குரோதம் யாரிடம் கொள்ளப்படுகிறதோ அவர் அழிவதை காட்டிலும் ஆயிரம் மடங்கு வேகமாய் குரோதம் கொள்பவர் அழிந்துப் போகிறார் என்பதில் ஐயம் வேண்டியதில்லை.
பத்தாவது முறையாக அக்ஷயாவிற்கு அழைப்பு விடுத்தான் கௌதம்.அவள் எடுக்கவில்லை.என்ன நேர்ந்தது என்ற குழப்பமே அந்நாளை அவனுக்கு நரகமாக்கியது.
கடைசியாக ஒருமுறை அழைப்பு விடுத்தான்.இம்முறை அவள் எடுத்தாள்.
"ஹே..அக்ஷயா!என்னச்சும்மா?ஏன் போனை எடுக்கலை?"
"கொஞ்சம் வேலை!"
"எடுத்து ஒருமுறை அப்பறமா கால் பண்ண சொல்லி இருக்கலாமே!"
"இப்போ அதனால என்ன ஆயிடுச்சு?"
"நான் ரொம்ப பயந்துட்டேன்!"
"கௌதம்!ஓவரா சீன் கிரியேட் பண்ண வேண்டாம்!ஓ.கே."-அவன் மனம் ஒடிந்துப் போனான்.
"ஓ.கே.ஐ கால் யு பேக்!"-என்று இணைப்பை துண்டித்தான்.
முகம் ஏனோ வாடி இருந்தது.அமைதியாக அமர்ந்தவன் மனம் கூற விழைவதை எழுத பேனாவை தீண்டினான்.
' நேசங்கள் நிறம் மாற உணர்வுகள் தோறும் கவிதை எழுதினேன்.
காதலின் கனவுகள் கடிகார முட்களாய் ஓடிக்கொண்டிருக்க
காலச்சக்கரத்தின் வாள்முனையில் தவிக்கின்றேன்...
நீயில்லா வாழ்வும் நிஜமாகுமா?
நிழல் இல்லா தேகம் தான் உயிர் வாழுமா?
கண்கள் கூடி காதல் பேச
பெண்ணே...
நானும் உன் துணை தேட..
கங்கை,யமுனை நதிகளும் இங்கே
வற்றி காய்ந்து கரைந்தே போக..
என்சொல்வேன்
நான் என்சொல்வேன்??
வானும் இங்கு நிலவை தேடுதே...!"
எழுதுகோலை மூடி வைத்து கண்களை மூடினான்.
திறக்க மனமில்லாமல் நீண்டநேரமாய்....!
"மிஸ்.அனு சரண்!"-கடுப்பாகி போன தோழி ஒருத்தி அழைத்தாள்.
"ம்?"
"நாங்க யாருன்னு தெரியுதா?"
"என்னாச்சு?"
"வெளியே வந்து ஒரு மணி நேரம் ஆகுது!நாங்களும் பார்க்கிறோம் அந்தப் புக்கை பார்க்கிற,சிரிக்கிற,வெட்கப்படுற என்னாச்சு உனக்கு?"
"எப்படி சொல்றது?சான்சே இல்லைடி!அப்படி எழுதி இருக்காரு!"
"எவரு?"
"அவர் தான் கௌதம்!"
"யாருடி?"
"இந்த புக்கை எழுதினவர்!"
"அது சரி...யாரு?எந்த ஊரு?"
"தெரியாது!'
"எப்படி இருப்பான்?"
"தெரியாது!"
"என்னடி உளர்ற?"
"எனக்கு அவர் ரைட்டிங்க்ஸ் அவ்வளவு இஷ்டம்!"
"ரைட்டிங்க்ஸ் மட்டும் தானா?"
"ஏன்?"
"நீ நடந்துக்கறதை பார்த்தா அப்படி தெரியலை!"
"................"
"ஒருவேளை அந்த கௌதம் ஒரு அறுபது வயசு தாத்தாவா இருந்தா?"
"வெரி ஃபன்னி!"-என்று தோழிகளை கடிந்தாள் அவள்.
"ஏங்க..எங்கிருக்கீங்க?"-கத்தி கூப்பாடிட்டும் பலனில்லை.
"ஆர்யா!"
"மா!"
"அப்பா எங்கடா?"
"தெரியலையே!"-அவள் தங்களின் அறைக்கு சென்றாள்.
அவள் உள்ளே நுழைந்ததும் கதவு மூடியது.திரும்பினாள்.ஆதித்யா குறுக்கே கைகளை கட்டியப்படி நின்றிருந்தான்.
"நீங்களா?எங்கே போனிங்க?எங்கே எல்லாம் தேடுறது உங்களை?"