12. சதி என்று சரணடைந்தேன் - சகி
காலத்தைப்போன்று சிறந்த திருடன் இருக்க இயலாது.எதையோ களவாடியதைப் போன்று அத்திருடனானவன் ஓடும் ஓட்டத்திற்கு ஈடுக்கொடுக்க எந்த பாதுகாப்பு படையினராலும் ஈடுகொடுக்க இயலவில்லை என்பதே உண்மை.ஆனால்,இறைவனும் அக்கள்வனை நம்பி நியாய தர்மங்களை வழிநடத்தும் பொறுப்பையும் நல்கியுள்ளான்.
விசித்ரம் நிறைந்த இறைவன்.
தனிமையில் எதையோ சிந்தித்துக்கொண்டிருந்த ஆதித்யாவின் நினைவை கலைத்தது ராகுலின் குரல்.
"அப்பா!"
"ம்...வாப்பா!"
"என்னப்பா யோசிச்சிட்டு இருக்கீங்க?"
"உன்கிட்ட சில கேள்விகள் கேட்கணும்!மழுப்பாம பதில் சொல்லு!"
"கேளுங்க...."
"நீ தீக்ஷாவை காதலிக்கிறீயா?இல்லையா?"-அவன் மனம் துணுக்குற்றது.
"ஐ நீட் தி ஆன்ஸர் இமீடியட்லீ!"
"ஐ டோண்ட் நோ!"
"ம்...அப்போ காதலிக்கலைன்னு எடுத்துக்கலாமா?"
"..............."
"நான் உன்கிட்ட சில விஷயங்களை ஷேர் பண்ண விரும்புறேன்.கீதா-ரகுவை பற்றிய உண்மைகள்!"-அவன் கேள்வியோடு நிமிர்ந்தான்.
"கீதா சாதாரண ஒரு பொண்ணு இல்லை..."
"............."
"பல நூறு கோடிக்கு ஒரே வாரிசு!அவ ஒண்ணும் தெரியாத பட்டிக்காடு இல்லை..."
"..........."
"டெல்லியில தி பெஸ்ட் லாயர்!"
"லாயரா?"
"ம்....ஒரு சின்ன தப்பு கண் எதிரே பட்டாலும் அவ்வளவு தான்.ரொம்ப கண்டிப்பானவ!தைரியமான பொண்ணு!உலகத்தோட பார்வையில சாதாரணமா தெரியுற விஷயம்.அவ பார்வைக்கு துருப்புச்சீட்டா இருக்கும்!"
"............."
"ரகு முதன்முதலில் ஒரு கேஸ் விஷயமா அவக்கிட்ட ரிப்போர்ட் வாங்க தான் போனான்.உன் அப்பா..."
"அப்பா!"
"சரி..என் நண்பன்!அவ்வளவு சீக்கிரம் எதிலும் சலனம் அடையாதவன்.ஒரு பொண்ணைக்கூட நிமிர்ந்து பார்த்தவன் இல்லை.அதுவே கீதாவுக்கு அவன் மேல நல்ல அபிப்ராயம் வர வைத்தது!அதுவே காதலா மாற வைத்தது.ஆனா ரகுக்கு தன்னால ஒரு பொண்ணு மனசு சலனப்படுற விஷயம் தெரியாது!அவன் இயல்பா இருந்தான்."
"நாளாக நாளாக கீதாவோட நடவடிக்கைகளில் தெரிந்த மாற்றம் அவனுக்கு உண்மையை சொல்லுச்சு!அவன் எவ்வளவோ விலகினான்.ஆனா,கீதாவோட காதல் மறுபடியும் மறுபடியும் அவனை தோற்கடித்தது!ஒருநாள் கீதாவுக்கு ஆக்ஸிடண்ட் ஆயிடுச்சு!யாருமே எதிர்ப்பார்க்கலை..துடிச்சு போய் ஹாஸ்பிட்டலுக்கு வந்தான்.அப்போ தான் அவன் மனசை கீதா என்னிக்கோ ஜெயிச்சிட்டான்னு தெரிந்தது.அந்த ஆக்ஸிடண்ட்ல கீதாவுக்கு தாய்மை அடையுற தகுதி இல்லாம போச்சு!"-அதிர்ந்து போனான் ராகுல்.
கீதாவை உண்மையா காதலிக்காதவனா இருந்திருந்தா அப்போவே அவளை விட்டு இருக்கலாம்!ஆனா,அந்த உண்மையை அவக்கிட்ட அவன் சொல்லவே இல்லை.
திக்கு தெரியாத இருட்டுல கிடைத்த சின்ன வெளிச்சமா கீதாக்கு இருந்த அந்தக்குறை தற்காலிகமானது தான்னு சொன்னாங்க!"
"அவனுக்கு கீதா தான் முக்கியமா இருந்தாளே தவிர அவ குறை பெரிசா தெரியலை..கீதா வீட்டுல எதிர்த்தபோது...இதோ நீ தீக்ஷா கையை பிடித்து கூட்டிட்டு வந்தீயே அப்படிதான் அன்னிக்கு கீதா கையை பிடித்து கூட்டிட்டு வந்தான் ரகு!"
"காலம் போக போக தன்னால ஒரு கருவை சுமக்க முடியலைன்னு கீதாக்கு சந்தேகம் வர ஆரம்பிச்சது!அதை சமாளிக்க எவ்வளவோ கஷ்டப்பட்டான்.அன்னிக்கு சுயநினைவு இல்லாம அவன் செய்தது தப்பு தான்!ஆனா,சத்தியமா சொல்றேன் கீதாவை தவிர எந்த பொண்ணையும் கற்பனை கூட பண்ணதில்லை அவன்.டிரெயினிங் போன அவன்கிட்ட கீதா பிரக்ணட்டா இருக்கான்னு பொய் சொன்னேன்.
அப்பக்கூட அவன் இனி தன்னால ஒரு உயிரை உருவாக்க முடியலைன்னு கீதா வருத்தப்பட மாட்டான்னு சந்தோஷப்பட்டான்.தான் அப்பாவாகுற சந்தோஷத்தை விட கீதா அம்மாவாகுற சந்தோஷம் தான் அவனுக்கு அதிகம் இருந்தது!"-ஆதித்யாவின் குரல் தழுதழுத்தது.
இடிந்து போய் நின்றிருந்தான் ராகுல்.
"கீதாவுக்கு இணையான ஏமாற்றங்களை அவனும் சந்தித்திருக்கான்.என்ன எப்போவும் ஆண்களோட ஏமாற்றம் மனதளவுல மட்டும் இல்லாம உணர்வுப்பூர்வமா இருக்கிறதால அவங்க பலருக்கு வில்லனாகவே இருக்காங்க..."