த்தி வாய்ந்த ஆனந்தம் சில அடிகளில் புலப்பட போகிறது என்று நம்புங்கள்.

கௌதமால் இன்னும் நம்ப இயலவில்லை.

Sathi endru saranadainthen

தீக்ஷா கூறி அவன் மறுத்ததை இன்று நேரிலே கண்டிருக்கிறான்.

கொட்டும் மழையில் தனித்து பயணம்.

சற்று நேரத்திற்கு முன் அவன் கண்ட காட்சி...

கார் பழுதடைந்ததால் அவன் ஒரு மரத்தடியில் நின்றான்.

அருகில் ஒரு டிஸ்கோ இருந்தது.

அவன் அதை கண்டும் காணாமல் நின்றான்.சித்தார்த்திற்கு போன் செய்து விவரத்தை கூறி இருந்தான்.

சில நிமிடங்களில் ஒருவரோடு ஒருவர் ஒட்டியப்படி ஒரு ஆணும்,ஒரு பெண்ணும் நன்றாக குடித்துவிட்டு வெளியே வந்தனர்.

நமக்கு ஏன் என்று நின்றவனின் செவிகளில் குழறியபடி ஒலித்தது அவள் குரல்.

அவள்...அக்ஷயா??

திடுக்கிட்டான் அவன்.

அவ்வாலிபன் அவளிடம் 

"ஐ லவ் யூ!"என்று கூற,இவளும் சாதகமாய் பதிலளித்தாள்.

என்றோ தீக்ஷா கூறியது நினைவு வந்தது.

"நீ காதலிக்கறது தப்பில்லை... ஆனா,உன் காதலை யாரோ ஒருத்தி தவறாக பயன்படுத்தினால் நண்பன் தானேன்னு உன்னோட காதல் தொடர அனுமதிக்க மாட்டேன்!"-மறைமுகமாக அவள் கூறியதன் காரணம் புரிந்தது.

அவர்கள் அவனைக் கடந்து காரில் ஏறி பயணித்தனர்.

நினைத்து பார்க்கவே அருவருப்பாய் இருந்தது.

எப்படி அவளுக்கு மனம் வந்தது?என் உணர்வுகளாடு விளையாட எப்படி மனம் வந்தது?

அவளை உயிருக்கு உயிராய் நேசித்தேன்.இதுவரை என் சுண்டுவிரல் நகமும் அவளை நான் தீண்டவிட்டதில்லை.

ஆனால் இன்று....

மழையின் துளிகள் அவனது கண்ணீரை கரைத்துக் கொண்டு வந்தன.

"டேய் கௌதம்!"-சித்தார்த் ஓடி வந்து அவனை தாங்கினான்.

"டேய்!என்னடா இது?நான் தான் வரேன்னு சொன்னேனே!"

"எல்லாம் பொய்யாயிடுச்சு சித்து!"

"என்னடா...என்ன உளர்ற?"

"அக்ஷயா!!

"அக்ஷயா??"

"என் கண் முன்னாடியே!!!"விவரத்தை கூறினான்.திகைத்து போனான் சித்தார்த்.

"காட்...நீ முதல்ல கார்ல ஏறு!"

அவன் மறுத்தான்.

"அறைந்தேன்னா...வாடா!"-காதல் பொய்யான வேளையில் நண்பனின் தோள் தாங்கியது.

கௌதமின் வீட்டில் ஒருவரும் இல்லை....

அவன் பெற்றோர் ஊருக்கு சென்றிருந்தனர்.

சித்தார்த் வீட்டிற்கு போன் செய்தான்.

"ஹலோ!"

"சம்யுக்தா..."

"என்னங்க?எங்கே போனீங்க?"

"கௌதம் வீட்டில இருக்கேன்!"

"என்னங்க?பக்கத்து வீட்டில இருந்து போனா?"

"நிலைமையை புரிஞ்சிக்கோம்மா...நான் நைட் இங்கேயே இருக்கேன்!"

"சரிங்க...உங்க இரண்டு பேருக்கும் சாப்பிட எதாவது கொடுத்து அனுப்பட்டா?"-அவன் கௌதமை பார்த்தான்.

நிச்சயம் இவன் சாப்பிட்டிருக்க மாட்டான்.

"ம்...கொடுத்தனுப்பு!"

"சரிங்க.."-இணைப்பை துண்டித்தான்.

"டேய் கௌதம்!"-அவன் கவனிக்கவில்லை.சித்தார்த்திற்கு ஆறுதல் கூறும் உத்தியும் புலப்படவில்லை.

"நான் என்னடா தப்பு பண்னேன்?அவளை எவ்வளவு காதலித்தேன்.ஏன்டா?"

"கௌதம்...அதை நினைக்காதே!எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்!"

"..............."

"இரு...சம்யுக்தா சாப்பாடு எடுத்து வரேன்னு சொல்லிருக்கா!சாப்பிட்டு  ரெஸ்ட் எடு!"

"எனக்கு வேணாம்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.