(Reading time: 8 - 16 minutes)

"கோபத்தை கிளறாதே!கொன்னுடுவேன்.டேய் அவ எப்படியோ போறா!அவ பண்ண தப்புக்கு நீ ஏன் தண்டனை அனுபவிக்கணும்?"

".............."

"கௌதம்!"

"நான் கொஞ்சம் தூங்குறேன்!"

"கௌதம்?"

"ப்ளீஸ்!"

"ஓ.கே."

மனிதன் அதிகமாக அன்பு பாராட்டியவைகள் ஏமாற்றும் போதோ!விலகும் போதோ!மனமானது தனது பலத்தினை தியாகம் செய்கிறது.புவியில் தனித்து பிறந்தவனால் தனித்து வாழா இயலாது என்ற மாயை உருவாக்கப்படுகிறது.

வெறுமை மனதை வியாபிக்கிறது.முடிவெடுக்க வேண்டிய சமயம் யுத்தமாகிறது.மனித மனம் யுத்த பூமியாய் மாறுகிறது.

மனதை அமைதி அடைய செய்ய என்னும் மனிதர்கள் இக்கட்டை விலக்கும் உபாயத்தை தேட மறுக்கின்றனர்.

கௌதமின் அடுத்த விடியல் தீக்ஷாவின் முகத்தில் உதயமானது.

புன்னகை ததும்ப முகத்தோடு அவனருகே அமர்ந்திருந்தாள் அவள்.

சித்தார்த் அவனுக்கு காபியை எடுத்து வந்தான்.

"ஏன்டா எருமை!ராத்திரி எவ்வளவு நேரம் எழுப்பறது?இப்படியா ஒரு மனுஷன் தூங்குவான்??

அவன் எழுந்து உட்கார்ந்தான்.

"அப்பறம் மச்சி...லவ் பிரேக் அப் ஆயிடுச்சாமே!"-இயல்பாய் கூறினாள் சதி.

"............."

"சரி விடு..உனக்கு அடுத்த வாரம் எதோ மீட்டிங்ல!அதுக்கு பிரிப்பேர் பண்ணிட்டியா?"

"ரொம்ப புத்திசாலித்தனமா மனசை மாத்துற தீக்ஷா!"

"காரணம் நீ முட்டாள்தனமா இருந்துட்ட!"

"..............."

"கேம் ஓவர்!இதெல்லாம் நடக்க போதுன்னு முதல்லயே தெரியும்!"

"நான் அக்ஷயாக்கிட்ட பேசணும்!"

"என்ன பேசணும்?இதெல்லாம் வேணாம்.இனி ஒழுங்கா இருன்னு சொல்ல போறீயா?அவ அப்படியே கேட்டுட்டு தான் மறுவேளை பார்ப்பா!வேணாம் கௌதம்!அவ சரியா வர மாட்டா!"

"நான்தானே வாழப்போறேன்?

"அப்படியே அடிச்சேன்னா தெரியும்!ஆள பாரு...என்னடா லவ் பண்றவங்களுக்கு இது என்ன பார்முலாவா?ஏ...லூசு...கல்யாணம் பண்ணிட்டு நீ மட்டும் இல்லை..உன் குடும்ப மானமம் சேர்ந்து அவக்கூட வாழ போகுது.உன் அப்பாம்மா பற்றி நினைச்சியா?வீட்டுக்கு ஒரு மருமக வந்தா அவளால பெருமைப்படணும்!தலைக்குனிய கூடாது!"

'............"

"சித்து..."

"என்னம்மா?"

"கௌதமுக்கு எதாவது ஒரு ஊருக்கு டிக்கெட் புக் பண்ணு!மூணு மாசத்துக்கு இந்தப்பக்கமே அவன் வரக்கூடாது!"-கௌதம் நிமிர்ந்தான்.

"நிம்மதியா போடா!புது மனுஷனா திரும்பி வா!"-அவன் கையை தன் கைக்குள் வைத்து,

"இத்தனை நாளா உன்னை காக்க வைத்திருந்த அன்பு இப்போ உனக்காக காத்துட்டு இருக்கு!"

"புரியலை..."

"எனக்கே புரியலைடா!கேள்விக்கேட்காதே! காரணம் மட்டும் இருக்கு!"-ஏனோ அவள் கூறிய வார்த்தைகள் அவன் மனதில் வெளிச்சத்தை ஏற்றின.

"அந்த ரிப்போர்ட்டர் யாரு?"

"பேரு ராகுல்...கரம் கோர்ப்போம் அறம் செய்ய பத்திரிக்கையோட ஹெட்!"

"எதுக்கு நம்ம விஷயத்தை அலசுறான்?அவனுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து சரிக்கட்டு!"

"முயற்சி பண்ணோம்!அவன் ஏளனமா சிரிச்சிட்டே போயிட்டான்!"

"அவனை பற்றின முழு விவரம் தேவை!நான் அவனை பார்க்கணும்!"

"வர சொல்றேன் சார்!"-ரகுவரனின் பணியாளர் வெளியேற,அவர் பேனாவை டேபிளில் குத்தினார்.

"ராகுல்...."ஒருமுறை அவன் பெயரை உச்சரித்து பார்த்தார்.

"டேய் அண்ணா!சீக்கிரம்டா!"

"இருடா!சாவி எடுத்துட்டு வரேன்!"

"சீக்கிரம்..."

"ஒழுங்கா படிடான்னா...ஊர் சுத்த வேண்டியது!இப்படி அரியர் எக்ஸாம்க்கு என்னையும் கூட்டிட்டு சுத்த வேண்டியது!இந்தமுறை கிளியர் பண்ணாம போ!ஊருக்கு அனுப்பி மாடு மேய்க்க விடுறேன்!"-என்று தன்னறைக்குள் நுழைந்து சாவியை தேடினான்.

"டேய் ராகுல்!உன் மூளையை எந்த மியூசியத்துல வைக்க?சாவியை எங்கேடா வச்ச?"-அவன் தேடினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.