மறுநாள்...
ராகுலின் நித்திரையை கலைத்தது அவன் கைப்பேசி.
"ஹலோ!"
"............."
"சொல்லுடா!"
".............."
"இன்னிக்கு புதன்கிழமையா?காட்...ஞாபகமே இல்லை.வரேன்...வரேன்...ஒரு அரை மணி நேரம்!"-இணைப்பை துண்டித்து குளியலறைக்குள் ஓடினான்.
பத்து நிமிடத்தில் குளித்துவிட்டு வெளியே வந்தான்.
அவசர அவசரமாக தன் பேக்கில் எதையோ ஆராய்ந்தான்.
தேடிய பொருள் கிடைக்கவில்லை.
"ச்சே...எங்கே போச்சு?"-அச்சமயம் சதி எதற்காகவோ உள்ளே நுழைந்தாள்.
கிளம்பும் வேகத்திலோ..அல்லது அறிந்தே கூறினானோ!!
"சதி!என் பென்டிரவ்வை பார்த்தியா?"என்றான்.
அவள் ஸ்தம்பித்து நின்றாள்.திருமணமானதில் இருந்து இன்று தான் அவ்வளவு பெரிய வாக்கியத்தை பேசி இருக்கிறான்.எதிர்ப்பட்டாலும் விலகி கொள்பவன் வாய் திறந்துள்ளான்.
"உன்கிட்ட தான் கேட்கிறேன்!"-என்றப்படி அவளது தோளைப் பற்றி நகர்த்தி பின்னால் இருந்த அலமாரியில் தேடினான்.
அவன் விரல் தீண்ட சிலிர்த்தது பெண்ணின் மனம்.இயற்கையாய் கண்கள் கலங்கின.
"சதி!கேட்கிறீயா இல்லையா?-என்ற வினாவில் சுயநினைவு அடைந்தவள்,
"ஆ...அந்த டிராவில இருக்குங்க!"என்றாள்.
அவசரமாக அதை திறந்து பென்டிரவ்வை எடுத்தவனின் முகம் பிரகாசித்தது.ஏதோ வேகத்தில் அதை மூடியவனின் கட்டைவிரல் அதில் சிக்கியது.
"ஆவ்..."என்று கையை உதறினான்.
"ஐயோ!என்னாச்சு?"-என்று பதறியப்படி அவன் கரத்தைப் பற்றினாள் சதி
"என்னங்க நீங்க?பார்த்து பண்ண மாட்டீங்க?ரத்தம் வருதே..!"-என்று பதறியப்படி சென்று மருந்தை எடுத்து வந்து அவன் காயத்தை துடைத்து மருந்திட்டாள்.
அவன் வலியில் சிணுங்கிய போது அவள் முகம் வெளிப்படுத்திய வேதனை கூறியது ஒரு உத்தமமான காதலின் இலக்கணத்தை!!
பிரிவையே பரிசாய் அளித்திருந்தாலும்,அவனது வேதனையை காண இயலாதவளாகி போனவளை இமைக்காமல் கண்டான் ராகுல்.
நிலைமை உணர சிறிது அவகாசம் தேவைப்பட்டது இருவருக்கும்.தயக்கம் சற்றே வியாபிக்க மீண்டும் சுயநினைவை அடைந்தனர்.
"நான்...நான்...உங்களுக்கு டிபன் எடுத்து வைக்கிறன்!"
"ம்..."-அவன் அங்கிருந்து ஓடிவிட்டாள்.
ஏனோ அக்காயம் அவனுக்கு வலிக்க மறுக்கவே செய்தது.
மனம் முழுக்க பகை வியாபிக்க தீக்ஷாவின் புகைப்படத்தை எரித்துக்கொண்டிருந்தான் ஸ்ரீதர்.
"டேய்!என்னடா பண்ற?"-பதறினார் ஆர்த்தி.
"விடும்மா!இவளை எல்லாம்..."-அவன் முடிப்பதற்குள் ஓங்கி அறைந்தார்.
"மனுஷனாடா நீ எல்லாம்?இப்படி பகை பாராட்டுபவனையா பத்து மாசம் இந்த கருவுல சுமந்தேன்!அன்னிக்கு மண்டபத்துல நீ பண்ணதை விட கேவலமான காரியம் வேற இருக்க முடியுமா?"
"அவ என்னை எவவளவு அவமானப்படுத்தினா தெரியுமா?"
"அவ பண்ணதும் தெரியும் நீ பண்ணதும் தெரியும்!ஒரு பொண்ணை காதலிக்கிறேன்னு நம்ப வைத்து ஏமாற்றி,கடைசியில உன்னால அவ செத்தே போனாளேடா!அதுக்காக தானே தீக்ஷா உன்னை ஜெயிலுக்கு அனுப்பினா!நான் திருந்திட்டேன்,தீக்ஷாவை எனக்கு பிடித்திருக்குன்னு நீ சொன்ன வார்த்தையை நம்பி அவளை உனக்க கல்யாணம் பண்ணி வைக்க நினைத்தன் பாரு...!என்ன பண்ணாலும் என் பாவம் போகாதுடா!"
"அந்தப்பையன் நல்லா இருக்கணும் சரியான சமயத்துல வந்து எல்லாத்துக்கும் முடிவு கட்டினான்.இனிமேலாவது திருந்த பார்!!"-தீக்ஷாவின் புகைப்பத்தை வாங்கிக்கொண்டு நடந்தார் அவர்.
'அவன் எல்லாத்தையும் முடிக்கலைம்மா!ஆரம்பித்த வைத்திருக்கான்!"-என்றவனின் குரலில் குரோதமே நிறைந்திருந்தது.
குரோதம் அது வெறும் பகையை மட்டும் குறிக்கும் சொல்லா?குரோதம் என்ற சொல்லை உச்சரித்து பாருங்கள்...அச்சொல்லை சொல்லும்போது இயற்கையாக உங்கள் முகம் கொண்ட தேஜஸ் குலைந்துபோகும்.ஆம்..குரோதம் என்ற சொல்லே பாவத்தின் திறவுகோல்.
விரோதிக்கும் மனதில் பொறாமை எண்ணம் குரோதத்தை வளர்கிறது.
ஒருவரின் இயலாமை மற்றொருவருக்கு இயன்று போனால் பொறாமை துளிர்கிறது.
ஆனால் ஒன்று உறுதி!!