(Reading time: 8 - 16 minutes)

வன் சாவியை எடுத்துவிட்டு திரும்பவும்,குளியறை கதவை திறந்து தீக்ஷா வெளி வரவும் சரியாய் இருந்தது.

மாற்றுடை எடுத்து செல்ல மறந்தவள் ஒரு நீள பூத்துவாலை உடலில் சுற்றிக்கொண்டிருந்தாள்.

அவளைக்கண்டவன் ஸ்தம்பித்து போனான்.

அவனைக் கண்டவள் அலறி குளியலறை கதவின்  பின் மறைந்தாள்.

அவனது விழிகள் அவளை விலக மறுத்தன.

"என்னங்க ப்ளீஸ்!"-என்ற அவளது கெஞ்சும் குரலில் கலைந்தவன் தலைக்குனிந்தப்படி,"ஸாரி!"என்று கூறிவிட்டு அவசர அவசரமாய் வெளியேறினான்.

அவன் வெளியே சென்றது உறுதியாக வேகமாய் வந்து கதவை தாழிட்டாள்.மூச்சிரைத்தது அவளுக்கு!!

கீழே ஏதோ பித்து பிடித்தவனை போல கீழே இறங்கி வந்தான் ராகுல்.

"அண்ணா!மேலே என்ன சத்தம்?நீ ஏன் பேய் அறைஞ்சா மாதிரி வர?"

"ஆ...ஒண்ணுமில்லை!"

"என்னமோ சத்தம் கேட்டது?"-குறும்பாய் கேள்விக்கேட்டான்.

"டேய்!எக்ஸாம்க்கு கிளம்புடான்னா அவனைக் கேள்விக்கேட்டுட்டு இருக்க?"-ராகுலுக்கு உதவிக்கரம் நீட்டினார் ஆதித்யா.

"என்னப்பா நீங்க?திட்டிட்டே இருக்கீங்க?நான் ஊருக்குப் போறேன் போங்க!"

"போ!போ!ஊருல நல்லதா நாலு மாடு வாங்கி இருக்காங்களாம்!மேய்க்க தான் ஆள் இல்லையாம்!போயிட்டு வா!"ஆர்யா தன் தந்தையை முறைத்தான்.

"இரு!அம்மாக்கிட்டயே சொல்றேன்!"

"ப்ச்...இப்போ நான் என்ன சொல்லிட்டேன்?சீக்கிரம் கிளம்பு.டைம் ஆகுது பார்!"-உண்மையில் தந்தை மகனுக்கும் இடையேயான உறவும் அழகானதே!!

ஆனால் நமது ராகுல் இதனை கவனித்ததாய் தெரியவில்லை.அவன் கவனம் எல்லாம் எங்கோ இருந்தது.

காதலின் கண்திரை விலக ஆரம்பித்ததா??

ஆரம்பிக்க வைத்தாளா??

இருதயத்தின் சாவியானது அன்பில் அடங்கி இருக்கும்!சில நேரங்களில் நமது ஊடல்களிலே மறைந்திருக்கும்.ஏதேனும் ஒரு இடத்தில் நான்கு கண்கள் சந்திக்க தயக்கம் காட்டுகிறதா?சந்தேகம் வேண்டாம்...அதுப்பிரிவாயினும் காதலே!!!

எதையோ சிந்தித்தவண்ணம் அமர்ந்திருந்தார் சரண்.

மனம் முழுதும் கவலை வியாபித்திருந்தது.

"ன்னங்க!"

"ம்??"

"என்னாச்சுங்க?ஒருமாதிரி இருக்கீங்க?"

"புது அஸைன்மண்ட் அம்மூ!"

"என்ன?"அவர் மூச்சை இழுத்தார்.

"சின்ன சின்ன குழந்தைங்க!நம்ம அனு மாதிரி பொண்ணுங்க!எல்லாம் நல்லா படிக்க வைக்கிறேன்,வேலை வாங்கி தரேன்,கல்யாணம் பண்ணிக்கிறேன்னு பொய் சொல்லி உலகத்துல பல நாடுகளில் விற்றுடுறாங்க!அதுல,ஒரு பொண்ணு ரகசியமா எங்க டிபார்ட்மண்ட்க்கு அனுப்பி வைத்த ஆதாரத்தைப் பார்!!"-என்று தன் லேப்டாப்பை ஆன் செய்தார்.

"ஆதித்யா சார்!நான் உங்களை நம்பி தான் இந்த வீடியோவை அனுப்புறேன்.இதுக்கு முன்னாடி இதே மாதிரி நடந்தப்போது பல பொண்ணுங்களோட வாழ்க்கையை காப்பாத்தினீங்க!உங்களுக்கு இந்த ஆதாரம் உதவியா இருக்கும்னு நினைக்கிறேன்.சின்ன சின்ன குழந்தைங்க சார்! பத்து வயசு,12 வயசு தான் இருக்கும் தமிழ்நாட்டில இருக்கிற எல்லா மாவட்டங்களில் இருந்தும் காதலிக்கிறேன்,படிக்க வைக்கிறேன்னு ஏமாற்றி இங்கே கூட்டிட்டு வந்து கேவலப்படுத்தி வெளிநாடுகளுக்கு விற்கிறாங்க சார்! இங்கே இருக்கிற கம்ப்யூட்டர்ல இருந்த எல்லா விவரத்தையும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

இது உங்க கைக்கு வரும்போது நான் உயிரோட இருப்பேனான்ன தெரியாது!ஆனா,என்னை மாதிரி மற்ற பொண்ணுங்க வாழ்க்கை அழியக்கூடாது!எதாவது பண்ணுங்க சார்!"-மதுவின் கண்களில் கண்ணீர்.

"இத்தனை நாள் காத்திருந்தேன்.கேஸ் சி.பி.ஐக்கு மாறிடுச்சு!எதாவது பண்ணனும் அம்மூ!"

"எப்படிங்க?"

"எக்ஸ்பர்ட் இரண்டு பேரை வரவழைக்க போறேன்!"-அவர் கூறிய இருவர் யாரென விளங்கியதா??

"நான் கொஞ்ச நாள் கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கேன்."

"ஏன்?"

"நம்ம பையனுக்கு தான் ஒருத்தனை கண்டாலே சூடாகிடுதே!நாளைக்கு கிளம்புறேன்.டிரஸ் எடுத்து வை!"

"சரிங்க!"

"அம்மூ.."

"ம்?"

"ராகுலை பத்திரமா பாராத்துக்கோ!"

-அவர் கூறுவதன் பொருள் விளங்காவிட்டாலும் தலை அசைத்தார் மதுபாலா.

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:877}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.